பாக்கியலட்சுமி: உயிருக்கு போராடும் ராமமூர்த்தி! ஜெனிக்கு ஏன் இந்த வீராப்பு? கோபிக்கு வந்த மிரட்டல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 29ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஜெனியின் அஜாக்கிரதையால் ராமமூர்த்திக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். மறுபக்கத்தில் ஈஸ்வரிக்கு பாக்யா வீட்டில் பிரச்சனை வருகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் எல்லா வேலையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று வீராப்பாக பேசிக் கொண்டிருந்த ஜெனி அசந்து தூங்கிவிட, தூங்கிக் கொண்டிருந்த ராமமூர்த்தி எழுந்து சாப்பிடுவதற்கு முன்னாடி என்ன மாத்திரை சாப்பிடணும்னு தெரியலையே என்று யோசித்து பிறகு ஒருநாள் மாத்திரை சாப்பிடாமல் ஒன்னும் ஆகாது என்று சாப்பாட்டை போட்டு சாப்பிட்டுவிட்டு தூங்கி விடுகிறார்.

அந்த நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்த ஜெனி தாத்தாவுக்கு சாப்பாடு கொடுக்கணுமே என்று வந்து பார்க்க ராமமூர்த்தி தூங்கிக் கொண்டிருக்கிறார். உடனே கிச்சனுக்கு போய் சாப்பாடு எடுத்து இருக்கிறாரா? என்று ஜெனி செக் பண்ண அங்கு சாப்பாடு எடுத்து இருப்பதை பார்த்ததும் தாத்தா சாப்பிட்டார் என்று தெரிந்து கொள்கிறார். அந்த நேரத்தில் ஜெனி தாத்தாவுக்கு மாத்திரை கொடுத்தாளா இல்லையான்னு தெரியலையே என்று பாக்யாவும் வீட்டிற்கு வந்து விடுகிறார்.
பாக்யா ஜெனி இடம் மாமாவுக்கு மாத்திரை, சாப்பாடு கொடுத்தியா என்று கேட்க, அதற்கு ஜெனி சாப்பிட்டு இருக்காரு... ஆனா மாத்திரை சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. பாப்பா அழுதுட்டே இருந்தா, அவளை தூங்க வெச்சிட்டு அப்படியே தூங்கிட்டேன் என்று சொன்னதும் ரூமுக்கு வந்து மாத்திரை அட்டையை எடுத்து பார்த்து அங்கு ராமமூர்த்தி மாத்திரை சாப்பிடவில்லை என்பது தெரியவர அவரை எழுப்ப முயற்சி செய்யும்போது ராமமூர்த்தி மயக்கத்தில் எழுந்து கொள்ளாமல் இருக்கிறார்.
உடனே இருவரும் அதிர்ச்சியடைந்து எழிலுக்கு போன் போட்டு ஆட்டோவை கூட்டிட்டு வர சொல்கின்றனர். பிறகு ராமமூர்த்தியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகின்றனர். ஜெனி என்னால தான் தாத்தாக்கு இப்படி ஆகிட்டு என்று அழுது புலம்பி கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ராமமூர்த்திக்கு டிரீட்மென்ட் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். பிறகு ஜெனி ராமமூர்த்தி இடம் மன்னிப்பு கேட்க, ராமமூர்த்தி எனக்கு ஒன்னும் இல்லம்மா, நான் பாக்கியாவுக்கு இல்லன்னா அமிர்தாவுக்கு போன் போட்டு கேட்டிருக்கணும் என்று சமாதானம் செய்கிறார்.
மறுபக்கத்தில் ராதிகா வீட்டில் கமலா ராதிகாவுக்கு காபி போட்டு கொடுக்க அத்தைக்கு காபி போட்டு கொடுத்தாச்சா என்று ராதிகா கேட்க, அதற்கு கமலா நான் எதற்கு கொடுக்கணும் என்று சொல்ல, உடனே நானே அவங்களுக்கு போட்டு கொடுக்கிறேன் என்று ராதிகா எழுந்திருக்க கமலா அவரை உட்கார சொல்லிவிட்டு நானே போட்டு கொடுக்கிறேன் என்று ஒரு காபி போட்டு கொண்டு போய் ஈஸ்வரியிடம் கொடுக்கிறார்.
அதை ஈஸ்வரி குடித்து பார்த்துட்டு என்ன காப்பி இது நல்லாவே இல்லை என்று சொல்கிறார். உடனே கமலா வேண்டுமென்று அந்த கப்பை தள்ளிவிட்டு விடுகிறார். பிறகு ஈஸ்வரி இடமே நீங்க ஏன் கப்பை கீழே போட்டு உடைச்சீங்க என்று கமலா கேட்க ராதிகாவும் அங்கு வந்து ஈஸ்வரியை திட்டுகிறார்.
உடனே ஈஸ்வரி கோபிக்கு போன் போட்டு கிளம்பி வா என்று சொல்ல கோபி கிச்சன்ல நிறைய வேலை இருக்கு என்று சொன்னதும் ஈஸ்வரி உனக்கு உங்க அம்மா முக்கியமா? கிச்சன் முக்கியமா? என்று பிளாக்மெயில் செய்கிறார். உடனே கோபி வரேன்மா என்று போனை வைக்க, கோபி வரட்டும் அவங்க கிட்ட சொல்லிக்கிறேன் என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications