Baakiyalakshmi serial: கமலாவை அடிக்க பாய்ந்த கோபி.. செழியன், எழில் நிலைமை இப்படியா ஆகணும்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரி பற்றி தவறாக பேசிய கமலாவை கோபி அடிக்க பாய அதனால் ராதிகா கோபப்படுகிறார். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி தன்னுடைய தோழி சாவித்திரியை பார்த்ததும் சந்தோஷத்தில் அவரோடு பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது ஈஸ்வரி கல்யாணத்தில் செய்த கலாட்டா கதையை சொல்லி சாவித்திரி கிண்டல் செய்கிறார். அதனால் ஈஸ்வரி தன்னுடைய கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.

இதை பார்த்தால் ராமமூர்த்தியும் பாக்கியாவும் சந்தோஷப்படுகின்றனர். மறுபக்கத்தில் செழியன் டீ கேட்டு கீழே இறங்கி வர, செல்வி வேலை செய்து கொண்டிருப்பதால் ஜெனி நான் போட்டு தரேன் என்று சொல்லி டீ போடுகிறார். அப்போது சர்க்கரையையும் டீ தூளையும் அளவில்லாமல் அள்ளி போட்டு விட்டதால் அந்த டீயை குடித்து பார்த்த எழில் மற்றும் செழியன் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது எழில் உங்களுக்கும் சமையலுக்கும் சுத்தமா செட் ஆகாது தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் ட்ரை பண்ணாதீங்க என்று சொல்ல ஜெனி நான் திரும்பவும் டீ போட்டுக் கொண்டு வருகிறேன் என்று சொன்னதும் இருவரும் ஆளுக்கொரு திசையாக அடித்து பிடித்து ஓடுகின்றனர். அடுத்ததாக மறுநாள் காலையில் கோபி தூக்கத்திலிருந்து எழுந்ததும் ராதிகா நைட்டு எங்க அம்மாவை எதற்கு அப்படி மரியாதை இல்லாமல் பேசினீங்க என்று கேள்வி கேட்க அதற்கு கோபி உங்க அம்மா தான் பிரச்சனை கிளப்பி இருக்காங்க என்று சொல்லி கொண்டிருக்கிறார்.

அப்போது அங்க வந்த கமலா உங்க அம்மா ஒரு கொலைக்காரி என்று மீண்டும் ஈஸ்வரி பற்றி தப்பு தப்பாக பேச, அதனால் கோபமான கோபி அப்படியெல்லாம் பேசாதீங்க என்று சொல்கிறார். ஆனாலும் கமலா நான் அப்படித்தான் சொல்லுவேன் உங்க அம்மா ஒரு கொலைகாரி என்று சொல்லிக் கொண்டே இருக்க இனிமே ஒரு வார்த்தை பேசினீங்க அவ்வளவுதான் என்று கோபி கமலாவை அடிக்க கை ஓங்குகிறார்.

அதை பார்த்து கமலா கதி கலங்கி நிற்கிறார். ராதிகா கோபியின் சட்டையை பிடித்து என்ன பண்ணுறீங்க கோபி? என் அம்மாகிட்ட மரியாதையா மன்னிப்பு கேளுங்க என்று சொல்ல கோபி மன்னிப்பு கேட்க மறுத்துவிடுகிறார். பிறகு கோபி ரெஸ்டாரண்டுக்கு வந்து அதே டென்ஷனோடு அங்கு இருப்பவர்களிடமும் சத்தம் போட்டு திட்டுகிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த கோபியின் நண்பன் ரெஸ்டாரண்டில் கோபி டென்ஷனாக இருப்பதை பார்த்து அவரை சமாதானம் செய்கிறார்.
பிறகு வேலை பாக்குறவங்க கிட்ட இப்படி சத்தம் போடாத அவங்க கிளம்பி போயிட்டா உனக்கு தான் கஷ்டம் என்று எடுத்து சொல்கிறார். அதோடு நேற்று இரவு பாரில் குடித்துவிட்டு கோபி பிரச்சனை செய்தது பிறகு எழில் மற்றும் செழியன் வீட்டிற்கு கூட்டிட்டு போனது போன்ற விஷயங்களை சொன்னதும் கோபி அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications