பட்டும் திருந்தாத கோபி, ராதிகாவிடம் சொன்ன வார்த்தை.. பாக்யாவுக்கு அசிங்கம்.. அதிர்ச்சியில் ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரியிடம் அசிங்கப்பட்ட கோபி ராதிகாவிடம் தன்னுடைய கோபத்தை காட்டுகிறார். ஆனால் ராதிகா பாக்யாவை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி அழுது கொண்டிருப்பதை பார்த்து ராதிகா மன்னிப்பு கேட்க, அதற்கு கோபி மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியா போயிடுமா? என்னை என்றைக்கும் விட்டுக் கொடுக்காத என்னுடைய அம்மா இன்னைக்கு நீ என் பிள்ளையே இல்லை... செத்து போயிட்டான்னு தலை முழுகிட்டாங்க என்று சொல்லி அழுகிறார். அம்மா அப்படி பண்ண மாட்டாங்கனு நான் எவ்வளவோ சொல்லியும் நீ கேட்கல, அவங்கள கோர்ட்டு கேஸ்னு கொண்டு போய் நிறுத்திட்ட, எந்த ஒரு பிள்ளையும் செய்யக்கூடாத பாவத்தைநான் செஞ்சுட்டேன் ரொம்ப நன்றி என்று சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து பாக்கியா வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி பேசிய விஷயத்தை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றனர். செல்வி அம்மா இப்படி எல்லாம் பேசுவாங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. உன்னை அவங்க பொண்ணுன்னு சொல்லும்போது எனக்கு புல்லரிச்சிடுச்சு... அவங்க பேசியதெல்லாம் சரிதான் ஆனா ஒன்னே ஒன்னு தான் வருத்தமா இருக்கு... கோபி சாரை பார்க்கிங் ஏரியாவுக்கு கூட்டிட்டு போய் அங்க போய் தலையில் தண்ணி ஊத்தி இருக்கலாம்.
இப்போ அத தொடச்சி எடுக்குறதுக்குள்ள எனக்கு தான் பெண்டு கழண்டு போச்சு என்று சொல்கிறார். அடுத்து பாக்கியா நடந்து வர ராதிகாவும் மயூவும் கடைக்கு போய்ட்டு வரும்போது மயூவை பார்த்ததும் பாக்கியா நன்றி சொல்லி ராதிகாவிடம் பொன்னை நல்லா வளர்த்திருக்கீங்க என்று சொல்ல, எதுக்கு இப்படி டிராமா போடுறீங்க? நீங்க என்ன அண்ணை தரசாவா? என்று ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார்.
என்னை கேட்காமல் என் பொண்ணை எப்படி கோர்ட்டுக்கு கூட்டிட்டு வரலாம். இதுவே நான் இனியாவை கூட்டிட்டு போயிருந்தா உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கோபப்படுகிறார். அந்த நேரத்தில் இது பற்றி நானும் யோசிச்சேன் ஆனால் வேற வழி இல்லாம தான் கூட்டிட்டு வந்துட்டேன். நான் செஞ்சது தப்பு தான் என்று மன்னிப்பு கேட்க, தெரியாம செஞ்சாதான் மன்னிப்பு தெரிஞ்சே செஞ்சா அதுக்கு மன்னிப்பே கிடையாது. இன்னைக்கு மாதிரியே என்னைக்கும் இருக்காது என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
அடுத்து ராமமூர்த்தி ஈஸ்வரிக்கு ஜூஸ் கொடுத்து எதைப் பற்றியும் யோசிக்காத நிம்மதியா இரு என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போது மீண்டும் வாசலில் கோபி வந்து நின்று அம்மா என்று கூப்பிட்டதும் கோபப்படும் ராமமூர்த்தி அங்கேயே நில்லு உள்ளே வந்தா காலை வெட்டிடுவேன் என்று எச்சரிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications