பாக்கியலட்சுமி.. கோபி உடைத்த உண்மை.. ராதிகா எடுத்த முடிவு! பாக்யா கண்டுபிடிக்கும் ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 28ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகா தான் ட்ரிப் செல்வதற்கு திட்டமிட்டு அதற்காக செலவழித்தது என்ற உண்மையை கோபி குடும்பத்தினரிடம் சொல்கிறார். அதைக் கேட்டு இனியா பீல் பண்ணுகிறார். ஆனால் ராதிகா முக்கிய முடிவு எடுக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யாவின் குடும்பம் ட்ரிப் போன இடத்தில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா ஈஸ்வரியிடம் வாங்க ராட்டினத்தில் சுற்றலாம் என்று கூப்பிட்டு போகிறார். பிறகு பாக்கியா, இனியா, ராதிகா என எல்லோரும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ராதிகா இனியாவிடம் நேற்று அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிக்குமாறு மன்னிப்பு கேட்கிறார். அதற்கு இனியாகவும் அதெல்லாம் பரவாயில்லை என்று சமாதானம் ஆகிறார். மேலும் உனக்கு என்ன படிக்க விருப்பமோ அதை படி. டான்ஸ்லயும் கவனம் செலுத்து என்று இனியாவுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்.
இதை தொடர்ந்து எல்லோருக்கும் ராதிகா சாப்பாடு ஆர்டர் பண்ணுகிறார். அவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ராதிகாவும் சந்தோஷப்படுகிறார். இதை எல்லாம் கவனித்த பாக்கியா நீங்க ஓகே தானே ஏன் ஒரு மாதிரி இருக்குறீங்க என்று கேட்க, அதற்கு ராதிகா நான் சந்தோஷமா தான் இருக்கிறேன் வேறொன்றும் இல்லை என்று சொல்கிறார்.

பிறகு எல்லோரும் விளையாடிக் கொண்டிருக்கும்போது பாக்கியா துப்பாக்கியால் பலூனை குறி பார்த்து சுட அதை கோபி ஈஸ்வரியிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஈஸ்வரி பாக்கியா முன்ன போல இப்போ இல்லை. இப்போ சந்திர மண்டலத்துக்கே ஸ்கூட்டர்ல போயிட்டு வருவா என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்கள். பிறகு வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி கோபியிடம் சுற்றுலா போனது நல்லா இருந்துச்சு என்று சொல்ல, அதற்கு கோபி இன்னொரு முறை இப்படி போகனும் என்று சொல்கிறார். ஆனால் எங்க குடும்பம் மட்டும்தான் போகணும் என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டு ராதிகாவை பார்க்கிறார்.

அதற்கு கோபி இந்த ட்ரிப் அரேஞ்ச் பண்ணியது ராதிகா தான் எல்லாமே அவதான் செஞ்சா என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவாளா? வீட்டில் நிம்மதி இல்லாமல் போனதற்கு காரணமே இவள்தான். இப்போ இவளால்தான் எல்லாரும் ட்ரிப் போனோமா என்று திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications