பாக்கியலட்சுமி: ராதிகா கோபத்தில் சொன்ன வார்த்தை! அடிதடியில் ஈடுபட்ட கோபி.. மனம் மாறிட்டாங்களே ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 28ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபி மீண்டும் குடித்துவிட்டு பாரில் அடிதடியில் ஈடுபடுகிறார். ராதிகா கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அது பற்றி விரிவாக பார்ப்போம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி, ராதிகா மற்றும் கமலா எல்லோரும் வெளியே கிளம்புவதை பார்த்து கோபி எங்க போறீங்க என்று கேட்க மயூ செக்கப் போகும் விஷயத்தை சொன்னதும் கோபி மறந்தே போயிட்டேன் நான் கிளம்பி வரேன் என்று சொல்ல கமலா, உங்களுக்கு ஏன் மாப்பிள்ளை கஷ்டம் நீங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க நாங்க பார்த்துக்கிறோம் உங்களுக்கு உங்க அம்மாவ பத்தி யோசிக்கவே நேரம் இருக்காது என்று சொல்ல ராதிகா கேப் வந்ததும் வாங்க போகலாம் என்று கூப்பிடுகிறார்.

அப்போது மயூவை விட்டுட்டு போங்க நான் பாத்துக்குறேன் என்று கோபி சொல்ல, கமலா எதுக்கு உங்க அம்மா போன் பண்ணதும் நீங்க மயூவை விட்டுட்டு அப்படியே போயிடுவீங்க என்று திட்டி விட்டு போகிறார். பிறகு ஹாஸ்பிடல் போயிட்டு ராதிகா திரும்பி வந்ததும் கோபி என்ன சொன்னாங்க என்று கேட்க, கமலா நிம்மதியா எதையும் யோசிக்காமல் இருக்க சொன்னாங்க ஆனா உங்க வீட்ல எப்படி இருக்க முடியும்? உங்க அம்மா பண்ண வேலை அப்படியா என்று ஈஸ்வர பற்றி பேச கோபி ஒரு கட்டத்தில் கோபப்பட்டு எல்லை மீறி போறீங்க என்று கடுப்பாகிறார்.

அதற்கு ராதிகா அப்படித்தான் பேசுவோம் நடந்ததை தான் பேசுறோம். இங்க இருக்க முடிஞ்சா இருங்க இல்லன்னா வெளியே கிளம்பி போங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார். மறுபக்கத்தில் பாக்யா ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு கும்பகோணத்திற்கு வந்ததும் ஈஸ்வரி கும்பகோணத்தில் தன்னுடைய பழைய நினைவுகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கோபி பாரில் தன்னுடைய நண்பரிடம் ராதிகா சொன்னதைப் பற்றி சத்தமாக பேச பக்கத்தில் இருந்தவர்கள் கடுப்பாகி கோபியிடம் சண்டைக்கு போகின்றனர்.

கோபியும் அவர்களோடு கைகலப்பில் ஈடுபடுகிறார். அந்த நேரத்தில் எழில் மற்றும் செழியன் அங்கு வர எழில் கோபியை பார்த்ததும் அங்க போக வேண்டாம் என்று சொல்ல, செழியன் இல்லை இப்படியே வர விட முடியாது வா போய் பார்க்கலாம் என்று சண்டை போட்டவர்களை சமாதானம் செய்து கோபியை கூட்டிக்கொண்டு வர எழில் செழியன் கோபியை காரில் ஏற்றுவதை பார்த்து கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications