பாக்யாவிற்காக கோபியை அடிக்க பாய்ந்த செழியன்.. ராதிகா எடுக்கப் போகும் முடிவு? பரபரப்பான தருணம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியா கேரக்டரை பற்றி தவறாக பேச எழில் மற்றும் செழியன் கோபம் அடைகின்றனர்.
பாக்யா யாருக்காக இப்படி அலங்காரம் பண்ணிக்கொண்டு இருக்கிறாய் என்று கோபி கேள்வி கேட்கிறார்.
செழியன் நடவடிக்கையை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறுவதற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. மே 12 மற்றும் 13ஆம் தேதிக்கான ப்ரோமோவில் ராதிகாவை திட்டிய ஈஸ்வரி இடம் ராதிகாவை கூட்டிக்கொண்டு வந்து கோபி கேள்வி கேட்கிறார்.
எதுக்கு நீங்க ராதிகாவை சும்மா சும்மா திட்டி கிட்டே இருக்கீங்க என்று ராதிகாவுக்கு ஆதரவாக ஈஸ்வரியை திட்டுகிறார் கோபி. பிறகு பாக்கியா பாக்கியா என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டே இருக்கிறீங்க. இங்க இவ கிளாசுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு எங்கேயோ போயிட்டு வரா.. முடியை கட் பண்ணி கொள்கிறார் அப்படி இப்படின்னு ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்கிற எல்லாமே அந்த ஆளு கூட பழகுறதுக்காக தானே இப்படி அலைகிறா என்று பாக்யாவை பார்த்து திட்டுகிறார்.
இதைக் கேட்ட அதிர்ச்சி கோபமான எழில், என்னையா சொல்ற என்று கோபியின் சட்டையை பிடித்து அடிக்க பாய்கிறார். அப்போது செழியன் குறுக்கே வந்து எழிலை பிடித்து தள்ளி கோபியின் சட்டையை பிடித்து அடிக்க கை ஓங்குகிறார். அதோடு இனிமே எங்க அம்மாவ பத்தி தப்பா பேசினீங்க தொலைச்சுருவேன் என்று கோபமாக மிரட்டுகிறார்.

பொறுமையை இழந்து எரிமலையாக வெடித்த செழியன் என தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கோபி சொன்ன வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியாகி நிற்கும் ராதிகா அடுத்து செழியன் அடிக்க கை ஓங்கி இருக்கும் நிலையில் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஏற்கனவே ராதிகா மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையும் பாசத்தையும் பாக்யா வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் பாக்கியாவை பற்றி கோபி தவறாக பேசுவதை தட்டிக் கேட்பாரா? அல்லது கோபியை எப்படி அடிக்கலாம் என கோபிக்கு ஆதரவாக ராதிகா பேச இருக்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அதே நேரத்தில் பாக்யா மற்றும் பழனிச்சாமி குறித்து கோபி பேசும் வார்த்தைகளை கேட்டு ஈஸ்வரி இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications