பாக்யாவை பாடாய்படுத்திய ஈஸ்வரிக்கு இது தேவைதான்! கதறி அழும் ஜெனி.. மாட்டிக்கொண்ட கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 30ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ஏற்கனவே ஈஸ்வரி கமலாவிடம் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டியதால் கமலா இப்போது ரிவெஞ்ச் எடுக்கிறார். இதில் கோபி மாட்டிக்கொண்டு தவியாய் தவிக்கிறார். மறுபக்கத்தில் ஜெனி அழுது கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி கோபியை வீட்டிற்கு வரவைத்து வீட்டில் நடந்ததை பற்றி அழுது புலம்புகிறார். அதோடு நான் காபியை கொட்டல கோபி, ராதிகாவோட அம்மா தான் கொட்டுனா என்று அழுது கொண்டே சொல்ல... கமலாவுக்கு ஈஸ்வரிக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. இதனால் கோபி ஈஸ்வரியை தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்.

மறுபக்கத்தில் தாத்தாவின் நிலைமையை நினைத்து ஜெனி அழுது கொண்டே இருக்க செழியன் சமாதானம் செய்கிறார். அப்போது பாக்யாவும் அங்கு வந்து ஜெனிக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். இதைத் தொடர்ந்து கோபி ரெஸ்டாரண்டில் இருக்கும்போது ஈஸ்வரி வெந்நீர் வேண்டும், காபி வேணும் என்று கோபியை நச்சரித்து கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் செஃப்வந்த ஆர்டரை மாற்றி கொடுத்து விட, அவரை கோபி மிரட்டுகிறார். அதோடு அங்கிருக்கும் ஸ்டாப் எல்லாரும் சரியாக வேலை செய்யாததால் அவர்களை மிரட்டி கறாராக பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி இப்படி பேசாத கோபி வேலை பார்க்கிறவங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க நாம தான் அவங்கள சரியா வழிநடத்தனும் என்று அட்வைஸ் சொல்லிவிட்டு நாம எப்போ வீட்டுக்கு போகலாம் கோபி எனக்கு இங்கே இருக்க கஷ்டமா இருக்கு என்று சொல்ல, சரி என்று கோபி வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.
அந்த நேரத்தில் மயூ தான் வரைந்த படத்தை ராதிகாவிடம் காட்டிக் கொண்டு இருக்க, எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். ஈஸ்வரி திரும்பவும் வீட்டிற்கு வந்ததை பார்த்ததும் கமலா முறைத்துக் கொண்டிருக்கிறார். கோபியிடம் மயூ தான் வரைந்த ஓவியத்தை காட்ட கோபி அதை பாராட்டுகிறார். பிறகு நான் பிரஷ் ஆகிட்டு வரேன் என்று கோபி உள்ளே செல்ல ஈஸ்வரியிடம் கமலா வம்பு இழுக்கிறார்.
இதனால் ஈஸ்வரியும் அவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது கமலாவை வீட்டை விட்டு போகுமாறு ஈஸ்வரி சொல்ல, நான் எதுக்கு போகணும்? உன்னை தான் வீட்டை விட்டு துரத்திட்டாங்க என்று கமலா பதிலுக்கு சொல்ல, உனக்கு வெட்கம் இல்லையா? மருமகன் வீட்டில் வந்து இருக்கா என்று ஈஸ்வரியும் கேட்கிறார். அதற்கு கமலா நீதான் விவாகரத்தான மருமக வீட்டுல இருக்கிற என்று திட்டுகிறார்.
அதற்கு நான் ஒன்னும் ஏற்கனவே கல்யாணம் கட்டிக்கிட்டவனுக்கு என் மகளை கட்டி வைக்கல என்று சொல்ல ராதிகா அதிர்ச்சியாகிறார். இதனால் மூவருக்கும் வாக்குவாதம் தொடர அங்கு வந்த கோபியிடம் கமலாவை வீட்டை விட்டு வெளியே போகுமாறு ஈஸ்வரி சொல்கிறார். இதைக் கேட்ட ராதிகா இது என் வீடு எங்கம்மா எனக்காகத்தான் இருக்காங்க என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி கோபியிடம் அப்போ இது உன் வீடு இல்லையா? என்று கேட்டு கமலாவை வீட்டை விட்டுவிட்டு போக சொல்லு என்று பிடிவாதமாக நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications