ப்ளீஸ் அங்கீகாரம் கொடுங்க..உருக்கமாக வேண்டுகோள் வைத்த கோபி.. அப்போ இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சதீஷ் உருக்கமாக வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.

நமக்காக யாராவது ஏதாவது செய்தால் அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுங்கள் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

 Baakiyalakshmi serial Gopi saying give recognition to everyone

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் அந்த கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் அந்த சீரியலில் கோபியாக நடித்து பலருடைய திட்டல்களையும் பாராட்டையும் வாங்கி வரும் சதிஷை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் சதீஷ் எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி சீரியல் அவருக்கு பெரிய திருப்புமுனையாகவும் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இருந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இவருக்கு அதிகமான பாராட்டுகளும் வரவேற்பும் இருக்கும் நிலையில் அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு அங்கீகாரத்தை கொடுங்கள். வீட்டில் நம்முடைய மனைவி நமக்கு கொடுக்கும் டீ கூட ஒரு பாசத்தில் தான் கொடுக்கிறார். அதை குடித்து பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னால் தான் அவர்களுக்கு திறமைக்கு ஒரு அங்கீகாரமாக கிடைக்கும் அதை நாம் செய்ய வேண்டும்.

நடிப்பாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி நாம் செய்யும் செயல்களுக்கு ஒரு இடத்தில் நமக்கு அங்கீகாரம் கிடைக்கும் போது அது மேலும் மேலும் நம்முடைய ஆர்வத்தை கூட்டும் அப்படித்தான் நானும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். கோபியும் ஏங்கிக் கொண்டிருக்கிறான் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

 Baakiyalakshmi serial Gopi saying give recognition to everyone

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதனால் தான் கோபி சீரியலை விட்டு விலகப் போகிறேன் என சில நாட்களுக்கு முன்பு முடிவு எடுத்து இருந்தாரா? ஏற்கனவே விஜய் டிவியில் 8வது டெலிவிஷன் விருது வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகி, வில்லி, காமெடி என பலதரப்பட்ட விருது கிடைத்திருக்கும் நிலையில், கோபிக்கு விருது கிடைக்காததனால் தான் இப்படி ஒரு முடிவெடுத்து இருக்கிறாரா? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+