நீர் வீழ்ச்சியை பார்த்ததும் வந்த ஆசை.. ‘செல்பி' எடுக்க போன 2 மாணவர்களுக்கு நேர்ந்த கதி! திடீர் வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் சுற்றுலா போன இடத்தில் நீர்வீழ்ச்சியை பார்த்ததும் தடுப்புகளை தாண்டி 'செல்பி' எடுக்க 2 மாணவர்கள் சென்றனர். அப்போது திடீரென்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 2 மாணவர்களும் பாறையை பிடித்து தண்ணீரில் தத்தளித்ததும், அவர்களை போராடி மீட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில், கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

2-college-students-stranded-in-coorg-mallalli-water-falls-in-karnataka

குடகு மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மல்லல்லி நீர்வீழ்ச்சி. குடகு மாவட்டம் சோமாவார்பேட்டை அருகே அமைந்துள்ளது. தற்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று இயற்கையை ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழுந்து செல்லும் தடாகத்தில் நின்று 2 மாணவர்கள் 'செல்பி' எடுக்க முயன்று வெள்ளத்தில் தத்தளித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். இந்நிலையில் தான், அதன் பின்னணி குறித்த விவரம் வருமாறு:

ஆந்திராவை சேர்ந்தவர்கள் சந்தேஷாஷ் குமார் மற்றும் கணேஷ். இவர்கள் 2 பேரும் பெங்களூரில் தங்கி தனியார் கல்லூரியில் படிது வருகின்றனர். வாரஇறுதி விடுமுறையொட்டி அவர்கள் குடகு மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றனர். மல்லள்ளி நீர்வீழ்ச்சி சென்றனர். நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டியது. தண்ணீர் விழுந்து ஆறுபோல் செல்லும் இடத்தின் நடுவே பெரிய பாறை உள்ளது. குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் சென்றதால் அவர்கள் 2 பேரும் அந்த பாறை மீது ஏறி 'செல்பி' எடுத்தனர். தடுப்புகளை தாண்டி சென்று அவர்கள் 'செல்பி' மீது கவனம் செலுத்தினர். அப்போது திடீரென்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.

அதாவது நீர்வீழ்ச்சிக்கு மேல்பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்தில் இருந்து திடீரென்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கூடுதல தண்ணீர் ஆற்றில் வந்தது. அப்போது பாறையில் நின்று செல்பி எடுத்த 2 மாணவர்களும் வெள்ளத்தில் சிக்கினர். பாறையை பிடித்தபடி அவர்கள் உயிருக்கு போராடினர். இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று கயிறு கட்டி இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+