பாக்கியலட்சுமி: பாக்யா பற்றி சுதாகர் சொன்ன வார்த்தை.. கோபத்தில் இனியா.. ஆகாஷ் செய்த அதிரடி.. உண்மை உடைந்தது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 14 ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா சுதாகரிடம் பாக்யாவின் ரெஸ்டாரன்ட் பற்றி கேள்வி கேட்கிறார். ஆனால் சுதாகர் பாக்யா பற்றி தவறாக பேசியதை கேட்டு இனியா அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் நித்திஷ் சுயரூபமும் வெளி வருகிறது என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் நித்திஷ் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போது இனியா சுதாகரிடம் என்னுடைய அம்மா ரெஸ்டாரண்டில் என்ன நடந்துச்சு கல்யாணத்துக்காக நீங்க கிப்ட் கொடுக்கணும்னு கட்டாயப்படுத்துனீங்களா? அம்மாகிட்ட கேட்டா அம்மா சொல்ல மாட்டேங்குறாங்க கல்யாணத்தின் பெயரில் கிப்ட் வாங்குவது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? இதுவும் வரதட்சணை தான் என்று குரலை உயர்த்திப் பேச இதனால் கோபமான நித்திஷ் என்ன பேசுற இனியா எங்க அப்பா கிட்ட நான் கூட இப்படி பேசமாட்டேன் நீ என் முன்னாடியே எங்க அப்பாட்ட குரலை உயர்த்தி பேசுற? அவர்கிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல இனியா அதிர்ச்சி அடைகிறார்.
நித்திஷ் சுயரூபம்
பிறகு சுதாகரிடம் மன்னிப்பு கேட்கிறார். அதற்கு சுதாகர் நீ என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எல்லாம் இல்ல. உங்க அம்மா என்ன நடந்ததுன்னு சொல்லலன்னா தப்பு யார் மேல இருக்குதுன்னு நீயே புரிஞ்சுக்கோ. நம்ம கம்பெனி ரூல்ஸ் படி சில குறிப்பிட்ட கிலோமீட்டர் இடையில் ஒரு கம்பெனி இருக்க வேண்டும் என்பதுதான் ரூல்ஸ் அதற்காகத்தான் நான் உன் கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க அம்மாகிட்ட பேசி இருந்தேன். ஆனால் அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
இனியா கேட்ட கேள்வி
அதுக்கு பிறகு உனக்கு கல்யாணம் என்றதும் அவங்களாக தான் கிப்டாக அந்த ரெஸ்டாரண்டை தரேன்னு சொன்னாங்க. நானும் சரின்னு சொல்லிட்டு வேறு வழி இல்லாம தான் அதை உன் பேரில் ரிஜிஸ்டர் பண்ணி நம்ம கம்பெனியுடன் இணைத்து இருந்தேன். ஆனால் அதற்குப் பிறகு பணம் வாங்கிட்டாங்க. அதுவும் லட்ச லட்சமா பணம் வேணும்னு கேட்டாங்க அவங்க கேட்ட தொகையை நானும் கொடுத்துட்டேன் என்று சொல்ல இனியா அதிர்ச்சி ஆகுகிறார்.
அதிர்ச்சியில் இனியா
அம்மா பணம் வாங்கினார்களா என்று கேட்க ஆமா உங்க அம்மாகிட்டயே நீ நேரம் இருக்கும்போது பொறுமையா கேளு என்று சொன்னதும் இனியா யோசித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பாக்கியா கடையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அந்த பகுதியின் அரசியல் பிரபலம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ரவுடி வந்து பாக்யாவிடம் சாப்பாடு வேண்டுமென்று தகராறு செய்கிறார்.
ரவுடிகளின் ரகளை
அதற்கு பாக்யா கடையை மூட போகிறோம் என்று சொல்ல அதெல்லாம் முடியாது எங்களுக்கு சாப்பாடு போடுங்க என்று வாக்குவாதம் செய்கிறார். பிறகு பாக்கியா சாப்பாடு எதுவும் இல்லை என்று சொன்னதும் பக்கத்து கடைக்கு ஆட்களை அனுப்பி முட்டை வாங்கிட்டு வரச் சொல்லி முட்டை தோசை போடுங்க என்று சொல்லிவிட்டு அங்கேயே குடிக்கிறார்கள். அந்த நேரத்தில் ஆகாஷ் போன் செய்து செல்வி மீண்டும் வரலையே என்று விசாரிக்க, நான் இப்போ வரேன் என்று செல்வி சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார்.
ஆகாஷ் கேட்ட கேள்வி
இதனால் ஆகாஷ் அங்கேயே வருகிறார். வந்ததும் அந்த ரவுடிகளிடம் ஆகாஷ் வாக்குவாதம் செய்ய அவர்கள் ஆகாஷையும் வேலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். அதற்கு பாக்கியா எதுக்காக இப்படி பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க அந்த பையனை வேலை வாங்க கூடாது என்று சொல்லிவிட்டு அவரே எல்லா வேலைகளையும் செய்கிறார். பிறகு ரௌடிகள் அங்கிருந்து கிளம்பும்போது நாளைக்கு காலையில் வருவோம் என்று சொல்கிறார்கள்.
கோபத்தில் ஈஸ்வரி
ரவுடிகள் சாப்பிட்டதற்கு பாக்கியா பணம் கேட்டதற்கு அதெல்லாம் தர முடியாது என்று திமிராக சொல்லிவிட்டு போகிறார்கள். இதனால் பாக்கியா அதிர்ச்சியில் இருக்கிறார். மறுபக்கத்தில் ஈஸ்வரி பாக்கியா 10 மணி ஆன பிறகும் வரலையே என்ற கோபத்தில் இருக்கிறார். பிறகு பாக்கியா வீட்டிற்கு வந்து கதவை தட்டும் போது ஈஸ்வரி வேணும்னே கதவை திறக்காமல் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications