பாக்கியலட்சுமி: விடுதலையான ஈஸ்வரி.. மயூவை வைத்து ராதிகா சொன்ன வார்த்தை.. பாக்யா செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மயூ சொன்ன சாட்சியை வைத்து ஈஸ்வரி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அதற்குப் பிறகு ராதிகாவின் நடவடிக்கை என்ன என்பதை பற்றி எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மயூ சொன்ன வாக்குமூலத்தை தொடர்ந்து நீதிபதி மயூவின் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஈஸ்வரி தப்பு செய்யவில்லை என்று தெரிகிறது. அதனால் அவரை விடுதலை செய்கின்றனர். அதைத் தொடர்ந்து ராமமூர்த்தி சந்தோஷப்பட்டு கடவுள் என்னை காப்பாத்திட்டாரு என்று கண்கலங்கி கொண்டிருக்கிறார். அப்போது எழில் மற்றும் செழியன் இருவரும் ராமமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பாக்கியா அங்கு வந்து ராமமூர்த்திக்கு ஆறுதல் சொல்கிறார்.

ராமமூர்த்தி பாக்யாவிற்கு நன்றிகள் சொல்லிக் கொண்டிருக்க பாக்கியா நான் என்ன அடுத்தவங்களா? நீங்க என்னை அப்படித்தான் பாக்குறீங்களா மாமா? நான் என் அத்தைக்காக இதை கூட செய்ய மாட்டேனா என்று கேட்டுக் கொண்டிருக்க எழில் எப்படி உண்மையை வெளியே கொண்டு வந்தீங்க என்று கேட்க, பார்க்கில் நடந்த விஷயத்தை பாக்கியா சொல்லிக் கொண்டிருக்க பழனிச்சாமி எல்லாமே கடவுளோட அனுக்கிரகம் தான்.
அன்னைக்கு மயூக்கு மட்டும் ஸ்கூல் சீக்கிரமா விடலனா அவளை நீங்க பார்த்து இருக்க முடியாது. அந்த உண்மைகளையும் மயூ உங்களிடம் சொல்லி இருக்க மாட்டா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்பக்கத்தில் ராதிகா, கமலா, மயூ மூன்று பேரும் நிற்கின்றனர். மயூவிடம் நன்றி சொல்லப் போக ராதிகா கோவப்பட்டு திட்டுகிறார்.

என்னுடைய குழந்தையை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வருவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தாங்க? என் குழந்தையை நீங்க எப்படி கூட்டிட்டு வரலாம்? என்று கேட்க அதை கண்டுகொள்ளாத பாக்கியா மயூவிடம் நன்றி சொல்லிவிட்டு இருக்கிறார். அதற்கு ராதிகா இது கோர்ட்டுன்னு பார்க்குறேன் இல்லனா இங்கே நடக்கிறதே வேற என்று மிரட்டி விட்டு செல்கிறார்.

பிறகு கார் பக்கத்தில் வந்ததும் ராதிகா கமலாவை திட்டுகிறார். நீ பொய் கேஸ் போட்டுட்டு என்னை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கியா? உன் பேச்சை நம்புனதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய அசிங்கம் தேவையா என்று திட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் வீட்டில் அமிர்தாவும் ஜெனியும் ஈஸ்வரிக்கு ஆரத்தி எடுப்பதற்கு ரெடி பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ஈஸ்வரியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்ததும் ஆரத்தி எடுக்கின்றனர். அழுது கொண்டிருக்கும் அமிர்தாவிடம் ஈஸ்வரி ஆறுதல் சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் வருகிறார். பிறகு பாக்கியாவிடம் ஈஸ்வரி மன்னிப்பு கேட்டு கண் கலங்குகிறார். ஈஸ்வரிக்கு எல்லா வேலைகளையும் பாக்யாவே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ஈஸ்வரி சாப்பிடவில்லை என்பதால் பாக்கியா அவரை மிரட்டி சாப்பிட வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications