பாக்கியலட்சுமி: மயூவிடம் அப்பா பற்றி ஈஸ்வரி சொன்ன வார்த்தை.. பாக்யா கேட்ட கேள்வி.. கோபத்தில் ராதிகா
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 18ஆம் தேதிக்கான எபிசோடில் மயூவிடம் ஈஸ்வரி அவருடைய அப்பாவை பற்றி பேசியதால் பாக்யா கோபப்படுகிறார். அதே நேரத்தில் கோபி செய்த செயலால் ராதிகா ஏமாற்றம் அடைகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி, இனியா, செழியன் மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபியை மீண்டும் பாக்கியாவோடு சேர்த்து வாழ வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோபிக்கு பாக்கியாவிடம் பேசும்போது தனி சந்தோஷம் கிடைக்கிறது.

பாக்யாவும் கோபியோடு சேர்ந்து இருந்தால் சந்தோஷமா இருப்பா அதனால நாம சீக்கிரமா இந்த ராதிகாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் என்று பிளான் போடுகிறார்கள். அதற்கு செழியன் அது எப்படி முடியும் என்று கேட்க, உன் வாழ்க்கையில் என்ன நடந்தது? மாலினி இடையில் வந்தால் தானே. அதற்கு பிறகு நீ ஜெனி காலில் இனி விழுந்து அவளோடு மீண்டும் சேர்ந்து வாழலையா? என்று கேட்கிறார்.
இதை தொடர்ந்து இனியாவும் கோபியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த மயூ தான் காம்படீஷனில் வெற்றி பெற்றதாக சொல்கிறார். அதனால் கோபி உனக்கு என்ன கிப்ட் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு மயூ சின்ன சின்ன பொருள்கள் போடுவதற்கு ஒரு பவுச் வேண்டும் என்று சொல்கிறார்.

அதற்கு கோபி நீ பெருசா கேளு என்று சொல்ல மயூ இல்லை எனக்கு இதுவே போதும் என்று சொல்கிறார். அதற்கு சரி நான் போய் ரெடியாகிட்டு வரேன் வெளியே ஷாப்பிங் போகலாம் என்று சொல்கிறார். பிறகு கோபி ரூமுக்கு போனதும் அங்கிருந்த ஈஸ்வரி மயூவை திட்டுகிறார். உங்க அம்மாவால தான் அவனுக்கு ஏற்கனவே உடம்புக்கு முடியாம ஆச்சு. நீ இப்போ சும்மா இருக்க மாட்டியா?
உன்னை வெளியில கூட்டிட்டு போகணுமா? நீ எதுக்கு வார்த்தைக்கு வார்த்தை அப்பானு சொல்லுற என்று திட்ட அதற்கு பாக்கியா நீங்க என்ன இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க என்று சொல்ல, ஈஸ்வரி எதுவும் கேட்காமல் திட்டுகிறார். அதோடு கோபி எழில், செழியன், இனியாவுக்கு மட்டும்தான் அப்பா, உனக்கு கிடையாது. நீ யாரோ குடிகாரன் பெத்த மகள்தானே? என்று சொல்ல மயூ அழுது கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ராதிகா வந்து விடுகிறார். ராதிகாவை பார்த்ததும் மயூ கட்டிப்பிடித்து அழுகிறார். உடனே ஈஸ்வரி இதை வாங்கிக் கொடு அதை வாங்கி கொடுன்னு ஒரே தொல்லை என்று கதையை மாற்றி சொல்ல, ராதிகா எது வேணுனாலும் என்கிட்ட கேட்க வேண்டியதுதானே என்று சொல்கிறார்.
நான் கேட்கலாமா டாடி தான் என்ன வேணும்னு கேட்டாரு அதனால தான் பௌச் கேட்டேன் என்று சொல்ல, சரி வா நான் வாங்கி தரேன் என்று ராதிகா கூப்பிட கோபியும் வருகிறார். இங்கே நடந்தது எதுவும் தெரியாமல், சரி போகலாம் கிளம்பு நானே கூட்டிட்டு போறேன் என்று சொல்ல, ராதிகா நானே கூட்டிட்டு போறேன் என்று கிளம்பி போகிறார்.
உடனே ஈஸ்வரி கோபியிடன் நீ கூட்டிட்டு போறேன்னு சொல்ற.. எப்படி மதிக்காம கூட்டிட்டு போற பாரு என்று ஈஸ்வரி மாத்தி பேச பாக்யா கோபப்படுகிறார். அதோடு நீ இனியாவை கூட்டிட்டு போயிட்டு வா. அவளுக்கு டிரஸ் எடுக்கணும்னு சொன்னாலே எடுத்துக்கொடு என்று கோபியிடம் சொல்ல, பாக்கியா எதுவும் சொல்லாமல் கோபமாக போய்விடுகிறார்.

பிறகு மயூ காரில் சோகமாக இருக்க ராதிகா அவரை சமாதானப்படுத்தி ரெண்டு கிப்ட் வாங்கலாம் ஐஸ்கிரீம் வாங்கலாம் என்றெல்லாம் பேச மயூ எதுவும் பேசாமல் அழுகிறார். நீங்க டாடி என்று கூப்பிட சொல்றீங்க அப்புறம் ஏன் என்னை பாட்டி திட்டுறாங்க என்று கேட்க, அவங்க பேசுறது எல்லாம் பெரிதாக எடுத்துக்காதம்மா உன்னுடைய சந்தோஷத்துக்காக நான் சில முடிவுகள் எடுத்தேன்.
ஆனால் அது உனக்கு கஷ்டத்தை தான் கொடுக்கிறது. சாரி சீக்கிரமா இதை எல்லாம் சரி பண்ணுதேன் என்று சொல்லி ராதிகா எமோஷனலாக மயூ சமாதானம் ஆகிறார். மறுபக்கம் ஈஸ்வரிக்கு மாத்திரை கொடுக்க வந்த பாக்யா கோபமாக இருப்பதை பார்த்து உன் பிரண்டோட பொண்ணை திட்டிட்டேன்னு மூஞ்சியை தூக்கி வச்சிருக்கியா என்று கேட்கிறார்.
அதற்கு பாக்கியா நீங்க பண்ணுனது ரொம்ப பெரிய தப்பு. உங்க பையன் ராதிகாவுக்கு பொண்ணு இருக்குன்னு தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணி இருக்காரு. மயூவை பாத்துக்குற ரெஸ்பான்ஸ் இருக்கு. அவ அப்பான்னு கூப்பிடாம வேற என்னன்னு கூப்பிடுவா? ஒரு சின்ன பொண்ணு கிட்ட பேசுற மாதிரியா நீங்க பேசினீங்க? என்று திட்டுகிறார்.
இதனால் ஈஸ்வரி கோபப்படுகிறார். அதைத் தொடர்ந்து வெளியே சென்ற கோபி வீட்டிற்கு வருகிறார். பிறகு ராதிகாவோடு தூங்க செல்லும் போது இனியா பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் இனியாவை ரொம்பவே மிஸ் பண்ணுறேன். இனியா என் மீது ரொம்ப பாசமா இருக்கா, வெளியே செல்லும்போது இனியி அதிகமாக புகைப்படங்கள் எடுத்தா என்று சொல்லிக் கொண்டே இருக்க, ராதிகா கோபத்தில் எனக்கு தலை வலிக்கிறது என்று சொல்லி படுத்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications