பாக்கியலட்சுமி: கோபி பற்றி டாக்டர் சொன்ன வார்த்தை! கோபத்தில் ஈஸ்வரி.. செம பதிலடி கொடுத்த ராதிகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025, ஜனவரி 8ஆம் தேதிக்கான எபிசோடில் கோபியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று டாக்டர் சில விஷயங்களை சொல்கிறார். இதனால் ராதிகா மற்றும் ஈஸ்வரிக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஜெனியும், பாக்கியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜெனியின் குழந்தையை பற்றி பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி வந்து கோபியை இன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகனும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதோடு கோபியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவதற்காக செழியனை கூப்பிட, செழியன் தனக்கு ஒரு மீட்டிங் இருக்கிறது என்று சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி கோபப்படுவதை பார்த்து செழியன் மீட்டிங்கை மாற்றி வைப்பதற்காக பேசுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபியும் ராதிகாவும் ஹாஸ்பிட்டலுக்காக கிளம்பி வருகின்றனர்.
அதை பார்த்ததும் ஈஸ்வரி நான் தான் கோபியோடு போவேன் என்று சொல்கிறார். ஆனாலும் ராதிகா நான் டாக்டர்கிட்ட நிறைய விஷயம் கேட்க வேண்டும் நானும் வரேன் என்று சொல்லி கிளம்புகிறார். பிறகு கோபி, ராதிகா மற்றும் ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு போகிறார். அங்கு சென்றதும் டாக்டரை பார்ப்பதற்காக கோபியுடன் ஒருவர்தான் போக வேண்டும் என்று அங்குள்ள நர்ஸ் சொல்கிறார்.

அப்போது வழக்கம்போல ராதிகா மற்றும் ஈஸ்வரி இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. ஆனால் கோபியை இழுத்துக்கொண்டு ராதிகா உள்ளே சென்று விடுகிறார். பிறகு டாக்டர் எந்தவித பிரச்சனையும் கோபிக்கு இல்ல, அவர் நார்மலாக தான் இருக்கிறார். அவர் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் ஆனால் கடுமையாக அல்ல மெல்லிதாக நடந்தால் கூட போதும் என்று சொல்லி அனுப்புகிறார்.
பிறகு வீட்டிற்கு வந்த ஈஸ்வரி தன்னுடைய உரிமையை ராதிகா எடுத்துக் கொண்டார், ஹாஸ்பிடலில் என்ன நடந்தது என்று கூட என்கிட்ட சொல்லல என்று பாக்கியாவிடம் புலம்பி கொண்டு இருக்க, அதற்கு பாக்கியா உங்க பையனை ராதிகா நல்லா தான் பாத்துக்குவாங்க.

அவங்க தான் அவரோட மனைவி அதனால அவங்க பாத்துக்குவாங்க நீங்க உங்களுடைய உடம்பை பாருங்க. உங்களுக்கே ஆயிரம் பிரச்சனை இருக்கு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதனால் ஈஸ்வரி நீ எப்பவும் உன் பிரண்டுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ என்று கோபப்படுகிறார்.
பிறகு அங்கு வந்த கோபியையும் ஈஸ்வரியை சமாதானம் செய்கிறார். எனக்கு டாக்டர் ஸ்ட்ரெஸ் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. நீங்களும் ராதிகாவும் சண்டை போடும்போது எனக்கு அப்படித்தான் இருக்கிறது. நீங்க அமைதியா இருந்தா நான் நல்லா இருப்பேன் என்று சொன்னதும் இனி உங்க பிரச்சனையில் நான் தலையிட மாட்டேன், எனக்கு உன்னுடைய உடல்நிலை தான் முக்கியம் என்று ஈஸ்வரி சொல்கிறார். இதையெல்லாம் பாக்கியா பார்த்துக் கொண்டே இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications