ஈஸ்வரியை வீட்டை விட்டு துரத்திய கோபி.. ராதிகா இப்படி சொல்லிட்டாங்களே! கமலா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 22ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல ஈஸ்வரி அழுது கொண்டு பாக்யா வீட்டிற்கு போய் இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா தவறி கீழே விழுந்ததற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று ஈஸ்வரி மீது கோபத்தில் இருக்கிறார். கீழே கிடந்த பூ ஜாடியின் மீது தவறுதலாக கால் வைத்ததால் தான் வழுக்கி விழுந்தார். ஆனால் கோபியிடம் உங்க அம்மா தான் என்னை பிடிச்சு தள்ளிட்டாங்க, நானே பார்த்தேன் என்று வில்லத்தனமாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே கமலாவிற்கு ஈஸ்வரியை பிடிக்காது ஈஸ்வரியை எப்படியாவது, ஈஸ்வரியை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று நினைத்திருந்த நிலையில் இப்போது ஈஸ்வரி தான் ராதிகாவை பிடித்து கீழே தள்ளினார். அவர்தான் இந்த குழந்தை அழிந்து போவதற்கு காரணம் என்று பல குற்றச்சாட்டுகளை ஈஸ்வரி மீது சுமத்தி கொண்டு இருக்கிறார்.
இதையெல்லாம் உண்மை என்று நம்பிய கோபியும் ஈஸ்வரியிடம் தன்னுடைய கோபத்தை காட்டி இருக்கிறார். இந்த நிலையில் ஈஸ்வரி வீட்டில் தனியாக உட்கார்ந்து கோபி மற்றும் ராதிகா சொன்ன வார்த்தைகளை எல்லாம் நினைத்து அழுது கொண்டிருக்கும் போது பாக்யா சென்று ஆறுதல் கூறியிருந்தார். ஆனாலும் ஹாஸ்பிடலில் நடந்த எந்த விஷயத்தையும் ஈஸ்வரி பாக்கியாவிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார்.
இப்படியான நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் ஹாஸ்பிடலில் இருந்து கோபி ராதிகாவை வீட்டுக்கு கூட்டிட்டு வருகிறார். ஏற்கனவே ராதிகா நான் இனி அந்த வீட்டிற்கு வர மாட்டேன் எங்க அம்மாவோடு அவங்க ஊருக்கு போயிடுவேன். உங்க அம்மா இருக்கிற வீட்டுக்கு நான் வரமாட்டேன் என்று சொல்லி இருந்த நிலையில் கோபி அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியாது.
ஆனால் இதற்கு ஒரு சுமுகமான முடிவு நான் எடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார். இந்த நிலையில் வீட்டிற்கு கோபி ராதிகாவை கூட்டிட்டு வந்ததும் கமலா ஈஸ்வரியை பார்த்து நீங்க இன்னும் இந்த வீட்டில் தான் இருக்கிறாயா? உனக்கு வெட்கமா இல்லையா? உன் பேர பிள்ளைகளுக்காக என் பிள்ளையோட குழந்தையை கொன்னுட்ட, இப்ப உனக்கு சந்தோஷமா? உன் பேர புள்ளைங்க நல்லாவே இருக்க மாட்டாங்க...
இனி நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று கோபமாக திட்ட, அதற்கு ராதிகாவும் ஆமா உங்களால தான் என்னுடைய குழந்தை இல்லாமல் போயிடுச்சு... நீங்கதான் அந்த குழந்தையை கலைத்துவிடு என்று சொல்லிட்டு இருந்தீங்க நீங்கதான் என்னை தள்ளி விட்டீங்க என்று மீண்டும் சொல்ல கோபியும் தன் பங்குக்கு எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான், நீங்க நினைச்ச மாதிரி குழந்தை செத்துப் போயிடுச்சு, என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க போயிருங்க என்று திட்ட அழுதபடியே ஈஸ்வரி பாக்யா வீட்டு வாசலில் நிற்கிறார்.
பாக்கியா ஈஸ்வரியை பார்த்து அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். அடுத்து இனி பாக்கியா என்ன முடிவெடுக்கப் போகிறார்? ஈஸ்வரி ராதிகாவை பிடித்து தள்ளவில்லை என்று எப்படி நிரூபிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் இந்த ப்ரோமோவிற்கு கீழே அதிகமான ரசிகர்கள் ஈஸ்வரி இப்படி அழுதுட்டு பாக்யா வீட்டிற்கு வருவதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications