கோபி விஷயத்தில் பாக்யா எடுத்த முடிவு.. ஆனால் ஈஸ்வரி இப்படி சொல்லுறாங்க? ராதிகாவும் சளைத்தவர் இல்ல
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தில் ஈஸ்வரி முக்கிய முடிவு எடுத்திருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பாக்கியா கோபி குறித்து வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவும் செல்வியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செல்வி உனக்கு வருத்தமா இல்லையா? என்று கேட்க அதற்கு பாக்கியா இப்போ நான் உனக்கு வருத்தப்படனுமா? என்று கேட்க, செல்வி நீ என்னைக்குமே வருத்தப்படக்கூடாது என்று நினைக்கிற முதல் ஆளு நான்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு பாக்யா கோபி எப்பவுமே என்னை பிடிக்காது என்று சொல்லி கொண்டே இருப்பாரு. நான் மேக்கப் பண்றது பிடிக்காது. பவுடர் போட்டா பிடிக்காது. நான் என்ன பண்ணினாலும் பிடிக்காது. காரணம் அவருக்கு என்னை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. நான் சரியான அம்மாவா இல்லைன்னு சொல்லுவாரு இன்னைக்கு அவர் பண்ணுற விஷயத்தை பார்த்து அருவருப்பா இருக்கு. அவரை விவாகரத்து பண்ணுனது தான் நான் செஞ்ச சரியான விஷயம்.
இனிமே அவர் பேசுவதற்கெல்லாம் அமைதியா இருக்க மாட்டேன் என்று பொங்குகிறார். அதை தொடர்ந்து ஈஸ்வரி தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிற அதை பார்த்த ராமமூர்த்தி என்ன விஷயம் என்று விசாரிக்கிறார். அதற்கு ஈஸ்வரி சாப்பிட்டது செரிக்கல என்று சொல்லி ஹாலுக்கு வர அங்கே கோபியும் தூங்காமல் இருக்கிறார். அம்மாவை பார்த்ததும் கோபி ஏன் அம்மா தூங்கலையா என்று கேட்க அதற்கு ஈஸ்வரி நீ சொன்ன விஷயத்தை நினைச்சு எனக்கு தூக்கம் வரல.

இந்த ராதிகா ஏன் எப்படி இருக்கிறா.. நீ இப்ப அப்பாவாக போற என்ற விஷயம் உன் பிள்ளைகளுக்கு தெரிஞ்சா உன்னை மதிக்க மாட்டாங்க என்று சொல்ல, அதற்கு கோபி நீங்க இப்படி சொல்லுறீங்க ஆனா ராதிகா பிள்ளைங்க கிட்ட நான் கர்ப்பமா இருக்குற விஷயத்தை சொல்லணும் என்று சொல்லுறா. நான் என்னதான் செய்வது நெஞ்சே வெடிச்சு செத்துருவேன் போல இருக்கு என்று வருத்தப்படுகிறார்.
அதோடு நானும் இந்த குழந்தை வேண்டாம் என்றுதான் சொன்னேன். ஆனா அவ கேட்கல என்று சொல்லி கண்கலங்க ஈஸ்வரி நீ அழாத சரி விடு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்கிறார். மறுநாள் காலையில் கோபி தூங்காமல் ராதிகா பக்கத்தில் உட்கார்ந்திருக்க ராதிகா வாக்கிங் போகலையா என்று கேட்க, அதற்கு கோபி டயர்டா இருக்கு போகல என்று சொல்கிறார்.

பிறகு இருவருக்கும் மீண்டும் குழந்தை பற்றிய பேச்சு வரும்போது ராதிகா இன்னைக்கே உங்க குழந்தைகளுக்கு சொல்லணும் என்று சொல்ல கோபி அதிர்ச்சியாகிறார். அதற்கு ராதிகா நீங்க இப்போ வீட்ல சொல்ல போறீங்களா? இல்ல உங்க அம்மா குழந்தைக்கு ஏதாவது பண்ணுன பிறகு சொல்ல போறீங்களா? என்று கேட்க கோபி ஏன் இப்படி எல்லாம் பேசுற என்று சொல்ல,
ஆமா உங்க அம்மா சீரியலில் வரும் வில்லி மாதிரி என் குழந்தையை கலைப்பதற்கு ஏதாவது பண்ணுவாங்க என்று சொல்ல, கோபி அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க உனக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகாமல் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வாக்கிங் போறேன் என்று கிளம்புகிறார்.

அதற்கு ராதிகா இப்பதான வாக்கிங் போகல டயர்டா இருக்கு என்று சொன்னீங்க என்று கேட்க, இப்போ நீ பேசின வார்த்தைகளால் எனக்கு டயர்ட் எல்லாம் போயிடுச்சு நான் வாக்கிங் போறேன். போயிட்டு வந்து என் பிள்ளைங்க கிட்ட விஷயத்தை சொல்லுறேன் என்று கிளம்பி போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது












Click it and Unblock the Notifications