பாக்கியலட்சுமி: வேலையில் சேர்ந்த இனியா.. எழில் சொன்ன வார்த்தை.. ஈஸ்வரி எடுத்த முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் கோபியும் ஈஸ்வரியும் பாக்கியாவின் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அதே நேரத்தில் இனியாவிற்கு வேலை கிடைக்கிறது. அந்த சந்தோஷத்தில் குடும்பத்தினர் இருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபியும் ஈஸ்வரியும் கோபமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது இனியா, பாக்கியா, எழில் மூவரும் வெளியே போயிட்டு வீட்டிற்கு வருகின்றனர். அவர்களை நிற்க வைத்து இனியா எங்க போயிட்டு வர என்று கோபி கேட்க ரெஸ்டாரண்டுக்கு என்று சொல்கிறார். அதற்கு முன்னாடி எங்க போயிருந்த என்று கேட்க எழில் நான் தான் ஆகாஷ் வீட்டுக்கு இனியாவை கூட்டிட்டு போனேன் என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

எழில் சொன்ன வார்த்தை

ஈஸ்வரி எழிலிடம் கோபப்படுகிறார். அவ சொன்னா உனக்கு புத்தி இல்லையா நீதான் அவளுக்கு நல்லது சொல்லி கொடுக்க வேண்டும் ஆனால் நீ எப்படி ஆகாஷ் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று திட்டுகின்றனர். அதோடு பாக்கியாவிடம் உனக்கு இது தெரியுமா என்று ஈஸ்வரி கேட்க, அதற்கு பாக்கியா அவங்க ஆகாஷ் வீட்டுக்கு போயிட்டு ரெஸ்டாரண்டுக்கு தான் வந்தாங்க என்கிட்ட வந்து தான் சொன்னாங்க என சொல்ல, இது உனக்கு தப்பா தெரியலையா என்று ஈஸ்வரி கேட்க, இதுல என்ன தப்பு இருக்கு என்று பாக்கியா கேட்கிறார்.

இனியா கொடுத்த அதிர்ச்சி

அதற்கு ஈஸ்வரி, ஆகாஷோட அப்பா வந்து என் பையனே அமைதியா இருக்கான், உன் வீட்டு பொண்ணுக்கு இருக்க முடியாதா? அவளை நீங்க நல்லா வளர்க்கல என்று அசிங்கமா பேசிட்டு போனான் தெரியுமா என்று சொல்கிறார். உடனே கோபி இனியாவிடம் உன்னுடைய நல்லதுக்கு தான் நான் சொல்றேன். உனக்காக தான் நான் இந்த வீட்டுக்கு வந்தேன் என்றெல்லாம் சென்டிமென்ட் ஆக பேச அதற்கு இனியா ஏன் டாடி என்னால வந்தேன்னு சொல்றீங்க?

அவமானப்பட்ட கோபி

பாட்டி கூப்பிட்டதால தான் வந்தீங்க நான் உங்களை கூப்பிடவே இல்லையே என்று சொன்னதும் கோபி மற்றும் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகின்றனர். உடனே ஈஸ்வரி உன் பிள்ளைகளுக்கு நீ என்ன செஞ்சாலும் அவங்களுக்கு தெரியாது அம்மா பின்னாடியே ஓடுவாங்க. நாங்க வேணா வீட்டை விட்டு போக போறோம் என்று கிளம்புகிறார்கள்.

வீட்டை விட்டு கிளம்பிய ஈஸ்வரி

அடுத்ததாக சில மாதங்களுக்கு பிறகு என்று கதை தொடங்குகிறது. அதில் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் சாமி கும்பிட பாக்யா பூஜை செய்கிறார். இனியா அம்மாவுக்கு பண்ணி கொடுத்த சத்தியத்தில் பாதி முடிச்சுட்டேன். நல்லபடியா படிச்சு பாஸ் ஆகிட்டேன். அதே மாதிரி இன்னைக்கு இன்டர்வியூல எனக்கு வேலை கிடைச்சுட்டா என்னுடைய முழு சத்தியத்தையும் நான் காப்பாத்திடுவேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

பாக்யா குடும்பத்துக்கு குட் நியூஸ்

பிறகு எல்லோரும் இனியாவுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லி இண்டர்வியூல நீ செலக்ட் ஆயிடுவ என்று சொல்லி அனுப்புகிறார்கள். பாக்கியா உங்க அப்பாகிட்டயும் பாட்டி கிட்டயும் சொல்லிட்டியா என்று கேட்க, நான் செலக்ட் ஆன பிறகு சொல்லிக்கிறேன் என்று சொல்கிறார். அடுத்ததாக இனியா கிளம்பும்போது நான் கொண்டு விடவா என்று எழில் கேட்க, நான் ரிப்போர்ட்டர் ஆகிவிட்டால் எல்லா இடத்துக்கும் தனியா தானே போனும். அப்போ உன்கிட்ட வந்து துணைக்கு கூப்பிட முடியுமா? அதனால இப்பவே நான் தனியா போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

இனியாவின் தன்னம்பிக்கை

பிறகு இனியா பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது நிற்கிறார். அப்போது இப்போதான் உன்னை ஸ்கூல்ல கொண்டு விட்ட மாதிரி இருந்தது. இப்போ இவ்வளவு வளர்ந்துட்டே என்று பாக்கியா எமோஷனலாக பேச, இனியா ரொம்ப தேங்க்ஸ் மா எல்லாத்துக்கும் காரணம் நீதான். என்னோட கடமையை நான் செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறினாள் என்று சொல்ல, பாக்கியா இனியாவுக்கு முத்தம் கொடுத்து வழி அனுப்புகிறார்.

ஈஸ்வரியின் புலம்பல்

நான் இனி ரிப்போர்ட்டரா தான் இந்த வீட்டுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் ஈஸ்வரி தனியாக ஒரு வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது தண்ணீர் தேவை பாக்கியா என்று கூப்பிடுகிறார். பிறகு அந்த வீட்டை விட்டு வந்து இத்தனை மாதம் ஆகிவிட்டது இன்னமும் பாக்கியா ஞாபகம் தான் வருது என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

மகிழ்ச்சி செய்தி

அந்த நேரத்தில் ஹாலின் பெல் சத்தம் கேட்க, யார் என்று பார்க்கும்போது இனியா வருகிறார். இனியாவிடம் உங்க அம்மாவிடம் சொல்லிட்டு வந்தியா எப்படி வந்தாய் என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போது இனியா தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை சொல்கிறார். அப்போது கோபியும் அங்கு இருக்கிறார். கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் சந்தோஷப்படுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+