நடு தெருவில் விட்டுட்டு போய்ட்டாங்க.. டாக்ஸியில் நடந்த சம்பவம்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகை உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் குடும்பத்தையே கதற விட்டு கொண்டிருக்கும் வைஷ்ணவி நாயக் (வாசு) நிஜத்தில் நடுத்தெருவில் தவித்து இருக்கிறார். அது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ தான் இப்போ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் அவர் கடுப்பாகி பேசியதற்கு கூட நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் சொல்லாமல் சீரியலுடன் தொடர்புபடுத்தி அவரை கலாய்க்கிறார்கள்.

நடிகை வைஷ்ணவி நாயக் எதிர்நீச்சல் சீரியலில் வாசு கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் எப்போதாவது தான் சீரியலுக்கு வருவார். ஆனால் அந்த சமயமே சீரியலுக்கு பரபரப்பு ஏற்பட்டுவிடும். ஜனனியின் தோழியாக தான் அந்த சீரியலில் அவர் நடித்திருப்பார். முதல் பாகத்திலும் வந்த சில மாதங்களில் கூட அதிக வரவேற்பு அவருக்கு கிடைத்தது. அதற்கு பிறகு தான் அவருக்கு சன் டிவியில் புதுவசந்தம் சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Ethirneechal serial actress Vaishnavi Nayak

சன் டிவியில் கிடைத்த வாய்ப்பு

இப்போது 2 சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்பதுபோல எப்போதாவது வருவார். டிஆர்பி குறைகிற சமயத்தில் வாசுவை இறக்கி விடுவார்கள். இவரும் வந்து குணசேகரனிடம் வில்லங்கமாக பேசுவார், கதிரிடம் குதர்க்கமாக பேசுவார். இதனாலேயே இந்த வாசு எங்க தான் போனாங்க? ஜனனி கஷ்டப்படுறாங்களே, இப்போ வரலாமே என்று பல நேரங்களில் ரசிகர்கள் இவரை தேடிக் கொண்டிருப்பார்கள்.

சீரியல் நடிகை வீடியோ

இது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போ நிஜத்தில் இவர் தனக்கு நடந்த மோசமான சம்பவம் பற்றி பேசி இருக்கிறார். அதில், "நான் ஓலோவில் கார் புக் பண்ணி இருந்தேன். அப்போது அந்த டிரைவருக்கு சரியான லொகேஷனை நான் அனுப்பிவிட்டேன். ஆனால் அவர் என்னை நடுத்தெருவில் இறக்கி விட்டு விட்டு இனி நடந்து போய்க்கொள்ளுங்கள் என்று திமிராக சொல்கிறார். இது எந்த வகையில் நியாயம்? இது போன்ற வாகனங்கள் ஓட்டும் சில டிரைவர்கள் சரியான இடத்தில் நம்மை கூப்பிடுவதும் இல்லை, சரியான இடத்தில் விடுவதுமில்லை.

சிலர் செய்யும் செயல்களால் நமக்கு தான் தேவை இல்லாத பிரச்சனை வருகிறது. நான் இப்போ எனக்கு நடந்த சம்பவத்தால் மன அளவில் ரொம்பவும் வருத்தப்பட்டுவிட்டேன். ஓலோ டிரைவர் என்னை நடுத்தெருவில் விட்டு போய்விட்டதால் எங்கே போவது? எப்படி போவது? என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். இதுபோல எனக்கு தான் நடந்திருக்கிறதா? அல்லது உங்கள் யாருக்கேனும் நடந்திருக்கிறதா? என்று அவர் கேட்டிருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து

அதற்கு கமெண்டில் அதிகமான ரசிகர்கள் எங்களுக்கும் இது போன்ற மோசமான சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதுவும் இரவு நேரங்களில் கூட சில டிரைவர்கள் சரியான இடத்தில் நிறுத்தாமல் எங்கேயாவது நிறுத்தி விடுகிறார்கள் என்று தங்களுடைய மனக்குமுறல்களை கொட்டி வருகின்றனர். ஆனால் இன்னும் ஒரு சிலரோ குணசேகரன் குடும்பத்தை ஆட்டி வைக்கும் வாசுவுக்கே இந்த நிலைமையா? ஒருவேளை இது குணசேகரன் சூழ்ச்சியாக இருக்குமோ? என்று சீரியல் கதையுடன் தொடர்புபடுத்தி கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இதற்கும் வைஷ்ணவி ஹார்ட்டின் பறக்க விட்டிருக்கிறார்.

ஒரு பொண்ணு தனக்கு நடந்த மோசமான சம்பவத்தை கோபத்தோடும், கடுப்பாகவும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால், இந்த நெட்டிசன்களை பாருங்களேன் இதுதான் சாக்கு என்று சீரியல் கதையுடன் தொடர்புபடுத்தி எளிதாக கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில டிரைவர்கள் செய்யும் தவறால் ஒட்டுமொத்தமாக இது போன்ற வாடகை கார்களில் போவதற்கே அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்திவிடும்.

கவனிக்க வேண்டிய விஷயம்

இன்றைக்கு பலரும் தனியாக பயணம் செய்யும்போது ஆப் மூலமாக வாடகை கார்களை முன்பதிவு செய்கிறார்கள். குறிப்பாக பெண்கள், வயதானவர்கள், இரவு நேரத்தில் வேலை முடித்து திரும்புபவர்கள் என பலருக்கும் இந்த சேவைகள் அன்றாட தேவையாகிவிட்டன.

ஆனால் பயணத்தின் நடுவில் டிரைவருக்கும் பயணிக்கும் இடையே வழி, சேருமிடம் ல்லது கட்டணம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டால் அதை எப்படி கையாள்வது என்பதுதான் முக்கியம். பயணியை பாதுகாப்பற்ற இடத்தில் இறக்கிவிடுவது பிரச்சனையை மேலும் பெரிதாக்கிவிடும்.

அதேபோல் பயணிகளும் பயண விவரங்கள், பிக்கப் மற்றும் டிராப் இடங்கள் ஆகியவற்றை முன்பே சரிபார்ப்பது அவசியம். இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் செயலியில் உள்ள அவசர உதவி அல்லது புகார் வசதியை பயன்படுத்துவதும், பயண விவரங்களை பதிவு செய்து வைத்திருப்பதும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில், டிரைவர்களுக்கும் ஏதாவது நடைமுறை சிக்கல் இருந்தால் அதை பயணியிடம் தெளிவாக பேசி, பாதுகாப்பான தீர்வை காண வேண்டியது அவசியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+