பாக்கியலட்சுமி: சுதாகரின் ரெஸ்டாரண்ட் சூழ்ச்சியை தெரிந்த இனியா.. வெகுண்டு எழுந்த கோபி.. பாக்யாவுக்கு புது பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் ரெஸ்டாரண்டை அபகரிக்க சுதாகர் போட்ட பிளான் எல்லாம் இனியாவிற்கு தெரிய வந்திருக்கிறது. இனியா இந்த ரகசியங்களை கோபியிடம் போட்டுக் கொடுக்க, இதனால் கோபி கோபத்தில் இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா ஹோட்டலில் எல்லோருக்கும் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கவுன்சிலரை கட்சியில் இருத்து தூக்கிட்டாங்க என்று செல்வி ஓடி வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு நம்ம ஹோட்டலில் நடந்த பிரச்சனையால் தான் அவரை தூக்கிட்டாங்கன்னு சொல்லுறாங்க, என்ன பண்ண என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அங்கு கவுன்சிலர் வந்து நிற்கிறார்.

கவுன்சிலர் வாக்குவாதம்
கவுன்சிலர் பாக்யாவிடம் கோபமாக பேசுகிறார். நான் 23 வருஷமா கட்சியில் இருக்கிறேன் இப்போ உன்னால கட்சியிலிருந்து என்னை தூக்கிட்டாங்க என்று கோபப்பட, அதற்கு பாக்கியா என்னால உங்களை கட்சியிலிருந்து தூக்கல, உங்களை கட்சியில் இருந்து தூக்குனதுக்கு காரணம் நீங்க செஞ்ச வேலை. தான். நான் உங்களை கட்சியில் இருந்து தூக்க சொல்லி சொல்லவே இல்லையே என்று சொன்னதும், கவுன்சிலர் நீ நல்லவன் மாதிரி நடிக்காத என்ன கட்சியில் இருந்து வெளியே அனுப்புனதுக்கு நீ மட்டும் தான் காரணம். இனி உனக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு என்று சொல்லிவிட்டு கோபமாக அங்கிருந்து கிளம்புகிறார்.
இனியாவுக்கு தெரிந்த உண்மை
மறுபக்கத்தில் இனியாவின் வீட்டில் சுதாகர் பாக்யாவின் முதல் ரெஸ்டாரண்டை தன்னுடைய பெயருக்கு மாற்ற வக்கீலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதை எல்லாம் இனியா கேட்டுவிட்டு சுதாகரிடம் வாக்குவாதம் செய்கிறார். நீங்க அம்மாவுடைய இரண்டாவது ரெஸ்டாரண்ட்டை மட்டும்தான் வாங்கினீங்கன்னு எனக்கு தெரியும் ஆனா முதல் ரெஸ்டாரண்டையும் பிளான் பண்ணி வாங்கி இருக்கீங்க என்று கோபப்பட, அதற்கு நித்திஷ் அப்பா கிட்ட இப்படியெல்லாம் பேசாத உள்ள போ என்று அதட்டுகிறார்.
சுதாகர் உடைத்த ரகசியம்
அதற்கு சுதாகர் உங்க அம்மாவுடைய முதல் ரெஸ்டாரண்ட்டை நான் தான் வாங்கினேன்னு உங்க அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும். இப்ப உங்க அம்மா நடத்திக்கிட்டு இருக்குற ஹோட்டல்லையும் எப்ப மூடுவாங்கன்னு கேட்டு சொல்லு என்று சொன்னதும் இனியா அதிர்ச்சியில் இருக்கிறார். மறுபக்கத்தில் இனியா பாக்யா வீட்டிற்கு வந்து கோபமாக இருக்க, ஈஸ்வரி என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
இனியா சொன்ன விஷயம்
ஆனால் இனியா ஈஸ்வரியிடம் எதுவும் சொல்லாமல் இருக்கிறார். பிறகு பாக்யாவிடம் உன்னுடைய முதல் ரெஸ்டாரண்டையும் என்னுடைய மாமனார் தான் வாங்கி இருக்கிறார் என்று எனக்கு இப்போது தெரியும் என்று சொன்னதும் பாக்கியா, அது நடந்து முடிந்த விஷயம் அதை பற்றி இனி பேச ஒன்னும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக இனியா கோபியிடம் இந்த விஷயத்தை சொன்னதும் கோபி அதிர்ச்சியாகிறார்.
அதிர்ச்சியில் கோபி
அதோட நீங்க அம்மா அவ்வளவு சொன்ன பிறகும் அவங்க சொன்னதை நம்பாமல் என் மாமனார் சொன்னதை நம்புனீங்களா என்று கேட்க, அதற்கு கோபி அந்த நேரத்தில் எனக்கு அவரு சொன்னது தான் உண்மை என்று தோன்றி விட்டது என்று சொல்கிறார். அதற்கு இனியா எனக்கு அந்த வீட்டில் இருக்கவே புடிக்கல, அவருக்கு அம்மா ரெஸ்டாரண்ட் நடத்துவதே பிடிக்கலையாம். அதனால அவங்கள வளர விடாமல் பண்ணனும்னு இப்படி பண்ணுனேன்னு என்கிட்டயே சொல்லுறாரு என்று சொன்னதும், கோபி நான் சுதாகரிடம் பேசுகிறேன் என்று சுதாகர் வீட்டிற்கு வருகிறார். அங்கு சுதாகரிடம் பாக்யாவின் ரெஸ்டாரண்ட் பற்றி விசாரிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications