நன்றி மறந்து பேசிய கோபி.. முதியோர் இல்லத்திற்கு கிளம்பிய ஈஸ்வரி.. ராதிகா கொடுத்த வார்னிங்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 31ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரி மற்றும் கமலாவின் சண்டையை பார்த்து கோபமான கோபி திட்டியதால் ஈஸ்வரி வீட்டிலிருந்து முதியோர் இல்லத்திற்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறார். அதற்கு ராதிகா வார்னிங் கொடுத்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரியும் கமலாவும் வாக்குவாதத்தில் ஈடுபட, கொஞ்சம் அமைதியாக இருங்கம்மா.. நீங்க தேவை இல்லாம கோவப்படுறீங்க.. உங்களால நான் இந்த பிசினஸ்சும் போயி நீங்க சொன்ன மாதிரி ஓட்டாண்டியாக நடுத்தெருவுலதான் நிற்கப் போறேன் என்று கோபப்பட்டு சொல்ல, இதனால் அதிர்ச்சியடையும் ஈஸ்வரி என்னால் உனக்கு எந்த பிரச்சினையும் வேண்டாம். அந்த வீட்டில் உன்னை நம்பி போக வேண்டாம்னு எல்லாரும் சொன்னாங்க.

கேட்காம வந்தது என்னோட தப்பு தான் என்று ஈஸ்வரி கோபப்படுகிறார். திரும்பவும் அந்த வீட்டுக்கு நான் போனா மரியாதை இருக்காது. அதனால நான் எங்கேயாவது போறேன். ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு போய் உட்கார போறேன்... உன்ன பெத்ததுக்கு இதுதான் நிலைமைனா அப்படியே இருக்கட்டும் என்று சூட்கேஸை தூக்கிக்கொண்டு கிளம்ப கோபி அதிர்ச்சியாகி நான் தப்பு பண்ணிட்டேன் தெரியாம அப்படி பேசிட்டேன் என்று ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்டு கோபி தடுத்து நிறுத்துகிறார்.
மறுபக்கத்தில் பாக்கியா அமிர்தாவிடமும் ஜெனியிடமும் வேலைகளை பிரித்து சொல்லிவிட்டு ரெஸ்டாரெண்ட் கிளம்ப எழில், ராமமூர்த்தி எல்லோரும் ஏதாவது பிரச்சனைனா சொல்லுமா உடனே வந்துருவோம் என்று சொல்லி அனுப்புகின்றனர். அதைத் தொடர்ந்து ராதிகா கோபிக்கு பிளாக் காபி கொண்டு வந்து கொடுத்து இது எல்லாத்துக்கும் ஒரே தீர்வு உங்க அம்மாவை அவங்க வீட்டில கொண்டு விடுறது தான்.
நீங்க எப்ப எல்லாம் பாக்கணும்னு தோணுதோ அப்ப எல்லாம் போய் பாத்துட்டு வாங்க என்று சொல்ல கோபி அப்படியெல்லாம் முடியவே முடியாது என்று சொல்லிவிடுகிறார். பிறகு ஈஸ்வரி ரூமில் படுத்து இருக்கும் போது கோபி ராதிகாவிடம் எதுவும் சொல்லாமலே ஈஸ்வரிக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுக்க ஈஸ்வரி குடிக்க மாட்டேன் என்று பிரச்சனை செய்ய கோபி சமாதானம் செய்து காப்பியை குடிக்க வைக்கிறார்.

பிறகு ஈஸ்வரி கோபியிடம் உனக்காக நகை எல்லாம் கழட்டி கொடுத்தவ நான். ஆனால் நீ என்னையே இப்படி சொல்லிட்டல்ல என்று வருத்தப்படுகிறார். அதோடு இனிமேல் நான் என்ன நடந்தாலும் உனக்கு போன் பண்ண மாட்டேன். இவங்க என்னை குத்திக் கொண்டாலும் உனக்கு போன் பண்ண மாட்டேன் என்று சொல்கிறார்.
பிறகு கமலா கோபியிடம் எதையோ சொல்ல வர அதற்கு கோபமான கோபி போதும், ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு முறை அட்வைஸ் பண்றதை நிறுத்திக்கோங்க அத்தை என்று அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு ராதிகா நீங்க பிசினஸ் மட்டும் பாருங்க. இங்கு என்ன நடந்தாலும் அதை நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications