போலீஸோடு வந்த கணேஷ்.. பாக்கியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமிர்தா.. ஈஸ்வரியால் கலங்கி நிற்கும் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜனவரி 6 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் நேற்று எழிலிடம், கணேஷ் நான் அமிர்தா மற்றும் நிலாவை என்னோடு கூட்டிட்டு போவேன் என்று சபதம் போட்டு இருந்த நிலையில் அதற்கான முயற்சியை இன்று எடுத்திருக்கிறார்.

அதாவது போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கம்ப்ளைன்ட் கொடுத்து தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை தன்னோடு சேர்த்து வைக்கும்படி கணேஷ் பிரச்சனை செய்ததால் போலீஸ் பாக்யா வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் அமிர்தா இனி எழிலோடு இதே வீட்டில் இருக்க போகிறாரா? அல்லது கணேசோடு போகப் போகிறாரா? என்று போலீஸ் கேட்ட கேள்விக்கு அமிர்தா எதிர்பாராத செயலை செய்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial january 6th episode Ganesh came with the police

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி மற்றும் ஈஸ்வரி வக்கீலிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே ஜோசப் வர ஈஸ்வரி அவரிடம் சண்டை போட்டு வாக்குவாதம் செய்கிறார். செழியன் கண்டிப்பாக விவாகரத்து கொடுக்க மாட்டான். அப்படியே விவாகரத்து கொடுத்தாலும் குழந்தை எங்க கிட்ட தான் இருக்கும் என்று சவால் விட ஜோசப் கோவத்தில் கிளம்பி விடுகிறார்.

அதைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் கணேஷ் போலீசை கூட்டிக்கொண்டு நேராக வீட்டிற்கு போய் அமிர்தாவை கூட்டிட்டு வந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து நிற்க அங்கு வரும் ஒரு கான்ஸ்டபிள் என்ன விஷயம் என்று விசாரிக்கிறார். அவரிடம் கணேஷ் என்னுடைய பொண்டாட்டியையும் பிள்ளையும் கடத்தி வச்சிருக்காங்க என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial january 6th episode Ganesh came with the police

பிறகு இன்ஸ்பெக்டர் இடம் சென்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அவர் கான்ஸ்டபிள் ஒருவரை அனுப்பி வைக்கிறார். அதற்கு கணேசன் இவரையா அனுப்புறிங்க என்று கேட்க அவர் ரொம்ப அனுபவசாலி நிறைய கேஸ் பார்த்த அனுபவம் இருக்கு அதனால் அவரே இதை தீர்த்து வைத்து விடுவாரு என்று சொல்லி கான்ஸ்டெபிலை இன்ஸ்பெக்டர் அனுப்பி வைக்கிறார்.

Baakiyalakshmi Serial january 6th episode Ganesh came with the police

ஆனால் கணேசன் மீண்டும் மீண்டும் தன்னுடைய கதையைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்க அந்த கான்ஸ்டபிள் கடுப்பாகிறார். பிறகு பாக்யா வீட்டிற்கு வரும் வழியில் காபி குடிச்சிட்டு போகலாமா என்று போலீஸ் கேட்க அதற்கு கணேஷ் அமிர்தாவையும் குழந்தையை என்கிட்ட மீட்டு கொடுத்துடுங்க நான் உங்களுக்கு விருந்து வைக்கிறேன் என்று சொல்கிறார். அதே நேரத்தில் வீட்டில் கோட்டில் நடந்த விஷயம் பற்றி எழில், ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Baakiyalakshmi Serial january 6th episode Ganesh came with the police

அந்த நேரத்தில் கணேஷ் அங்கு வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். அதற்கு ஐஸ்வரி நான் உன்னை தான் இங்க வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனே வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறார். அதோடு எழிலிடம் நீ போலீசுக்கு போனை போடு என்று சொல்ல அதற்கு கணேஷ் நானே போலீஸோட தான் வந்து இருக்கிறேன் என்று சொல்லி சார் வாங்க என்று கூப்பிட கான்ஸ்டபிள் வந்து நிற்க இவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதோடு கான்ஸ்டபிள் வீட்டிற்குள் வந்ததும் வண்டியில் வந்தது இடுப்பெல்லாம் வலிக்குது குண்டும் குழியுமான ரோட்டில் ஓட்டிட்டு வந்தான் உட்கார்ந்து பேசலாமா என்று கான்ஸ்டபிள் கேட்க அதற்கு பாக்கியா சார் காபி குடிக்கிறீங்களா? என்று கேட்க குடிச்சா நல்லாத்தான் இருக்கும் என்று கான்ஸ்டபிள் சொல்கிறார். அதற்கு செல்வி காபி போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். காபி வாசனையே செமையா இருக்கு. இந்த மாதிரி வாசனையே நான் பார்த்ததே இல்லையே காபி பவுடர் எங்க வாங்குறீங்க என்று அவர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial january 6th episode Ganesh came with the police

இதனால் கணேஷ் கடுப்பாகி சார் என் விஷயத்தை விசாரிங்க என்று நினைவு படுத்த அதற்கு கான்ஸ்டபிள் எழிலிடம் உங்களுக்கும் அமிர்தாவுக்கும் எப்படி கல்யாணம் நடந்துச்சு நீங்க அவங்களை எப்படி பார்த்தீங்க என்று கேட்க எழில் நடந்த எல்லாவற்றையும் சொல்கிறார். பிறகு ராமமூர்த்தி இரண்டு பேரும் வீட்டிற்கு தெரிந்துதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க திடீர்னு வந்து இவன் அமிர்தா வேணும் குழந்தை வேணும்னு கேட்டா எப்படி அது சாத்தியம் என்று கேட்கிறார்.

அதற்கு பிறகு கான்ஸ்டபிள் அமிர்தாவை கூப்பிட்டு நடந்த எல்லா விஷயமும் எனக்கு தெரியும். அதை பற்றி நான் பேச விரும்பல ஆனா நீ கணேஷ் கூட போக விரும்புரியா? இல்லையா? அதை மட்டும் சொல்லு என்று கேட்க அமிர்தா என்ன சொல்ல போகிறார் என்ற பில்டப்போடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+