கோர்ட்டில் மயூ சொன்ன வார்த்தை.. நீதிபதி கேட்ட கேள்வி.. கதறி அழுத ராதிகா.. கோபிக்கு அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 15ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். மயூ கோட்டிற்கு சாட்சி சொல்ல வந்திருக்கும் நிலையில் அவர் என்ன சொன்னார். அதற்கு ராதிகாவின் ரியாக்சன் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரியிடம் விசாரணை செய்திருந்த நிலையில் இரு தரப்பு வாதங்களிலும் கேட்ட பிறகு ஈஸ்வரி குற்றவாளி என்பது உறுதியாவதாக நீதிபதி சொல்ல, அவருக்காக நீதிபதி தீர்ப்பு அறிவிக்க போகும்போது ராமமூர்த்தி அவர் எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டார் என்று சத்தம் போட, போலீஸ் அவரை வெளியேற்ற நீதிபதி தீர்ப்பை இடைவேளைக்கு பிறகு சொல்வதாக தள்ளி வைக்கிறார்.

இதனால் கமலா கோபமாக இருக்கிறார். மறுபக்கத்தில் பாக்கியாவும் பழனிச்சாமியும் ஸ்கூலுக்கு வந்திருக்கின்றனர். மயூவை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனால் சரியா இருக்குமா என்று பாக்கியா தயங்கி கொண்டு இருக்க பழனிச்சாமி ஆறுதல் சொல்லி மயூவிடமும் பேசி மயூவை நீதிமன்றத்திற்கு கூட்டிட்டு வருகின்றனர்.
பிறகு மயூ பழனிச்சாமியோடு காரில் வெயிட் பண்ண பாக்யா ஓடி வந்து வெளியே நின்று கொண்டிருக்கும் ராமமூர்த்தியிடம் என்ன ஆச்சு என்று கேட்க எழில் பாட்டியை குற்றவாளி என்று சொல்லிட்டாங்க என்று ஷாக் கொடுக்கிறார். அதற்கு தீர்ப்பு சொல்லிட்டாங்களா என்று பாக்கியா கேட்க இல்லை என்று சொன்னதும் கோர்ட்டுக்குள் வந்து வழக்கறிஞரிடம் பாக்கியா எதையோ பேச பாக்கியாவை பார்த்ததும் கமலா வரமாட்டானு நினைச்சேன் வந்துட்டாளே ஆனால் ஏதோ பேசிட்டு இருக்காளே என்று அதை ஒட்டு கேட்க எழுந்து போக முயற்சி செய்ய ராதிகா உட்காருமா என்று பிடித்து வைக்கிறார்.

பிறகு மீண்டும் கோர்ட் தொடங்க நீதிபதி தீர்ப்பு சொல்ல வரும் தருணத்தில் ஈஸ்வரியின் வழக்கறிஞர் இறுதியாக ஒரே ஒரு சாட்சியை மட்டும் விசாரிக்க வேண்டும் என்று அனுமதி கேட்க, கோபப்படும் நீதிபதி பிறகு இறுதியாக அனுமதி கொடுக்கிறார். அப்போது மயூ பெயரை கேட்டதும் ராதிகா அதிர்ச்சி அடைந்து இதை என்னால் அனுமதிக்க முடியாது. என் பொண்ணு மைனர் அவளை உள்ளே விடமாட்டேன் என்று சத்தம் போட நீதிபதி அமைதியாக இருக்க சொல்கிறார்.

பிறகு மயூவை கூண்டில் ஏற்றி விசாரணை தொடங்க ராதிகா மீண்டும் அவளை எதற்கு விசாரிக்கிறீங்க அவ சின்ன பொண்ணு என்று கூச்சலிட கமலா அதான் சொல்ல வேண்டியது எல்லாத்தையும் நானே சொல்லிட்டேனே என்று கத்துகிறார். நீதிபதி அவர்கள் இருவரையும் அமைதியாக இருக்க சொல்கிறார் இல்லையென்றால் வெளியே போங்க என்று மிரட்டியதும் இருவரும் அமைதியாக இருக்கின்றனர்.

பிறகு விசாரணை நடத்த மயூ அம்மா அன்னைக்கு ஹாஸ்பிடல் போவதற்கு கிளம்பிட்டு இருந்தாங்க. அப்போ தண்ணி பாட்டிலில் தண்ணீர் எடுத்துட்டு நடந்து வரும்போது பூச்ஜாடி தடுத்து தான் கீழே விழுந்துட்டாங்க. பாட்டி அந்த நேரத்தில் டைனிங் டேபிளில் இருந்தாங்க. அவங்க அம்மாவ பிடிக்க தான் வந்தாங்க. நான் அப்போ ஹாலில் இருந்ததால் இதையெல்லாம் பார்த்தேன் என்று சொல்ல ராதிகாவும் அன்று நடந்ததை நினைத்துப் பார்க்கிறார்.
ராதிகா அவருடைய அம்மாவை பார்த்து முறைக்க கமலா அதிர்ச்சி அடைகிறார். கோபி மயூ பேசியதை கேட்டு அதிர்ச்சியோடு சந்தோஷமும் படுகிறார். குடும்பத்தினர் அனைவரும் நிம்மதி அடைகின்றனர். இறுதியாக நீதிபதி குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ளவும். அதுக்காக பொய்யா கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா என்று கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications