பாக்கியலட்சுமி: இனியாவை வைத்து சுதாகர் போட்டோ பிளான்.. பாக்யாவிடம் ரகசியமாக நிதிஷ் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 15ஆம் தேதிக்கான எபிசோடு இனியாவின் திருமணம் நடைபெறுகிறது. அதேபோல இனியாவை வைத்து ஏமாற்றுவதற்காக சுதாகர் பிளான் போட்டு இருக்கிறார். இந்த நிலையில் கணவர் நித்திஷ் பாக்யாவிடம் உருக்கமாக பேசுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா பத்திரத்தில் கையெழுத்து போட சம்மதம் சொன்னதால் சுதாகர் வெறும் காலி பத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். அதை பார்த்ததும் பாக்கியா இதில் எப்படி கையெழுத்து போட முடியும்? இதில் எதுவுமே எழுதவில்லையே என்று கேட்கிறார். கோபியும் அதையே கேட்கிறார் அதற்கு சுதாகர் சத்தியமா உங்ககிட்ட சொன்ன வார்த்தையை தவிர மீறி எந்த வார்த்தையும் அதில் சேர்க்க மாட்டேன்.

Baakiyalakshmi Serial vijay TV

சுதாகர் நடிப்பு

கடைசி நேரத்தில் நீங்கள் கையெழுத்து போட சம்மதம் என்று சொன்னதால் இப்போதைக்கு வேறு எங்கும் பத்திரத்தை டைப் பண்ணி வாங்கிட்டு வர முடியாது என்பதற்காகத்தான் இப்படி கொண்டு வந்திருக்கிறேன் என்று சுதாகர் சமாளித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி வந்து ரிசப்ஷனுக்கு டைம் ஆயிடுச்சு எல்லாரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.

மிரட்டிய ஈஸ்வரி

அதற்கு சுதாகர் உங்க மருமகளுக்கு என் மேல சந்தேகமா இருக்கு அவங்களுக்கு நம்பிக்கை வரல என்று செண்டிமெண்டாக பேசியது ஈஸ்வரி பாக்யாவை தனியாக கூட்டிட்டு போய் ஏன் நீ கையெழுத்து போட்டுக் கொடுக்கல என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு பாக்கியா அந்த பத்திரத்தில் எதுமே எழுதல. அதில் கையெழுத்து போட சொல்லுறாரு என்று சொன்னதும் அதற்கு ஈஸ்வரி உனக்கு இனியா வாழ்க்கையை விட ரெஸ்டாரண்ட் தான் முக்கியமா? செல்வி பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறியா ஒழுங்கா கையெழுத்து போடு என்று திட்டுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கையெழுத்து போட்ட பாக்யா

பிறகு பாக்கியா கையெழுத்து போடாமல் நின்று கொண்டிருக்கும் போது இனியா சொன்ன வார்த்தையை நினைத்துப் பார்க்கிறார். இந்த வீட்டுக்காகவும் எனக்காகவும் நீ நிறைய கொடுத்துட்டோமா இதுக்கு மேல உன்னுடைய ரெஸ்டாரன்ட் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத என்று சொன்னதை நினைத்து பார்த்துவிட்டு நான் உனக்காக எது வேணாலும் விட்டுக் கொடுப்பேன் இனியா என்று சொல்லியபடியே பாக்கியா கையெழுத்து போட்டு விடுகிறார்.

ரிசப்ஷன் நடந்தது

பிறகு ரிசப்ஷன் நடக்கிறது, இனியாவும் நித்திஷ்சும் மாலை மாற்றி மோதிரம் போட்டுக் கொள்கிறார்கள். அதை தொடர்ந்து எல்லோரும் போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். பிறகு பாக்கியா தனியாக உட்கார்ந்து இருக்கும்போது எழில் என்ன ஆச்சும்மா ஏன் சோகமா இருக்க என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது எழிலுக்கு போன் வந்ததும் அவர் கிளம்பி போய் விடுகிறார்.

நிதிஷ் விளக்கம்

பிறகு பாக்யா மட்டும் தனியாக உட்கார்ந்து இருக்கும்போது அங்கு நிதிஷ் வருகிறார். அவர் பாக்கியாவுடன் என்ன ஆன்ட்டி டல்லா இருக்கீங்க என்று கேட்க, ரொம்ப டயர்டா இருக்குப்பா என்று பாக்கியா சொல்கிறார். அதற்கு அப்பா உங்களை பத்தி ரொம்ப பெருமையா சொல்லி இருக்காரு ஆன்ட்டி. நாளைக்கு எனக்கு இனியாக்கும் கல்யாணம் ஆகப்போகுது ஏதாவது அட்வைஸ் கொடுக்கறீங்களா என்று கேட்க, எனக்கு அந்த அளவுக்கு நிறைய விஷயங்கள் தெரியாது.

Baakiyalakshmi Serial vijay TV

நிதிஷ் சொன்ன விஷயம்

நான் பெரிய ஆள் எல்லாம் கிடையாது ரெண்டு பேரும் சந்தோஷமா ஒற்றுமையா இருக்கணும், விட்டுக்கொடுத்து வாழனும் இவ்வளவு நாளா இனியா குழந்தை மாதிரி இருந்துட்டா, இப்போ கல்யாணமாக போகுதுன்னு சொன்னதும் எனக்கே பிரமிப்பாகவும் நான் கஷ்டமாகவும் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது நிதிஷ் எனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லை ஆன்ட்டி, ஆனால் என்னோட பிரெண்ட்ஸ் கல்யாணத்துல பார்த்து இருக்கேன்.

Baakiyalakshmi Serial vijay TV

இனியா கேட்ட கேள்வி

அவங்க பொண்ணை எவ்வளவு மிஸ் பண்ணுவாங்கன்னு அதனால நீங்க எப்படி பார்த்துட்டீங்களோ அதைவிட அதிகமா பாத்துக்கிட்டு இருக்கேன் கவலைப்படாதீங்க என்று ஆறுதல் சொல்கிறார். மறுநாள் காலையில் இனியாவின் கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது தாலி கட்ட நேரத்தில் கூட இனியா நீ சரியா தான் இருக்கிறீயா அம்மா, இவங்க உன்கிட்ட ஏதாவது தொந்தரவு செஞ்சாங்கனா நீ இப்ப வேண்டாம்னு சொன்னா கூட நான் இந்த இடத்தில் இருந்து கிளம்பி வந்துடுவேன் என்று சொன்னதும் பாக்கியம் எதுவும் இல்லை எல்லாம் ஓகே தான் நீ சந்தோஷமா இரு அது போதும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு இனியாவிற்கு நிதீஷ் தாலி கட்டியதும் குடும்பத்தினர் எல்லாரும் ஆனந்த கண்ணீர் விடுகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+