பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலக போகிறேன்.. மீண்டும் அறிவித்த கோபி.. காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இருந்து நான் விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்த பல நடிகர்கள் இவருக்கு பதில் இவர் என்று மாறிவிட்டனர். ஆனால் கதாநாயகனாக கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இவர் கதாநாயகனா? அல்லது வில்லனா? என்று குழம்பிப் போகும் வகையில் தான் இவருடைய நடிப்பு இருக்கிறது.

அதிலும் வில்லன் போல பாக்கியாவிற்கு சவால் விட்டுக் கொண்டிருந்தாலும் தன்னுடைய அம்மா, அப்பா மீது இருக்கும் பாசம் மற்றும் குழந்தைகள் மீது இருக்கும் பாசத்தை அவ்வப்போது காட்டி இவர் தான் பெஸ்ட் என்று ரசிகர்களை சொல்ல வைத்து விடுகிறார். ஆனாலும் கடந்த வருடத்தில் விஜய் டிவி அவார்டு நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த பலருக்கு விருதுகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் சதீஷ்க்கு எந்த விருதுகளும் கொடுக்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து நான் விலகப் போகிறேன் என்று சதீஷ் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதற்கு அதிகமான ரசிகர்கள் வேண்டாம் நீங்கள் சீரியலில் தொடர வேண்டும் உங்களுக்காக தான் இந்த சீரியல் பார்க்கிறோம் என்று கூறி வந்தனர். அதைத்தொடர்ந்து சேனல் தரப்பினர் மற்றும் சீரியல் தரப்பினரும் சதீஷிடம் பேச அவர் அந்த முடிவை கைவிட்டு இருந்தார்.
ஆனால் இன்று செப்டம்பர் 27ஆம் தேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சுமி தொடரை விட்டு நான் விலகும் தருணம் நெருங்கிவிட்டது என்று ஒரு கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். இவர் இரண்டாவது முறையாக சீரியலை விட்டு விலகப் போவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு அந்த பதிவில் தான் சோகமாக இருக்கும் போட்டோ ஒன்றையும் அதற்கு கீழே ஒரு பொய்யை முத்தமிடுவதை விட உண்மையிடம் அரைவாங்கிக் கொள்ளலாம் என்று எடிட் செய்திருக்கிறார்.

அதே நேரத்தில் சதீஷ் சீரியலில் இருந்து விலக வேண்டும் என்றுஎடுத்த முடிவு இப்போதைக்கு சரியானதுதான் என்று பலர் கருத்து கூறி வருகிறனர். காரணம் பாக்கியலட்சுமி சீரியலின் கதை ஆரம்பத்தில் இருந்தது போல இப்போது இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த சீரியலுக்கு தூண் போல இருந்த ராமமூர்த்தி திடீரென இறந்து போவது போன்று கதையை வைத்திருந்தனர்.
அதிலும் அவருடைய இறுதி காட்சிகளை இயல்பாக காட்டுகிறோம் என்று பல வாரங்கள் அழுகாட்சி காட்சிகளை காட்டி பார்க்கும் ரசிகர்களை வெறுப்பேத்தி வைத்திருந்தனர். இந்த முக்கியமான எபிசோடுகளுக்கு அதிகமான டிஆர்பி வரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசியில் அதிர்ச்சி தான் கிடைத்தது. அந்த வாரத்தில் டிஆர்பி அதிக அளவில் குறைந்து இருந்தது. அதிலும் கடந்த வாரத்திற்கான டிஆர்பி நேற்று வெளியான நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலை விடவும் இந்த சீரியலுக்கு டிஆர்பி குறைந்திருக்கிறது.

ராமமூர்த்தியின் மறைவிற்குப் பிறகு சீரியலில் கதை வேகமாக இல்லை. அரைத்த மாவை அரைப்பது போன்று இருக்கிறது என்று பலர் கூறும் நிலையில் கோபி இந்த சீரியலில் இருந்து விலகினால் சீரியல் முடிந்துவிடும் என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது. ஏற்கனவே சதீஷ் சீரியலை விட்டு விலகப் போகிறேன் என்று சொன்னது அந்த நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது போல இப்போது பரபரப்பை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. சதீஷ் இந்த முறை instagram பதிவோடு நிறுத்தப் போகிறாரா? அல்லது நிஜத்திலும் சீரியலில் இருந்து விலகப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications