பாக்கியலட்சுமி: பாக்யா கஷ்டத்தை பார்த்து கோபி ஃபீல்.. எழில் சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 7 ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியா புதியதாக தொடங்கி இருக்கும் ஹோட்டலை பார்த்து கோபி ஃபீல் பண்ணுகிறார். அதே நேரத்தில் பாக்கியாவிற்காக எழில் முக்கிய முடிவெடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா செல்வியுடன் சேர்ந்து ஓனருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வாடகை பணத்தையும் கொடுக்கிறார். பிறகு அக்ரிமெண்ட் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு ஓனர் போனதும் பாக்கியா அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது செல்வி ஏற்கனவே டோக்கன் அட்வான்ஸ் கொடுத்ததற்கே மாமியார் அவ்வளவு பேசுனாங்க இப்போ நீ ஹோட்டலுக்கு வாடகை வரைக்கும் கொடுத்துட்ட, இனி என்ன சொல்லுவாங்களோ என்று கேட்க, அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என பாக்கியா சொல்கிறார்.

ஈஸ்வரி சொன்ன வார்த்தை
மறுபக்கத்தில் வீட்டில் ஈஸ்வரியும், கோபியும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி பாக்கியாவிடம் கொடுத்த அட்வான்ஸை திருப்பி வாங்கிட்டு வர சொல்லி இருக்கிறேன். இதையும் வாங்கிட்டு வராளா இல்ல அந்த கடைக்காரர் அட்வான்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொல்லி ஏமாற்றப் போகிறாரா என்று தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாக்யா வருகிறார்.
ஈஸ்வரிக்கு அவமானம்
உடனே பாக்யா டோக்கன் அட்வான்ஸ் வாங்கிட்டியா என்று ஈஸ்வரி கேட்க, இல்லை என்று பாக்கியா சொல்கிறார். ஏன் ஏமாத்திட்டாங்களா என்று ஈஸ்வரி கேட்க, நான் தான் அட்வான்ஸை கேட்கவே இல்லையே என்று பாக்யா சொன்னதும் அப்போ நீயே கூப்பிட்டு கொடுத்துட்டு வந்துட்டியா என்று ஈஸ்வரி கேட்க, இல்லை நான் தான் ரெஸ்டாரண்ட்டை திறக்க போகிறேனே அதனால அட்வான்ஸ் எதுக்கு திருப்பி வாங்கணும் என்று கேட்டதும் ஈஸ்வரி எழில் மற்றும் செழியனை கூப்பிடுகிறார்.
ஈஸ்வரியின் கோபம்
நான் அவ்வளவு சொல்லியும் உங்க அம்மா அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்திருக்கிறா, அந்த ஹோட்டலை நடக்க போறாளாம் என்று சொல்ல, செழியன் எதுக்கும் இப்படி பண்ணிட்டு இருக்குற என்று கேட்கிறார். எழில் கொஞ்ச நாள் அமைதியாக இருமா இதைவிட நல்ல ரெஸ்டாரண்ட் வந்தா பண்ணலாம்னு சொன்னேனே என்று சொல்கிறார். அப்போது கோபி எழில் சொல்றது சரிதான் இதைவிட பெரிய ரெஸ்டாரன்ட் பாத்துக்கலாம் என்று சொல்ல, பாக்கியா எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.
மிரட்டிய செழியன்
அப்போது ஈஸ்வரி தலையில் நீயே மண்ணை அள்ளி போட்டா கூட யாரும் என்னன்னு கேட்கக்கூடாது என்று நினைக்கிறாயா என்று கோபப்படுகிறார். அதோடு இனியாவோட மாமனார் வீட்டில் கடை நடத்துனா எப்படி நினைப்பாரு? அது இனியாவுக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் என்று கேட்கிறார். செழியன் ஜெனி வீட்ல உன்னை பத்தி என்னம்மா நினைப்பாங்க? நீ அந்த இட்லி கடை நடத்தினால் உனக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் வருமா? அதைவிட நான் அதிகமாக கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.
பாக்கியாவின் பதிலடி
அதற்கு பாக்கியா எனக்கு இனியா மாமனார் என்ன சொல்லுவாரு? ஜெனி அம்மா வீட்டுல என்ன நினைப்பாங்கன்னு யோசித்தா என் மனசுல இருக்கிறதை என்னால் செய்ய முடியாமல் போய்விடும். என்னால் வேலை செய்யாமல் காலம் ஒரு முழுக்க இருக்க முடியாது. நீங்க என் மேல அக்கறை காட்டுறது எனக்கு புரியுது ஆனா இந்த விஷயத்தில் என்னை கட்டாயப்படுத்தாதீங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
பாக்யா செய்த வேலை
இதனால் ஈஸ்வரி இவ நடுத்தெருவில் நிற்பது போல இந்த குடும்பத்தையும் நிற்க வைக்காமல் விடமாட்டா போல என்று திட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பாக்யா ரெஸ்டாரண்டில் பெயிண்ட் அடிக்கும் நபரை வர சொல்லி அவரிடம் பேச அவர் 30000 ஆகும் என்று சொல்கிறார். பிறகு பாக்யாவும் செல்வியும் ரெஸ்டாரண்டை கிளீன் பண்ணி பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் கோபி காரில் இதையெல்லாம் பார்த்துவிட்டு செல்கிறார்.
கோபி கேட்ட கேள்வி
பிறகு இரவு பாக்கியா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கோபி வந்து நிற்கிறார். அப்போது அத்தை போய் தூங்கிட்டாங்க என்று பாக்கியா சொல்ல, இல்ல நான் உன்கிட்ட தான் கொஞ்சம் பேசணும் என்று சொல்கிறார். என்ன விஷயம் என்று பாக்கியா கேட்க, நீ ரெஸ்டாரணட் தொடங்கி இருக்கிற அதுவும் மெயின் ஏரியாவில் இல்லையே என்று சொல்ல, அதற்கு பாக்கியா ஏற்கனவே அங்க மெஸ் நடத்தின இடம் என்று ஓனர் சொல்லி இருக்காரு என்று சொல்ல, அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க என்று கோபி சொன்னதும் அக்கம் பக்கத்தில் விசாரிச்சேன் என்று பாக்கியா சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications