பாக்கியலட்சுமி இனியாவுக்கு பிரபல கிரிக்கெட் வீரரோடு காதலா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடித்து வரும் நேகா தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு instagram பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு நேகா போட்டோ ஃபில்டர் மூலம் எடுத்து வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்திகளை பரப்பி வந்தனர்.
அது குறித்து நீண்ட விளக்கம் ஒன்றை கொடுத்த நேகா தன்னுடைய கோபத்தையும் அதில் காட்டி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் இனியா கேரக்டரில் நடிக்கும் நேகாவும் பலருக்கும் பரிச்சயமானவர்தான்.
நேகா பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் தேனு கேரக்டரில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த நேகா இப்போ பாக்கியலட்சுமி சீரியலிலும் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையாக தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் நிஜத்தில் நேகா காலேஜ் பட்டப்படிப்பை எல்லாம் முடித்துவிட்டார். இது குறித்து இப்போது நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அதையெல்லாம் எப்போதும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் நேகா இப்போது தன்னைப் பற்றிய வதந்திகளை பார்த்து கடுப்பாகி இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு நேகா தன்னுடைய instagram பக்கத்தில் snapchat மூலமாக பில்டர் மூலம் வீடியோ எடுத்து அதை அப்லோடு பண்ணி இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் நேகா கமிட் ஆகிட்டார் போல. அதனால் தான் அவருடைய வருங்கால பார்ட்னர் பற்றி அப்டேட் கொடுப்பதற்காக நேகா இப்படி ஒரு வீடியோ கிரியேட் பண்ணி இருக்காரு.சீக்கிரமா எங்கேஜ்மென்ட் காண அனவுன்ஸ்மென்ட் கூட நேகா கொடுக்கலாம் என்று செய்திகள் பரவி வந்தது.
அந்த செய்திகளை நேகா ஷேர் பண்ணி அநியாயம் பண்ணுறீங்க உங்களால ஒரு ஸ்னாப் சாட் பில்டர்கூட யூஸ் பண்ண முடியல. ஒரு போட்டோ வெளியிட்டதுக்கு இப்படி எல்லாமா வதந்தி பரப்புவீங்க என்று அவர் ரிப்ளை கொடுத்திருந்தார். இது வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் அதைத்தொடர்ந்து நேகா கிரிக்கெட்டர் பத்திரனா பற்றி சில வீடியோ கிளிப்சுக்கள் அடிக்கடி ஷேர் பண்ணி வருகிறார்.

இதனால் கிரிக்கெட்டர் பத்திரனாவும் நேகாவும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களா? எப்ப கல்யாணம்? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியான நேகா இந்த செய்தியை பகிர்ந்து, இதைப் பார்த்து சிரிக்கிறதா? இல்ல அழுறதான்னு தெரியல இது மோசமான கேரக்டராக இருக்கிறது என்று கடுப்பாகி பதில் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications