பாக்கியலட்சுமி: கோபி கொடுத்த அதிர்ச்சி.. மனம் நொந்த பாக்யா.. ஈஸ்வரியால் அடுத்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 4ஆம் தேதிக்கான எபிசோடில் எழில் மற்றும் செழியன் இருவரும் குடும்பத்தோடு பாக்யா வீட்டிற்கு வருகிறார்கள். அதனால் பாக்யா கஷ்டப்படுகிறார். அதே நேரத்தில் கோபிக்காக ஈஸ்வரி குடும்பத்தில் பிரச்சனை செய்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டுக்கு வந்த கோபி செழியனும் எழிலும் வீட்டுக்கு திரும்ப வரப் போகிறார்கள் என்று சொன்னதும் ஈஸ்வரியும் இனியாவும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் பாக்கியா எதுவும் பேசாமல் எதையோ யோசித்தப்படி அங்கிருந்து போய் விடுகிறார். அதனால் கோபி பாக்யாவிற்காகத்தான் நான் இந்த விஷயத்தை செஞ்சேன் ஆனா பாக்கியாவிற்கு சந்தோஷம் இல்லையா? எதற்காக இப்படி போறா என்று கேட்க அதற்கு இனியா டாடி நான் மேல போய் படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு போகிறார்கள்.

Baakiyalakshmi Serial vijay TV

பிறகு கோபி ஈஸ்வரியிடம், பாக்கியா எந்த ரியாக்ஷனும் இல்லாமல் போறா? என்று கவலைப்படுகிறார். அதற்கு ஈஸ்வரி அவளுக்கு சந்தோஷமா தான் இருக்கும் ஆனாலும் அதை வெளியே காட்டாம போயிட்டா. அதுபோல அவளுக்கு அடுத்தவங்க எதுவும் பண்ணினாலும் பிடிக்காது. தானே எல்லா வேலையும் பண்ணனும் என்று நினைப்பா.

அதிலும் குறிப்பாக நீ பண்ணுனா அவளுக்கு சுத்தமா பிடிக்காது. எந்த நல்லது செஞ்சாலும் அதை தான் மட்டும் தான் செய்யணும் என்று நினைப்பா. அதனால் தான் இப்போ எதுவும் பேசாமல் போகிறா என்று திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு பாக்யா சோகமாக வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது செல்வி வீட்டிற்கு கிளம்பி வருகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஸ்டாலின் நிஜ மனைவி இந்த பிரபலம் தானா? வதந்திகளுக்கு பதிலடி பதிவு
செல்வியை பார்த்ததும் பாக்கியா சாப்பாடு எடுத்துக்கிட்டியா என்று விசாரிக்க, செல்வி எல்லாம் எடுத்துகிட்டேன். நான் உன்கிட்ட கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசவா என்று பாக்யா பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். அப்போது பாக்கியா கல்யாணம் ஆனபோதும் சரி இப்போதும் சரி, கோபி என்ன பண்ணினாலும் மத்தவங்களுக்காக என்ன பிரச்சனை வரும் என்று யோசிக்கிறதே கிடையாது.

செழியன் அவருடைய மாமனார் பிசினஸை பார்த்துட்டு சந்தோசமா இருக்கான். அதுபோல எழிலும் பட வேலையை பார்த்துட்டு சந்தோஷமா இருக்கான். அவங்க அவங்க பிரச்சனையை அவங்க அவங்க தான் தீர்த்திட்டு இருக்காங்க. ஆனா இங்க ஒரே குடும்பத்தில் இருக்கணும்னு அவங்க பிரச்சினை குடும்ப பிரச்சனையா மாறும்.

எல்லாரும் ஒரு விஷயம் சொல்லுவாங்க, குழப்பி விடுவாங்க அதான் நடக்கும். எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு யாரு சொல்றது? அப்படி எல்லாம் இல்ல தனித்தனியா இருந்தாலும் நிம்மதியா சந்தோஷமா இருக்கணும். அது மட்டும் அல்லாமல் இத்தனை நாளா இனியா மட்டும் இருந்தா அதனால நான் பொறுமையா எழுந்து சமைச்சேன். இப்ப வயசு ஆகுது கொஞ்சம் நேரம் நின்று கொண்டிருந்தால் கூட கால் வலிக்குது.

Baakiyalakshmi Serial vijay TV

பத்து மணிக்கு மேல கண்ணு முழிச்சிருக்க முடியல தூக்கமா வருது. இப்ப எல்லாரும் வந்துட்டா சீக்கிரமா எழுந்திருக்க வேண்டியது இருக்கும். அதனால எனக்கு தான் வேலை அதிகமாகும். இதை நான் சொல்றதால என் பசங்களுக்கு சமைச்சு போடுறது கஷ்டம் என்று நினைக்கல. என்னோட உடம்பு பத்தி தான் பேசிட்டு இருக்கிறேன். இவரு இப்ப பசங்க திரும்ப வரதுக்காக போராடினவரு அவங்க வந்ததுக்கு அப்புறம் ஏதாவது செய்வாங்கன்னு நினைக்கிறியா ஒன்னும் செய்ய மாட்டாரு.

ஆனால் ஏதோ சாதிச்ச மாதிரி நெஞ்ச நிமித்துக்கிட்டு நடப்பாரு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது திடீரென எட்டிப் பார்க்கிறார். என்ன ஆச்சு என்று செல்வி கேட்க, நான் என் மனசுல இருக்குற எல்லாம் சொல்லிட்டு இருக்கிறேன் இதை யாராவது கேட்டாங்கன்னா நீ நல்ல தாயே இல்லைன்னு சொல்லுவாங்க என்று சொல்கிறார்.

அதற்கு செல்வி நம்ம நல்ல அம்மாவா தான் இருக்கோம். ஆனா அதை இவங்க கிட்ட நிரூபிக்கிறது தான் கஷ்டமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா இவங்கள மீண்டும் வீட்டுக்கு வர வைக்க போறேன் என்பதை முன்னாடியே சொல்லி இருந்தா நான் வேண்டான்னு சொல்லி இருப்பேன். இப்போ சொன்னா தப்பா ஆயிடும் என்று சொல்கிறார்.

மறுநாள் காலையில் பாக்கியா கிச்சனில் இருக்கும் போது செல்வி எழில் மற்றும் செழியன் ரூமை கிளீன் பண்ணி வைக்கிறார். பிறகு சாப்பாடு வேலைகள் செய்து கொண்டிருக்கும்போது செழியன் ஜெனியையும் குழந்தையும் கூட்டிக்கொண்டு வருகிறார். பிறகு பாக்கியா குழந்தையை கொஞ்சி விட்டு சமையல் செய்ய தொடங்குகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

அப்போது ஜெனி நான் உதவி செய்றேன் என்று காய்கறி கட் பண்ணி கொடுக்கிறார். அப்போது தூங்கிக்கொண்டே இருக்கிறார். அதற்கு செல்வி என்ன ஆச்சு ஜெனி என்று கேட்க, குழந்தை 3 மணிக்கு தான் தூங்கிருச்சு அதனால என்னால சரியா தூங்க முடியல. வீட்ல டெய்லி நல்லா தூங்கிட்டு 11 மணிக்கு தான் முழிப்பேன். ஆனா இங்க வர்றதுக்காக சீக்கிரமா முழிச்சிட்டு வந்ததுனால எனக்கு தூக்கம் வருது என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா நீ போய் தூங்கு என்று சொல்ல, வேண்டாம் நான் அமிர்தா வந்த பிறகு போறேன் என்று ஜெனி சொல்கிறார். பிறகு எழில் மற்றும் அமிர்தா வருகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+