ஜெனிக்கு நீதிமன்றத்தில் கிடைத்த ஏமாற்றம்.. காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி... எழிலால் வந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜனவரி 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மறுபடியும் நீதிமன்றத்தில் ஜெனி மற்றும் செழியன் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது எழிலால் ஜெனிக்கு அதிர்ச்சி கிடைக்கிறது.
அதாவது ஜெனியையும் செழியணையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று எழில் எடுத்த திடீர் முடிவால் பாக்கியா அடுத்த பிரச்சனையில் மாட்டியிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவும் செழியனும் கோட்டிற்கு வந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு எழிலும் வருகிறார். அப்போது பாக்கியா நீ எதுக்காக டா இங்க வந்த என்று கேட்க அதற்கு செழியனுக்கு சப்போர்ட்டாகத்தான் வந்தேன் என்று எழில் சமாளிக்கிறார். பிறகு அங்கு ஜெனி மற்றும் ஜோசப் இருவரும் வருகின்றனர் அப்போது ஜெனியை இவர்களோடு பேச விடாமல் ஜோசப் தடுத்து உள்ளே கூட்டிட்டு போக, அப்போது எழில் ஜெனியை நிறுத்தி நலம் விசாரிக்கிறார்.

அதற்கு ஜோசப் இப்போ நீ அவளை பத்தி கேப்ப அப்புறம் குழந்தையை பத்தி கேப்ப, அதுக்கப்புறம் உங்க அண்ணனுக்கு சப்போட்டா பேசுவ என்று கோபப்பட்டு திட்டுகிறார். அதற்கு எழில் நான் எங்க அண்ணனுக்காக பேச இங்க வரல என்னுடைய ஸ்கூல் சீனியர் என்ற முறையில் தான் நான் இவங்க கூட பேசினேன் என்று பதில் கொடுக்கிறார். இந்த நாள் கோபப்பட்டு ஜோசப் ஜெனியை கூட்டிக்கொண்டு உள்ளே சென்று விடுகிறார்.
அதோடு ஜெனிடம் ஜோசப் உன்னை பத்தி அடுக்கடுக்கா குற்றச்சாட்டுகள் சொல்லுவாங்க. அதை பத்தி எல்லாம் நீ கவலைப்படாத நமக்கு விவாகரத்து கிடைக்கணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு ஜெனி மற்றும் செழியனை நீதிபதி விசாரணைக்கு அழைக்க ஜெனி தரப்பு வழக்கறிஞர் செழியன் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு நீதிபதி இவ்வளவு குற்றச்சாட்டு வைக்கிறாங்க நீ என்னப்பா பதில் சொல்ல போற என்று கேட்க,

அதற்கு செழியன் நான் நிறைய தப்பு பண்ணிட்டேன். ஜெனி என் கூட இருக்கிற வரைக்கும் அவளோட அருமை எனக்கு புரியல என்று கண் கலங்குகிறார். அப்போது நீதிபதி உன் மேல அவங்க இவ்வளவு குற்றச்சாட்டு வைக்கிறாங்க உனக்கு அவங்க மேல ஏதாவது குற்றச்சாட்டு இருக்கா என்று கேட்க, அதற்கு செழியன் எதுவுமில்லை. ஜெனி மாதிரி ஒரு நல்ல பொண்ணு யாருக்கும் கிடைக்க மாட்டாங்க, எனக்கு கிடைச்சாங்க ஆனா நான் தான் தப்பு பண்ணிட்டேன் சொல்ல, அப்போது ஜெனி அப்பா சொன்ன விஷயங்களை எல்லாம் நினைத்து பார்க்கிறார்.

பிறகு நீதிபதி இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பதாக தீர்ப்பு வழங்குகிறார். மேலும் இருவரும் கவுன்சிலிங் செல்ல வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். அதைத் தொடர்ந்து ஜெனி காரில் காத்திருக்க அப்போது ஜோசப் இங்கு இரு நான் வக்கீலை பார்த்துட்டு வருகிறேன் என்று உள்ளே போகிறார். அந்த நேரத்தில் எழில் ஒரு பிளான் போட்டு செழியனை ஜூஸ் குடிக்க கூட்டி சென்று ஜெனி காரில் தான் இருக்காங்க, அதுவும் தனியா இருக்காங்க.

இந்த காரை எடுத்துட்டு போய் அவங்கள எங்கேயாச்சும் கூட்டிட்டு போய் பேசு. இந்த வாய்ப்பை விட்டா உனக்கு திரும்பவும் வாய்ப்பு கிடைக்காது என்று சொல்ல அதற்கு செழியன் வேண்டாம் என்று பயப்படுகிறார். அதற்கு எழில் செழியனை காருக்குள் தள்ளி விட அதை பார்த்து ஜெனி பதறுகிறார். அப்போது எழில் ஜெனி இடம் நீங்க எதுவும் பேசாதீங்க, செழியன் பேச வேண்டியதை பேசுவான் நீங்க காது கொடுத்து கேட்டா மட்டும் போதும் என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்து விடுகிறார்.

அதைத் தொடர்ந்து பாக்கியா விடம் இந்த விஷயத்தை எழில் வந்து சொல்ல அதற்கு பாக்யா பயந்து போய் ஜெனியின் அப்பாக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும் என்று திட்ட அந்த நேரத்தில் ஜோசப் கோர்ட்டில் இருந்து வெளியே வர பாக்கியா பேச்சை நிறுத்தி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications