பாக்கியலட்சுமி: பெட்டியோடு போன ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த பாக்யா! வசமாக சிக்கிய கோபி.. செம முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் வீட்டை விட்டு கோபி போகும் போது அவரோடு ஈஸ்வரியும் கிளம்ப அப்போது பாக்கியா எதிர்பாராத செயலை செய்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதும் பிறகு இன்னொரு காரணம் சொல்லிக் கொண்டு கோபியும் ராதிகாவும் மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வருவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. ஏற்கனவே கோபி ராதிகாவை கல்யாணம் செய்தபோது வீட்டை விட்டு போயிருந்தார்.

பிறகு கொஞ்ச நாள் கழித்து இது என்னுடைய வீடு என்று மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தார். அதற்குப் பிறகு பாக்யா பணத்தை கொடுத்து வீட்டை அவர் பெயருக்கு மாற்றியதும் கோபியும் ராதிகாவும் வீட்டை விட்டு போயிருந்தனர். பிறகு கோபிக்கு நெஞ்சுவலி வந்ததால் மீண்டும் ஈஸ்வரி கோபியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து ராதிகாவும் கோபி இருக்கும் இடத்தில்தான் இருப்பேன் என்று பாக்யா வீட்டிற்கு வந்துவிட்டார். இப்போது ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிந்ததும் கோபியை வீட்டை விட்டு துரத்துகின்றனர். ஏற்கனவே கோபி ஒருமுறை வீட்டை விட்டு போனபோது இனியா கோபியோடு போய்விட்டார் என்று ராமமூர்த்தியும் கோபி வீட்டில் போயிருந்தார்.

இந்த நிலையில் இந்த முறை கோபியின் அழுகாச்சி நாடகத்தை நம்பி ஈஸ்வரியும் பெட்டியை தூக்கிக் கொண்டு கோபியோடு போகிறார். ஆனால் தான் வீட்டை விட்டுப் போகும் போது பாக்கியா வழக்கம் போல, "சொல்லுங்க அத்தை... நான் இப்ப என்ன பண்ணனும்" என்று கேட்பார் என்று நினைத்தார் போல, ஆனால் வெளியே போய் இருந்த பாக்கியா வீட்டிற்கு வரும் நேரத்தில் கோபியோடு ஈஸ்வரி பெட்டியோடு கிளம்பும்போது சற்றும் எதிர்பார்க்காத வகையில் பாக்கியா வழி விட்டு போகலாம் என்கிற மாதிரி நின்று கொண்டு இருந்தார்.
இதை பார்த்ததும் ஈஸ்வரி கோபியை என்னால் தனியா விட முடியாது என்று சொல்ல, அதற்கு பாக்கியா நான் எதுவும் சொல்லவே இல்லையே என்று சொன்னதும் கோபி, ராதிகா, ஈஸ்வரி மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதோடு ஈஸ்வரி அப்போ நான் எப்ப வீட்டை விட்டு போவேன்னு நீ காத்துட்டு இருந்தியா?? என்று கோபியோடு கோபமாக கிளம்பி போகிறார்.

மறுபக்கத்தில் ராதிகா வீட்டிற்கு கோபி அம்மாவோடு வந்ததை பார்த்து ராதிகா அம்மா அதிர்ச்சி அடைகிறார். ஏற்கனவே ராதிகா அம்மாவிற்கும் ஈஸ்வரிக்கும் கொஞ்சம் கூட பிடிக்காது. இருவரும் மாறி மாறி சண்டை போடுவார்கள். இப்போ ஒரே வீட்டில் இருக்க போகிறார்கள். இனி ராதிகா வீட்டில் அவமானப்பட்டு ஈஸ்வரி மீண்டும் பாக்யாவிடம் வரப்போகிறார் என்று தான் தெரிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications