பாக்கியலட்சுமி: ஈஸ்வரியிடம் நறுக்குன்னு ராதிகா கேட்ட கேள்வி.. ஆடி போன கோபி.. அதிர்ச்சி கொடுத்த பாக்யா
ஒரு கட்டத்தில் கோபியை அந்தப் பக்கமும் இந்த பக்கமும் ராதிகாவும் ஈஸ்வரியும் இழுக்கின்றனர். அப்போது கோபி வேறு வழி இல்லாமல் ராதிகா சாப்பாடு நல்லா தான் இருந்தது என்று சொல்கிறார். அப்போது ஈஸ்வரியிடம் ராதிகா தனியா பேச வேண்டும் என்று அழைத்து சென்று இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க, நீ இருக்கிறது எனக்கு பிடிக்கல என்று ஈஸ்வரி சொல்ல, இனிமேல் அடுத்தவங்க குடும்ப விஷயத்தில் தலையிடாதீங்க என்று ராதிகா மிரட்டுகிறார். சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை யார் கவனித்துக் கொள்வது என்று ராதிகா மற்றும் ஈஸ்வரி இருவரும் சண்டை போடுகின்றனர். அப்போது பாக்கியா எதிர்பார்க்காத செயலை செய்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா கிச்சனில் இருக்க, ஜெனி ரெஸ்டாரன்டின் கணக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரெஸ்டாரண்டுக்கு இப்போ நல்ல லாபம் வருகிறது பொங்கலுக்கு ஆர்டர் போடலாமா என்று கேட்க, பண்ணலாம் என்று பாக்யா சொன்னதும், சீக்கிரமா பண்ணுங்க என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் ராதிகா என்ன ஆர்டர் என்று கேட்க, உங்களை போல வேலைக்கு போறவங்களுக்கு பார்சல் பண்ணி கொடுக்கலாம்னு இருக்கோம் என்று ஜெனி சொல்லிக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி அங்கு வருகிறார். பிறகு ராதிகா செய்த சமையல் குறித்து ஈஸ்வரி வம்பு இழுக்கிறார். அதற்கு ராதிகா நான் நல்லாதான் சமைக்கிறேன் கோபி பிடிக்கலைன்னு சொன்னாரா? என்று கேட்கிறார்.
அதற்கு ஈஸ்வரி, அவன் எப்படி சொல்லுவான்... அவன் சாப்பிட்டதை வச்சு நானே தெரிஞ்சுக்க வேண்டியது தான். அவனுக்கு இப்போ ஹெல்த்தான சாப்பாடு கொடுக்கணும் ஆனா நீ செய்வது அப்படி இல்லை என்று வாக்குவாதம் செய்கிறார். அந்த நேரத்தில் கோபி அங்கு வர, நான் சமைப்பது நல்லா இல்லையா என்று ராதிகா கேட்க ஈஸ்வரி ஆமானு சொல்லு நான் பக்கத்தில் உனக்கு துணையா இருக்கேன் என்று சொல்கிறார்.
ஒரு கட்டத்தில் கோபியை அந்தப் பக்கமும் இந்த பக்கமும் ராதிகாவும் ஈஸ்வரியின் இழுக்கின்றனர். அப்போது கோபி வேறு வெளியில் இல்லாமல் ராதிகா சாப்பாடு நல்லா தான் இருந்து என்று சொல்கிறார். அப்போது ஈஸ்வரியிடம் ராதிகா தனியா பேச வேண்டும் என்று அழைத்து சென்று இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க, நீ இருக்கிறது எனக்கு பிடிக்கல என்று ஈஸ்வரி சொல்ல, இனிமேல் அடுத்தவங்க குடும்ப விஷயத்தில் தலையிடாதீங்க என்று ராதிகா மிரட்டுகிறார
அதற்கு ஈஸ்வரி கோபி எனக்கு அடுத்தவனா என்று கோபப்பட, ராதிகா நீங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு தலையாட்டுவதற்கு நான் ஒன்னும் பாக்கியா கிடையாது, நான் ராதிகா என்று கையை நீட்டி மிரட்டுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஈஸ்வரி அதிர்ச்சியாகி நிற்கிறார். அந்த நேரத்தில் கோபி வருகிறார். என்ன ஆச்சு ராதிகா அம்மாவ தனியா கூட்டிட்டு வந்து பேசிட்டு இருக்க என்று கேட்கிறார்.

ஹாஸ்பிடல் ஃபைல் எங்க வச்சிருக்கீங்கன்னு கேட்டேன் மறந்துட்டேன்னு சொன்னாங்க என்று ராதிகா அப்படியே மாற்றிப் பேசுகிறார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ஈஸ்வரி பாக்கியா பக்கத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். அப்போது பாக்கியா எதுவும் கேட்காமல் இருக்க, ஈஸ்வரி என்ன நடந்தது என்று கேட்க மாட்டியா என்று அவராகவே பேசுகிறார்.
கேஸ் வெடித்து விபத்து ஆகிடுச்சு! ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை எமோஷனல் வீடியோ
அதோடு ராதிகா பேசியது எல்லாவற்றையும் புலம்பி கொட்டுகிறார். அதற்கு பாக்கியா நான் உங்களுடைய குடும்ப விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் கோபிக்கு ராதிகா மாத்திரைகளை எடுத்துக் கொடுக்கிறார். அவருக்கு கை கால்களை அமுக்கி விடுகிறார். அப்போது உங்களுடைய அம்மா என்னை ரொம்ப சீண்டி கொண்டே இருக்காங்க. அவங்கள கொஞ்சம் சொல்லி வைங்க என்று சொல்ல கோபியும் தலையாட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications