கோபி செய்த மோசமான வேலை.. ஆனால் ராதிகா சொன்னதை பாருங்க! பாக்கியாவுக்கு கிடைத்த துணை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 4ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாக்கியா ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவை நிறுத்த வேண்டும் என்று கோபி அமைச்சரின் பிஏவிடம் காசு கொடுத்து அமைச்சரை வேறு ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போகும் படி சொல்கிறார்.
அதே நேரத்தில் கோபிக்காக வரைந்து கட்டிக்கொண்டு வந்த ராதிகாவுக்கு பாக்யா செம அட்வைஸ் கொடுத்து ராதிகாவை பீல் பண்ண வைத்திருக்கிறார் அந்த வகையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபியும் அவருடைய நண்பர் சதீஷும் ரெஸ்டாரண்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சதீஷ்க்கு அவருடைய உறவினர் போன் பண்ணி பள்ளி ஆண்டு விழாவிற்கு சுகாதாரத்துறை அமைச்சரை கூப்பிட ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்கிறார். அப்போது இதை கேட்ட கோபி அமைச்சரை இந்த பங்ஷனுக்கு அனுப்பி விட்டால் பாக்யா ஃபங்ஷனுக்கு வரமாட்டார்.
இதனால் பாக்கியாவை அவமானப்படுத்திவிடலாம் என்று பிளான் போட்டு தனக்கு தெரிந்த வட்டாரத்தில் அமைச்சரின் பிஏ நம்பரை வாங்கி விடுகிறார். பிறகு சதிஷை கூட்டிக்கொண்டு போய்விடும் கோபி அமைச்சரின் பிஏவை நேரில் சந்தித்து பாக்யா ரெஸ்டாரண்ட் திறக்கும் அதே நாளில் பள்ளி ஆண்டு விழா ஒன்று இருப்பதும் அங்கு அமைச்சர் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
ஆனால் அந்த பிஏ அதே நாளில் வேறொரு நிகழ்ச்சி இருக்கிறது. அதனால் அங்கு வர முடியாது என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும் கோபி உங்களுக்கு எதுவும் கமிஷன் தருகிறேன் என்று நைசாக பேசி பிஏவை ஒப்புக்கொள்ள வைக்கிறார். இதனால் பாக்கியா ரெஸ்டாரண்ட் திறக்கும் அதே நாளில் சதீஷின் உறவினர் பங்க்ஷனில் அமைச்சரை அழைத்து வருகிறேன் என்று பிஏ வாக்குறுதி கொடுத்து விடுகிறார்.
உடனே கோபி வெற்றி மிதப்பில் வீட்டிற்கு வருகிறார். அப்போது வீட்டில் யார் யாருக்கெல்லாம் ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு பத்திரிக்கை வைப்பது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோபி வீட்டிற்குள் நுழைகிறார். அந்த நேரத்தில் ராமமூர்த்தி தன்னுடைய மருமகள் குறித்து பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான கோபி அன்னைக்கு அமைச்சர் வந்துருவாங்க என்று நக்கலாக பேசிவிட்டு போகிறார்.
பிறகு ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு ராதிகாவை கூப்பிடுகிறார். அதற்கு ராதிகா என் புருஷனை அசிங்கப்படுத்தி என்னை கூப்பிடுறீங்களா என்று கோபமாக கேட்க அதற்கு பாக்கியா உங்க புருஷன் என்னை எவ்வளவு கேவலப்படுத்தி இருக்கிறார் என்று உங்களுக்கும் தெரியும்? நான் ஒன்னும் ஞானி இல்ல எனக்கு ஹார்ட் ஆகும். நான் அவரை விட்டு பிரிந்த பிறகு கூட அவர் இந்த வீட்டிலே வந்து இருந்து கொண்டு என்னை ஒவ்வொரு விஷயத்திலும் மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறார்.
அப்போ எனக்கும் வலிக்கும் தானே? என்று கேட்க அதற்கு ராதிகா பதில் எதுவும் சொல்ல முடியாமல் அப்படியே நிற்கிறார். அதோடு பாக்யா நான் உங்களை அவர் மனைவி என்பதற்காக கூப்பிடல என்னுடைய ஆரம்பகட்ட வளர்ச்சியில் இருந்து இப்ப வரைக்கும் நீங்க தான் எனக்கு நிறைய துணையாய் இருந்திருக்கீங்க. அதுக்காகத்தான் கூப்பிடுறேன் வரதும் வராததும் உங்க இஷ்டம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போய் விடுகிறார்.
பிறகு ஜெனியின் டைவர்ஸ் விஷயம் ஞாபகம் வந்ததும் ஜெனிக்கு உன் விருப்பம் போல நீ யோசிச்சு செயல்படு. நான் உனக்கு எப்போதும் துணையாய் இருப்பேன் என்று பாக்யா வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். அதைக் கேட்டு ஜெனி ஃபீல் பண்ணுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications