கோபி வெளியிட்ட அந்த வீடியோவால் அசிங்கப்படுத்திய ரசிகர்கள்.. காரணம் அது தானாம்..மனிதாபிமானம் பெருசு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சதீஷ், கோபி கேரக்டரில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் தான் நாய்களுக்கு உணவு வழங்கும் வீடியோக்களை வெளியிடுவதால் பலர் திட்டி வருவதாக கூறியிருக்கிறார்.
உடல்நிலை சரியில்லாத நாய்களை தெருவில் விட்டு விடாதீர்கள் என்று உருக்கமாக சதீஷ் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

பொதுவாக வில்லனாக நடிப்பவர்களை வில்லனாகவே ரசிகர்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்கள். ஹீரோவாக நடித்தால் அவர்தான் உண்மையான ஹீரோ என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரும் ரசிகர்களின் மனதில் பதிந்து இருக்கிறார். இவர் இந்த சீரியலில் பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு தனக்கு மனதிற்கு பிடித்த ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார்.
முதலில் இவரை அதிகமான ரசிகர்கள் திட்டி வருகின்றனர். ஒரு பக்கம் இவர் படும் பாடை பார்த்து இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டு இருந்தாலும், இவர் தன்னை திட்டும் ரசிகர்களுக்கு அடிக்கடி விளக்கம் கொடுத்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தினமும் குட் மார்னிங் ஃபிரண்ட்ஸ் என்று ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி அன்றைய தத்துவம் அல்லது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த மாதிரி தான் சமீபத்தில் கூட ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் வீட்டில் பாசமாக வளர்க்கும் நாய்கள் நோய்வாய்ப்பட்ட பிறகு அவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் விடுவது நல்ல விஷயம் அல்ல. அது ஒரு தவறு. அதோடு ஒரு நாயை வளர்த்தால் அதற்கு அம்மா அப்பா நாம் தான். அதனால் நாய்களுக்கு ஏதாவது நோய் வந்தால் அதற்கு உரிய மருத்துவம் வழங்குமாறு அந்த வீடியோவில் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
இது போன்ற நாய்களுக்கு உணவளித்து அதனை வீடியோவாக பதிவேற்றும் இப்போது பலர் என்னை பார்த்து ஆரம்பத்தில் காரி துப்புவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், என்னது கோபிக்கு இந்த நிலைமையா? நாய்களுக்கு உணவு வைத்தாலும் திட்டுவார்களா? என்று பலர் கருத்துக்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications