கடலூரை கவ்விய இருள்.. யாரந்த பரிதாப பெண்? விடிகாலையில் நெல்லிக்குப்பம் மக்கள் கண்ட காட்சி
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஒரு ஷாக் சம்பவம் நடந்து, அங்குள்ள மக்களை பெரும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூரில் தொடங்கி கடலூர் மாவட்டம் வரை பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இதுபோன்ற அத்துமீறல்கள், சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. என்ன நடந்தது திருப்பத்தூரிலும், கடலூரிலும்?
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.. அதிலும் நேற்று ஒரே நாளில் திருப்பத்தூரில் தொடங்கி நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி என அடுத்தடுத்து பெண்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூரங்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் மற்றும் டிஎஸ்பி அலுவலகம் அருகே உள்ள வீரபத்திர முதலியார் பூங்கா பகுதியில் நேற்று ஒரு கொடூரம் நடந்துள்ளது. விடியற்காலையில் தனது பிழைப்பிற்காக வீட்டை விட்டு கிளம்பிய 50 வயது மதிக்கத்தக்க பெண், அந்தப் பூங்கா பகுதியைக் கடந்தபோது, கல்நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான சரத்குமார் என்ற இளைஞர் போதை தலைக்கேறிய நிலையில் அவரை திடீரென வழிமறித்துள்ளார்.
திருப்பத்தூர் பாலியல் கொடுமை
போதை இளைஞரைக் கண்டு நிலைகுலைந்து பயத்தில் அலறியிருக்கிறார்.. ஆனால், அந்தப் பெண்ணின் வாயைப் பொத்திய அந்த நபர், நடமாட்டமில்லாத பூங்காவிற்குள் அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். விடியற்காலையில் பூங்காவில் யாரும் இல்லை என்பதால், அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொண்டுள்ளார் அந்த போதை ஆசாமி.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நெல்லிக்குப்பம் அருகே 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவராம்.
இவரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.. இரவு நேரத்தில், யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி அந்த பெண்ணின் வாயை மூடி, அருகிலுள்ள ஒரு மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பூங்காவில் மயங்கி கிடந்த பெண்
அந்த நபர் செய்த அத்துமீறலால் அந்தப் பெண் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். விடிந்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இளம்பெண் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை உறுதி செய்து, உடனடியாக நெல்லிக்குப்பம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீசார் பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆனால், இளம்பெண்ணை சீரழித்த அந்த மர்மநபர் யார் என்று தெரியவில்லை.. அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து தேடி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண் சீரியஸாக இருக்கிறாராம்.. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தலைமறைவான ஜீவா
இதேபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியிலும் ஒரு அத்துமீறல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு தனியாக இருந்த இளம்பெண்ணிடம், அதே பகுதியைச் சேர்ந்த நபர் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அத்துமீறலில் ஈடுபட்ட தமிழரசன் என்ற ஜீவா என்பவர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அதற்குள் ஜீவா தலைமறைவாகி விட்டாராம். அவரை இப்போது பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் அதிரடிப்படை
அடுத்தடுத்து பெண்களைக் குறிவைத்து நடந்துள்ள இந்த அத்துமீறல் சம்பவங்கள் ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக "சிங்கப்பெண் அதிரடி படை" இருந்தும், இந்த அளவுக்கு குற்றங்கள் நடக்கும் வரை பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு எங்கே போனது என்ற கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது...!!














Click it and Unblock the Notifications