பாக்கியலட்சுமி சீரியலில் இனி இதுதான் நடக்கப்போகிறது! ஈஸ்வரியோடு புகைப்படத்தை வெளியிட்ட கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தியின் இறப்பிற்கு பிறகு கதை எப்படி போகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அனைவரையும் அழ வைக்கும் காட்சிகள் தான் ஒரு வாரமாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் தூண் போல இருந்த ராமமூர்த்தியின் கேரக்டர் கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த வாரம் அவர் இறந்து போவது போன்று காட்சிகள் வைத்திருக்கின்றனர். அதற்குப் பிறகு இந்த வாரம் முழுக்க அவருடைய உடலைப் பார்த்து குடும்பத்தினர் அழுது கொண்டிருப்பதும் இறுதி சடங்கு செய்வதற்கு சண்டை சச்சரவுகளும் தான் நடக்கிறது.

television baakiyalakshmi serial vijay tv

ராமமூர்த்தியின் உடலுக்கு இன்னும் இறுதி சடங்குகள் செய்யவில்லை. நாளை எபிசோடில் அவருக்கு இறுதி சடங்குகள் நடக்கும். ஆனால் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மற்றும் கோபி இருவருக்கும் இடையே நீண்ட விவாதம் நடைபெற்றது. கோபி தன் தரப்பு நியாயங்களை சொல்ல, அதற்கு ஈஸ்வரி தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி இருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோ தான் இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

television baakiyalakshmi serial vijay tv

அந்த புகைப்படத்தில் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் இருக்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் வேனில் ஈஸ்வரியும் கோபியும் இருக்கும் போட்டோவை சதீஷ் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் உங்க அப்பாவுக்கு கொள்ளி வைக்க கூடாதுன்னு சொன்ன பிறகும் நீங்க உங்க அம்மாவுடன் மீண்டும் சேர்ந்தீட்டீங்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதேபோல இன்னொரு வீடியோ ஒன்றையும் சதீஸ் வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த வாரம் முழுக்க சீரியல் எல்லோரும் பாத்திருப்பீங்க என்று நினைக்கிறேன். ராமமூர்த்தியாக நடித்த எங்க அப்பா இறந்து போயிட்டாரு. இந்த கேரக்டரில் நடித்த ரோசரி அண்ணன் நிஜத்தில் ரொம்பவே பாசக்காரர். அந்த சீரியலில் தான் எனக்கு அப்பாவாக இருக்கிறார் ஆனால் நிஜத்தில் எனக்கு அவர் ஒரு நண்பராகவும், அண்ணனாகவும் தான் இருக்கிறார்.

அவருடைய காட்சிகள் முடிந்து இருக்கிறது. அவருடைய நடிப்பை பார்த்திருப்பீர்கள். எனக்கு பல விஷயங்களை சொல்லித் தந்தவர் அவர்தான். அவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என அந்த வீடியோவில் சதீஷ் பேசி இருக்கிறார். இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+