ஹாஸ்பிடலில் இருக்கும் இனியா வெளியிட்ட மணப்பெண்ணாக மாறிய வீடியோ..அடுத்து நடக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடிகை நேஹா நடித்து வருகிறார்.
நடிகை நேஹா குழந்தை நட்சத்திரமாக சின்ன திரையில் அறிமுகம் ஆகி தற்போது திருமண மேக்கப்பில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கோபியோடு போக போகிறாரா அல்லது பாக்யாவுடன் செல்லப் போகிறாரா? என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் நேஹா மணப்பெண் உடையில் இருக்கும் வீடியோவை பார்த்து பலரும் கருத்துக்களை குவித்து வருகின்றனர்.

சீரியலின் கதை
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வரும் சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பாக்கியா என்கிற கேரக்டரை மட்டுமே முக்கியமாக கொண்டு இந்த சீரியல் இல்லாமல் இதில் இருக்கும் அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. இந்த சீரியலில் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு பெண் போராடிக் கொண்டிருக்கிறார். அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளும் அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்காமல் இருக்கும் நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து எடுத்து வைக்கும் முயற்சிகள் அதில் இருக்கும் வெற்றிகள் பற்றியதாக இந்த சீரியல் இருந்து வருகிறது.

நிஜத்தில் நிலைமை வேறு
பாக்கியலட்சுமி சீரியலில் நேஹா இனியா கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் ஒரு நாள் அம்மாவின் அருமையை புரிந்து கொண்டு அம்மா தான் உலகம் என்று பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த நாள் அம்மா திட்டினால் இவரெல்லாம் ஒரு அம்மாவா என்று அப்பாவின் பக்கம் ஓடிப் போய்விடும் கேரக்டராக இருந்து வருகிறார். அதனால் சமூக வலைத்தளத்தில் இவரை அதிகமான ரசிகர்கள் திட்டி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் கல்லூரி படிப்பை நிஜத்தில் முடித்த நேஹா சீரியலில் இன்னும் பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த பொண்ணு எத்தனை வருடம் தான் இதே ஸ்கூல் யூனிபார்மில் வந்து கொண்டிருக்கும் என்று சில ரசிகர்கள் நொந்து கொண்டு இருக்கிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
நேஹா சன் டிவியில் ஒளிபரப்பான பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதற்குப் பிறகு வாணி ராணி, சித்தி 2 உட்பட ஒரு சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் இவருக்கு விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது அந்த சீரியலிலும் தனக்கு கிடைத்த கேரக்டரை சரியாக நடித்து வரும் நேஹா சமூக வலைத்தளத்திலும் பிசியாக இருந்து வருகிறார்.

மணப்பெண் உடையில் கலக்கல்
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மணப்பெண் போல உடை அணிந்து பிரைடல் போட்டோஷூட் நடத்தி அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. சீரியலில் இவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், இந்த குழப்பத்திலும் இப்படி ஒரு கொண்டாட்டமா என்று ரசிகர்கள் இனியா என்ற நேஹாவை கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications