பாக்கியலட்சுமி: பாக்யாவுக்கு புதியதாக வந்த வில்லன்.. சுதாகருக்கு இனியா கொடுத்த அதிர்ச்சி.. நிதிஷ் சுயரூபம் உடைபட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் சுதாகருக்கு இனியா சரியான பதிலடி கொடுக்கிறார். அதே நேரத்தில் பாக்கியா தொடங்கும் புது பிசினஸிலும் அவருக்கு புது எதிரி வருகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா ரெஸ்டாரண்ட் தொடங்குவது பற்றி சுதாகர் செழியனிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது நாம ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மேலேதான் போக வேண்டுமே தவிர கீழே போகக்கூடாது. ஆனால் இப்போ உங்க அம்மா எடுத்து இருக்கிற முடிவு தவறு என்று நீங்கள் யாரும் சொல்லலையா என்று கேட்க, அதற்கு செழியன் நாங்க சொன்னோம். ஆனா அம்மா தான் கேட்கல. என்னால் இந்த இடத்தில் இருந்தும் மேல வர முடியும்னு சொல்லுறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

பாக்யா சொன்ன வார்த்தை

பிறகு சரி என்று சொல்லிவிட்டு கிளம்பும் நேரத்தில் பாக்கியா இனியாவிடம் பேசிவிட்டு மாடியில் இருந்து கீழே வருகிறார். அப்போது சுதாகர் பாக்கியாவிடம் நீங்க தொடங்கப்போற பிசினஸ்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் என்னுடைய சம்மந்தி என் அளவுக்கு இல்லை என்றாலும் ஒரு ரெஸ்டாரண்ட் வச்சிருக்காங்க என்று எல்லாரிடமும் சொல்லி இருக்கிறேன். ஆனால் இப்போ நீங்க ஒரு கையேந்தி பவன் தொடங்க போறீங்கன்னு எப்படி நான் எல்லாரிடமும் சொல்வது என்று கேட்கிறார்.

மன்னிப்பு கேட்ட செழியன்

அதற்கு பாக்கியா என்னுடைய சம்மந்தியும் நல்ல ரெஸ்டாரன்ட் வைத்து தொழிலதிபராக தான் இருந்தாங்க, ஆனா பாசத்துக்காக ஏமாற்றப்பட்டு இப்போ கையேந்தி பவன் நடத்திட்டு இருக்காங்கன்னு சொல்லுங்க என்று சொல்ல அதைக் கேட்டு சுதாகர் கோபப்படுகிறார். செழியனும் ஜெனியும் அதிர்ச்சி ஆகி நிக்கிறார்கள். பிறகு பாக்கியா நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பியதும் செழியனும் ஜெனியும் சுதாகரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து வருகிறார்கள்.

சுதாகருக்கு அவமானம்

மறுபக்கத்தில் ஈஸ்வரி இனியா கொடுத்துவிட்ட சாக்லேட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது உங்க அம்மா அங்க வந்து எதுவும் பிரச்சனை பண்ணலல்ல என்று செழியனிடம் ஈஸ்வரி கேட்க, அம்மா ஆரம்பத்தில் நல்லாதான் இருந்தாங்க ஆனா கிளம்ப போற நேரத்தில் சுதாகர் அங்கிளை குறை சொல்ற மாதிரி பேசிட்டு வந்துட்டாங்க என்று நடந்ததை சொல்ல, அதனால் ஈஸ்வரி வழக்கம்போல கோபப்பட்டு பாக்யாவை திட்டிக் கொண்டிருக்கிறார்.

பாக்யா பதிலடி

அதற்கு பாக்கியா நான் யாரையும் குறையாக சொல்லல. அவங்களை நான் மட்டம் தட்டணும்னு பேசல, எது உன்னையோ அதைத்தான் பேசினேன் என்று பதிலடி கொடுக்கிறார். அதற்கு வழக்கம் போல ஈஸ்வரி இவளுக்கு பண பேய் மட்டுமல்ல, ஊரில் உள்ள எல்லா பேயும் பிடிச்சிருக்கு. அதான் இப்படி திமிரா பேசிட்டு திரிகிறா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை கண்டுகொள்ளாத பாக்கியா நாளைக்கு ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு எல்லாரும் வந்துருங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

இனியா செய்த செயல்

மறுபக்கத்தில் பாக்கியா சொல்லிக் கொடுத்த டிப்ஸ் படி இனியா ஒரு ஸ்வீட் செய்து இருக்கிறார். அதை எல்லோருக்கும் கொடுக்க சுதாகர் என்ன ஸ்வீட் எல்லாம் செஞ்சு இருக்கீங்க என்று விசாரிக்க, அதற்கு அம்மா மூன்றாவது ரெஸ்டாரண்ட் தொடக்குறாங்க அதுக்காக ஸ்வீட் செஞ்சேன்.. செய்யலாமா? தப்பில்லலா என்று கேட்க, செய்யலாம் என்று சுதாகர் சொல்லிவிட்டு கோபப்படுகிறார்.

சுதாகர் பிளான்

அந்த நேரத்தில் இனியாவுக்கு பாக்கியா போன் செய்ததும் தனியாக போய் பேசப்போகிறார். அப்போது சுதாகர் நாம பாக்யாவின் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவுக்கு போகக்கூடாது என்று சொல்ல, நிதிஷ் இனியாவிடம் எப்படி சமாளிக்க என்று பிளான் கேட்க, அதற்கு சுதாகர் புதியதாக பிளான் ஒன்னு போட்டு கொடுக்க நிதிஷ் என்று சொல்கிறார்.

புது ரவுடி

பிறகு இனியா வந்ததும் எதுவும் நடக்காதது போல எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் பாக்கியா ரெஸ்டாரண்டில் நின்று கொண்டிருக்கும்போது அங்கு ஒரு ரவுடி வருகிறார். அவர் இனிமே நாங்கள் இந்த கடைக்கு சாப்பிட தினமும் வரோம் என்று ஒரு மாதிரியாக சொல்லிவிட்டு போக அவர் போனதும் கடை ஓனர் பாக்கியாவிடம் நீங்க கொஞ்சம் கவனமாதான் இருக்கனும், இவர்தான் இந்த ஊரில் பிரச்சனைக்குரிய நபர் என்று சொல்கிறார். அப்போது செல்வி நாம எங்க போனாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டே இருக்கு என்று புலம்பி கொண்டிருக்கிறார். அடுத்ததாக ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவிற்கு பாக்கியா குடும்பத்தினர் எல்லோரும் வருகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+