பாக்கியலட்சுமி: பாக்யாக்கு வந்த அதிர்ச்சி செய்தி.. வில்லங்கமாக முடிவெடுத்த ஈஸ்வரி.. மனம் மாறும் கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 27ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு பெரிய பிரச்சனை வருகிறது. அதே நேரத்தில் இனியா விஷயத்தில் ஈஸ்வரி முக்கிய முடிவு எடுக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியா வேலைக்கு கிளம்பி கொண்டிருக்க பாக்யா ரூமுக்கு வருகிறார். அப்போது டிரஸ் எப்படி இருக்கிறது என்று இனியா கேட்டதும் சூப்பரா இருக்கு என்று பாராட்டிவிட்டு ஒரு ஹேண்ட் பேக் கிஃப்ட் கொடுக்கிறார். அதை பார்த்து இனியா சந்தோஷப்படுகிறார். அப்போது ஒரே ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும் நான் உன் சம்பளம் எவ்வளவு என்று கேட்க மாட்டேன் செழியனும் எழிலும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. நீயும் சொல்ல வேண்டாம். ஆனா தேவையில்லாத செலவு அதிகமா பண்ணாத என்று அட்வைஸ் செய்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

வேலைக்கு கிளம்பிய இனியா

அதற்கு இனியா நான் உன் பொண்ணு அம்மா எல்லாமே பார்த்து பார்த்து தான் செய்வேன் என்று சொல்லிக் கொண்டு இருவரும் கீழே வருகிறார்கள். அப்போது அம்மா வாங்கி கொடுத்த கிப்ட் எல்லாரிடமும் காட்ட எல்லோரும் இனியாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். மறுபக்கம் கோபி போனில் பேசிக் கொண்டிருக்கிறார் காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறக்க பாக்யாவில் நிற்கிறார்.

கோபி வீட்டில் பாக்கியா

பாக்யாவை உள்ளே வரவைத்து என்ன விஷயம் என்று கேட்க அத்தையை பார்க்க வந்தேன் என்று பாக்யா சொல்ல ஈஸ்வரியின் ரூமுக்கு கோபி அனுப்பி வைக்கிறார். இப்போது உங்களுக்கு முதுகு வலின்னு தெரிஞ்சதால தான் நான் வந்தேன் என்று பாக்கியா சொல்ல, எனக்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல மனசு சரியில்ல நீங்க எல்லாரும் சேர்ந்து என்னையும் என் பையனையும் வெளியே அனுப்பிட்டிங்க. எனக்கு பிறகு அவர யாரு பாத்துக்குவா என்று ஈஸ்வரி சொல்ல, அதற்கு பாக்கியம் நீங்க வீட்டுக்கு வாங்க என்று கூப்பிடுகிறார்.

ஈஸ்வரி சொன்ன வார்த்தை

அதற்கு ஈஸ்வரி, நான் வரல அன்னைக்கு போறேன்னு சொல்லும்போது ஜாடை மாடையாக சரினு சொன்னியே என்று சொல்ல, அன்னைக்கு இருந்த சூழ்நிலை வேற, நீங்க இப்பவே வீட்டுக்கு வரணும்னு இல்லை எப்ப வேணாலும் வீட்டுக்கு வாங்க என்று சொல்லிவிட்டு வந்து சென்று விடுகிறார். மறுபக்கத்தில் எழில் அமிர்தா செழியன் ஜெனி எல்லோரும் பேசி கொண்டிருக்கும் போது பாக்யாவிடம் பாட்டி எப்படி இருக்காங்க என்று கேட்கிறார்கள்.

ரிப்போர்டரான இனியா

வழக்கம் பல வரும் முதுகு வலி தான் என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி வருத்தப்பட்டதையும் சொல்கிறார். அந்த நேரத்தில் போனில் பாக்யா நியூஸ் சேனல் பார்க்குமாறு இனியா ஒரு மெசேஜ் அனுப்ப எல்லாரும் டிவி பார்க்கிறார்கள். அப்போது இனியா ரிபோர்ட்டராக பொதுமக்களிடம் கேள்வி கேட்பது போன்ற வீடியோவை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.


சந்தோஷத்தில் ஈஸ்வரி

மறுபக்கம் கோபியும் ஈஸ்வரியும் இந்த வீடியோவை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி இந்த வேலை பாதுகாப்பாக இருக்குமா என்று கேட்க, நல்ல வேலை அம்மா எப்பவுமே கூட ஒரு டீம் இருந்துட்டு இருப்பாங்க என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செழியன் வர ஈஸ்வரி செழியனிடம் செல்வி பையன் பெயில் ஆயிட்டானே தெரியுமா? என்று கேட்க, அதைத்தான் சொல்ல தான் பாட்டி நானும் வந்தேன் என்று செழியனும் சொல்கிறார்.

இனியாவிற்கு திருமண ஏற்பாடு

இனியா அதான் கொஞ்சம் அப்செட்டில் இருக்கா என்று செழியன் சொல்ல கோபியும் அங்கு வந்துவிடுகிறார். பிறகு நடந்த விஷயங்களை கோபியிடம் சொல்ல அப்படியா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் இனியாவிற்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று ஈஸ்வரி முடிவெடுக்கிறார். முன்னாடி தான் அவ சின்ன பொண்ணு படிச்சிட்டு இருக்கான்னு சொன்னா இப்போ அவ வேலைக்கு போறா அதனால இப்போ நல்ல பையனை பாக்கணும் என்று சொல்ல, கோபியும் நல்ல பையனா பாக்குறேன் என்று சொல்கிறார்.

ரெஸ்டாரண்டுக்கு வந்த ஆபத்து

அதோடு செல்வியை நம்ம வீட்டுக்கு வேலைக்கு வரக்கூடாதுன்னு சொன்னேன். ஆனா பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலைக்கு வச்சு இருக்கா என்று கோபப்படுகிறார். மறுபக்கத்தில் பாக்கியா ரெஸ்டாரண்டில் செல்வியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சிலர் ரெஸ்டாரண்டுக்குள் வந்து இந்த இடம் சரியாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்ததும் பாக்கியா யார் என்று விசாரிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+