பாக்கியலட்சுமி: கோபியால் ஜெயிலுக்கு போகும் ஈஸ்வரி.. போலீஸிடம் குடும்பத்தினர் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை மூன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபி மீண்டும் கமலாவை திட்டியதால் கமலா ஈஸ்வரி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். இதனால் போலீஸ் பாக்யாவின் வீட்டிற்கு ஈஸ்வரியை தேடி வந்திருக்கின்றனர்
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபிக்கும் கமலாவுக்கு வாக்குவாதம் நடைபெறுகிறது. அப்போது கோபி உங்களால தான் எங்களுடைய நிம்மதி போயிடுச்சு. நீங்க வரதுக்கு முன்னாடி நானும் ராதிகாவும் நிம்மதியா, சந்தோஷமா இருந்தோம். உங்களால இப்போ எங்களுக்குள்ள பிரச்சனை மேல பிரச்சனை வந்துகிட்டே இருக்கு. நீங்க தான் வீட்டை விட்டு வெளியே போகணும் என்று சொல்ல கமலா, மீண்டும் ஈஸ்வரியை பற்றி பேசியதால் கோபத்தில் இதற்கு மேல் எங்க அம்மாவ பத்தி நீங்க பேசுனா மரியாதை இல்லாம போயிரும் என்று அடிக்க கை ஓங்குகிறார்.

பிறகு நான் வீட்டுக்கு வரும்போது நீங்க இந்த வீட்டில இருக்கக்கூடாது வீட்டை விட்டு வெளியே போயிருங்க என்று திட்டி விட்டு கோபி ரெஸ்டாரண்டுக்கு கோபமாக கிளம்பி போகிறார். அடுத்து தனியாக இருக்கும் கமலா ஏற்கனவே கோபி தன்னை அடிக்க வந்தது... இப்போது மீண்டும் தன்னை பற்றி பேசியது எல்லாவற்றையும் நினைத்து பார்த்து இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று வீட்டில் இருந்து வேகமாக கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்.
அங்கு போலீஸிடம் ஈஸ்வரி பற்றி தப்பு தப்பாக பேசுகிறார். ஈஸ்வரியால் தான் எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை ஆரம்பத்திலேயே அந்த அம்மாவுக்கு என் மகளை அவருடைய மகன் கல்யாணம் செய்தது பிடிக்கவில்லை. அவருடைய மூத்த மருமகளை வீட்டில் வைத்துக்கொண்டு என்னுடைய மகளை அவருடைய கணவரோடு சேர்ந்து வாழாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தையையும் அபார்ஷன் பண்ண சொல்லிக் கொண்டே இருந்தார். ராதிகா அபார்ஷன் பண்ண மாட்டேன் என்று சொன்னதால் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார். அதனால் குழந்தை அபார்ஷன் ஆகிவிட்டது என்று பல குற்றச்சாட்டுகளை சொல்ல போலீஸ் கம்ப்ளைன்ட் எழுதி வாங்கி விடுகிறார்கள். மறுபக்கத்தில் எழில் புதியதாக ஒருவரிடம் கதை சொல்ல வேண்டும் என்று செழியன் ஜெனி அமிர்தா என எல்லாரோடு சாமி கும்பிட்டு வெளியே வர அந்த நேரத்தில் போலீஸ் வீட்டிற்கு வருகின்றனர்.
போலீசை பார்த்ததும் எழில் செழியன் அமிர்தா ஜெனி என எல்லோரும் குழப்பத்தில் நிற்க போலீஸ் இது ஈஸ்வரி வீடு தானா? அவங்க எங்க என்று கேட்க, வீட்டில் இருக்கும் எல்லோரும் அவங்களுக்கு என்ன ஆச்சு எதுவும் பிரச்சனையா என்று பதறி போகின்றனர். பிறகு போலீஸ் அவங்களுக்கு ஒன்னும் ஆகல அவங்க மேல கம்ப்ளைன்ட் வந்து இருக்கு அவங்க எங்க என்று கேட்க,

அவங்க எழில் அவங்க வீட்டில் இல்ல கும்பகோணத்துக்கு போயிருக்காங்க என்று சொன்னதையும் கேட்காமல் போலீஸ் வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் தேடிப் பார்க்கின்றனர். பிறகு அவங்க மேல கமலா என்கிறவங்க கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார்கள். ராதிகாவின் குழந்தை அபார்ஷன் ஆனதற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று சொல்லி இருக்காங்க என்று சொல்ல, மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications