பாக்கியலட்சுமி: கோபியிடம் வசமாக சிக்கிய சுதாகர்.. ஆகாஷிடம் பாக்யா கேட்ட கேள்வி.. பரபரப்பான சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 30ஆம் தேதிக்கான எபிசோடில் சுதாகர் செய்த செயலை பார்த்து கோபிக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் கடைசியில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்து விட்டது. இரண்டு ரெஸ்டாரண்டையும் இழந்த பாக்கியா செல்வி வீட்டிற்கு சென்று இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி சுதாகரை சந்தித்து ரெஸ்டாரண்ட் பற்றி பேசுவதற்காக போயிருக்கிறார். கோபி தயங்கி தயங்கி பேசுவதை பார்த்ததும் சுதாகருக்கு சந்தேகம் வருகிறது. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி நீங்க பாக்யாவின் முதல் ரெஸ்டாரண்டையும் வாங்கிட்டீங்கன்னு பாக்கியா சொல்லுறா என்று சொல்ல, அதற்கு சுதாகர் அந்த ரெஸ்டாரன்ட் எங்க இருக்குன்னு எனக்கு தெரியாதே நான் அப்படி எல்லாம் வாங்கல என்று சொல்கிறார்.

கோபிக்கு சந்தேகம்
ஆனாலும் தன்னுடைய மேனேஜருக்கு போன் செய்து விசாரிப்பது போன்று விசாரித்துவிட்டு நாங்கள் எந்த ஒரு புது ரெஸ்டாரண்டையும் வாங்கவில்லை. சம்மந்தி என் மீது கோபத்தில் இருப்பதால் என்னை பற்றி தப்பு தப்பா பேசிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன் என்று பாக்யா மீது பழியை போட்டு விடுகிறார். இதனால் கோபிக்கு சந்தேகம் வருகிறது பிறகு சரி என்று கோபி அங்கிருந்து கிளம்புகிறார்.
செல்வியின் வருத்தம்
மறுபக்கத்தில் பாக்கியா செல்வி வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கு செல்வியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது இனி அடுத்து என்ன பிசினஸ் செய்யலாம் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஆகாஷ் வருகிறார். ஆகாஷ் பாக்யாவிடம் நல்லா இருக்கீங்களா என்று கேட்டுவிட்டு தான் புதியதாக பார்ட் டைம் ஜாப் ஒன்றில் சேர்ந்து இருப்பதாக சொல்கிறார்.

ஆகாஷ் கேட்ட கேள்வி
படித்துக் கொண்டே பார்ட் டைம் ஜாப்பில் வேலை பார்த்தால் தான் குடும்பத்தை ஓட்ட முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது செல்வி நம்முடைய ரெஸ்டாரன்ட் வேலை வேற இல்ல, அதனால தான் நான் என் பையனை வேலைக்கு விட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்போது பாக்கியா நீ வாழ்க்கையில் நல்லா வருவ ஆகாஷ் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆகாஷ் இனியா எப்படி இருக்கா ஆன்ட்டி என்று கேட்க, அவ நல்லா இருக்கா என்று பாக்கியா சொல்கிறார்.
கோபி பார்த்த காட்சி
ஒரு நிமிடம் ஆகாஷ் முகம் வாடினாலும் பிறகு சமாளித்து அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அடுத்ததாக கோபி காரில் வந்து கொண்டிருக்கும் போது பாக்கியா சொன்னதையும், சுதாகர் சொன்னதையும் நினைத்து பார்த்துக் கொண்டே வருகிறார். அந்த நேரத்தில் பாக்யாவின் ரெஸ்டாரண்டில் சுதாகர் கார் நிற்கிறது. இதனால் கோபி அதிர்ச்சியாகி, ரெஸ்டாரண்டுக்கு உள்ளே போய் பார்க்க அங்கு சுதாகர் பாக்யாவின் ரெஸ்டாரன்ட் ஓனரிடம் கைக்குலுக்கி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்த்ததும் கோபி அதிர்ச்சி ஆகிறார்.
ஏமாறும் கோபி
பிறகு சுதாகரிடம் இது பற்றி விசாரிக்க சுதாகர் நீங்க என் மீது ஒரு குற்றச்சாட்டு வச்சீங்க அதனால இந்த ரெஸ்டாரண்டை யாரு வாங்கி இருக்கான்னு விசாரிக்கிறதுக்கு தான் நான் இங்க வந்தேன். இந்த ரெஸ்டாரண்ட் ஓனருக்கோ நான் யாருன்னு தெரியாது. இதை வாங்கிய நபருக்கு நான் யாருன்னு தெரியாது என்று சமாளித்து விடுகிறார் இதை உண்மை என்று கோபியும் நம்பி விடுகிறார்.

பாக்கியா பதிலடி
பிறகு வீட்டிற்கு வந்து இதைப் பற்றி சொல்கிறார். அந்த நேரத்தில் பாக்யா வீட்டிற்கு வர வழக்கம் போல சுதாகருக்கு சப்போர்ட்டாகவே ஈஸ்வரி பாக்யாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் கோபமான ஈஸ்வரி நீங்க யாரும் என்னை நம்பலானாலும் பரவாயில்லை ஆனால் நான் அந்த ஆளை நம்ப மாட்டேன் அவர் மோசமானவர்தான் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
வேலை ஆட்களின் வருத்தம்
மறுநாள் காலையில் ரெஸ்டாரண்டில் தன்னுடைய பொருள்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரெஸ்டாரண்டில் வேலை பார்ப்பவர்கள் எங்களுக்கு இனி வேலை இல்லை என்பதால் என்ன பண்ண என்று ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications