கோபியை அவமானப்படுத்தும் ராதிகா.. சந்தோஷத்தில் ஆட்டம் போடும் மயூ மற்றும் பாட்டி
சென்னை: பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மயூ மற்றும் அவருடைய பாட்டி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஒரு பக்கம் கோபியும் ராதிகாவும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது இவர்களுக்கு இந்த ஆட்டம் தேவையா என்று கலாய்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த மாதிரியே கோபி ராதிகாவோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தால் இனி ராதிகா என்ன முடிவு எடுப்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். அதனாலேயே இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் டிஆர்பி யில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த சீரியலில் வில்லனாக இருக்கும் கோபிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். கோபி என்னதான் பாக்யாவை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டாலும் அதை அதிகமான ரசிகர்கள் திட்டிக் கொண்டு இருந்தாலும் கோபி ராதிகாவிடம் மாட்டிக் கொண்டு படும் இன்னல்களை பார்த்து இது உனக்கு தேவைதான் என்று பலர் மனம் விட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் இரண்டு தரப்பான கருத்துக்கள் குவிந்து வந்தாலும் தற்போது கோபி ராதிகாவோடு பாக்யா வீட்டிற்கு வந்து இருந்து கொண்டு செய்யும் அழும்பல்கள் படும் அவமானங்கள் பார்க்கும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருப்பதாகவே கூறி வருகின்றனர். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கோபி தன்னுடைய மகள் இனியா மீது பாசத்தை கொட்டுவதை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் ராதிகாவும் கோபப்பட்டு கொண்டே இருக்கிறார்.
உங்களை அவமானப்படுத்தும் இனியாவும் அவங்க குடும்பமும் தான் உங்களுக்கு முக்கியம் அதே நேரத்தில் நானும், நீங்க தான் வேண்டும் என்று ஆசைப்படும் மயூவும் உங்களுக்கு முக்கியமே இல்லை என்று ராதிகா சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது மயூ மற்றும் ராதிகாவின் அம்மா இருவரும் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் என்னதான் பாக்யாவும் ராதிகாவும் அடித்துக் கொண்டும் முட்டி மோதிக் கொண்டும் இருந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் ஹாயாக ஜாலியாக ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு வருவது வழக்கம்தான். அந்த மாதிரி தான் மயூவும் அவருடைய பாட்டியாக நடிக்கும் நடிகை ஷீலாவும் ஆட்டம் போட்டு இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இனி ராதிகா என்ன முடிவு எடுப்பார் என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
-
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications