பாக்கியலட்சுமி: நறுக்குன்னு பாக்யா கேட்ட கேள்வி.. கோபிக்கு தெரிந்த உண்மை..சுதாகருக்கு அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 24ஆம் தேதிக்கான எபிசோடில் சுதாகர் செய்த செயல் குறித்து பாக்கியா குடும்பத்தினரிடம் சொல்கிறார். இதனால் கோபி மீண்டும் சுதாகரிடம் விசாரிக்க போக அவருக்கு அங்கு அதிர்ச்சி கிடைக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா தன்னுடைய அறையில் உட்கார்ந்திருக்கும் போது சுதாகர் பேசியதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலையில் ஈஸ்வரி கோபி எழில் செழியன் என எல்லோரும் உட்கார்ந்து இனியா அனுப்பிய போட்டோக்களை பார்த்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா அங்கு வருகிறார் எதுவும் பேசாமல் போகிறார்.

ஈஸ்வரி கேட்ட கேள்வி
பாக்கியாவை பார்த்ததும் ஈஸ்வரி இனியா அனுப்பிய போட்டோக்களை பார்த்தியா என்று கேட்கிறார். அதற்கு ஆமாம் என்று சொல்லிவிட்டு பாக்கியா கிளம்ப இப்ப எதுக்கு நீ மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டு இருக்கிற? உனக்கு சந்தோஷமா இருக்கவே தெரியாதா என்று ஈஸ்வரி கேட்கிறார். அதற்கு பாக்கியா நான் எப்பவும் என் பசங்களை பத்தியே யோசிச்சிட்டு இருக்க முடியாதுல்ல? என்னை பற்றி நான் யோசிக்கணும் என்று பதில் கொடுக்கிறார்.
அதிர்ச்சியில் எழில்
அதற்கு எழில் மற்றும் செழியன் இருவரும் என்னாச்சும்மா என்று கேட்க, ஒன்றும் இல்லை என்று பாக்கியா சொல்ல, எழில் நீ இது மாதிரி இருக்க மாட்டமா ஏதாவது பிரச்சனையா என்று கேட்க, எந்த பிரச்சினையும் இல்லை என்னோட ரெஸ்டாரண்டில் இதுவரை யாரும் தொட முடியாத மைல் ஸ்டோன் தொட்டிருக்கிறது என்று சொல்ல அப்ப சந்தோஷம் தான படணும் இப்ப எதற்காக இப்படி மூஞ்ச தூக்கிக்கிட்டு அலையுற என்று ஈஸ்வரி கேட்கிறார்.
கோபத்தில் பாக்கியா
ஆமா என்னுடைய பொண்ணோட சேர்த்து ரெஸ்டாரன்ட்டையும் தாரை வார்த்து கொடுத்துட்டேன்ல்ல அதனால நான் சந்தோஷமா தான் இருக்கணும் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி உடனே ஆரம்பிச்சுட்டா இவ அவளோட பொண்ணு இனியா பெயரில் தான எழுதி வச்சிருக்க! அப்புறம் எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா கோபமாகி உங்களுக்கு அது மட்டும் தானே தெரியும், அதுக்கப்புறம் அவர் நேற்று வந்து பேசுனது எதுவும் தெரியாதுல்ல? நீங்க எல்லோரும் என்னை முட்டாள்னு நினைக்கிறீங்க.
பாக்கியா சொன்ன ரகசியம்
கடைசியா நான் சொன்னதுதான் எல்லாமே நடந்தது. அவர் வந்து ரெஸ்டாரன்ட் கேட்டது... நான் கொடுக்கலனு சொன்னதும் உடனே பொண்ணு கேட்டு வந்தாரு. அப்ப கூட உங்க யாருக்கும் அதைப்பற்றி யோசிக்க தோணல. இப்போ உங்களுக்கு அந்த ரெஸ்டாரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று என்னை துரத்திட்டாரு என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அதற்கு இப்போ நீங்க யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம், இது எல்லாம் நடக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தான். அன்னைக்கு பணம் கொடுக்கிறேன்னு சொன்னேன் ஆனா இன்னைக்கு சும்மாவே தந்துட்டீங்களே சம்மந்தின்னு கைதட்டி சிரிக்கிறாரு.
பாக்கியா பதிலடி
இதுக்கு மேல என்ன யாரும் எதுவும் சொல்லாதீங்க. குறிப்பா ஒரு நல்ல அம்மாவானு கேட்காதீங்க. எல்லோருக்கும் என்ன என்னமோ செஞ்சிட்டேன். என் பொண்ணுக்கு ரெஸ்டாரண்ட்டை கொடுத்துட்டேன் அவ்வளவுதான். எப்பவுமே ஜீரோல இருந்து ஆரம்பிப்பேன். அதே மாதிரி நான் இப்பவும் ஆரம்பிக்கிறேன். இதுக்கு மேல யாரும் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம் என்று சொல்ல, கோபி நம்ம சம்பந்தியை பார்த்தா தப்பான ஒரு ஆளு மாதிரி தெரியல என்று சொல்ல, நீங்க நம்ப வேண்டாம் நீங்க நம்பணும்னு அவசியமும் இல்லை என்று சொல்லிவிட்டு பாக்கியா கிளம்பி விடுகிறார்.
சுதாகரின் நாடகம்
அடுத்ததாக சுதாகர் வீட்டுக்கு கோபி மற்றும் செழியன் இருவரும் வருகிறார்கள். முதலில் இனியா மற்றும் நிதிஷ் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு பாக்யா ரெஸ்டாரன்ட் பற்றி சொன்னா என்று கோபி சொன்னதும், சுதாகர் உங்களுக்கு சம்பந்தி ரெஸ்டாரண்ட் பற்றி மட்டும் தான் சொன்னாங்களா? இல்ல வேற எதுவும் சொன்னாங்களா என்று கேட்க கோபி ஒன்றும் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
ஏமாற்றத்தில் கோபி
நான் ரெஸ்டாரன்ட் ப்ரோசிஜர் பற்றி பேசுவதற்காக தான் போயிருந்தேன். ஆனால் அவங்க உங்களுக்கு பிச்சை போட்டேன் என்று அசிங்கமா பேசினாங்க என்று சொன்னதும் சுதாகர் மனைவி பாக்யா மீது கோபப்படுகிறார். கோபியும் செழியனும் என்ன சொல்ல என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்கள் மனதை மாற்றும் விதமாக சுதாகர் பேசிக்கொண்டே இருக்க கோபியும் செழியனும் கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.
சுதாகர் மனைவி கேள்வி
அவர்கள் போனதும் சுதாகரிடம் அவருடைய மனைவி நீங்க இவ்வளவு பிரச்சனை நடந்ததை என்கிட்ட சொல்லவே இல்லை என்று கேட்க, நான் என்ன அந்த அம்மா மாதிரி சின்ன குழந்தை போல வீட்டில் வந்து சொல்லிக்கிட்டா இருக்க முடியும் பாத்துக்கலாம் விடு என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications