ரோட்டில் நடந்த சண்டை..கோபிஅப்படி பண்ணினது எதிர்பார்க்கல.. உண்மைகளை உடைத்த பாக்கியலட்சுமி மயூ
சென்னை: பாக்கியலட்சுமி சீரியல் மயூ கேரக்டரில் பேபி ஷெரின் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஷெரின் பேட்டி ஒன்றில் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ் பற்றி பல தகவல்களை கூறியிருக்கிறார்.
திடீரென்று கோபி பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலக இருக்கிறேன் என்று கூறி பிறகு மீண்டும் நடிக்கிறேன் என்று கூறியிருந்தார் இது குறித்தும் ஷெரின் பேசியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. டிஆர்பி யிலும் இந்த சீரியல் டாப்பில் இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் தற்போது கூட சமீபத்தில் விஜய் அவார்ட் ஃபங்ஷனில் இந்த சீரியலுக்கு அதிகமான அவார்ட் கிடைத்தது. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக இந்த சீரியல் பல அவார்டுகளை தட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அந்த கேரக்டரின் பெயரிலே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் ராதிகாவின் மகளாக மயூ கேரக்டரில் பேபி ஷெரின் நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்கூல் படித்துக் கொண்டே இந்த சீரியலிலும் ஸ்கூல் படிக்கும் ஒரு குட்டி குழந்தையாக மயூ கேரக்டரில் பலருடைய மனதையும் கவர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் பலமுறை இனியாவோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் பிறகு சமாதானமாக போகி ரசிகர்களின் மத்தியில் அனுதாப அலைகளை பெற்று இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஷெரின் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் பலரையும் பற்றி பல தகவல்களை கூறியிருக்கிறார். அந்த வகையில் கோபி திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகப் போகிறேன் என்று சொன்னது எல்லோருக்குமே ஷாக்காக இருந்தது. அவர் எப்போதும் கலகலப்பாக இருப்பார். சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பார். அதுபோல இந்த சீரியலின் கதையில் தத்ரூபமாக நடித்துக் கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் இருந்தே அவர்தான் இந்த சீரியலில் கோபியாக நடித்ததால் ரசிகர்களும்அதிகமாக அதிர்ச்சி அடைந்தனர். அவர் சீரியலை விட்டு விலகப் போகிறார் என்று செய்தி வைரலான நேரத்தில் தான் ராதிகாவும் இந்த சீரியலை விட்டு விலகப் போகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் பிறகு கோபி மீண்டும் சீரியலில் நடிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டார். அதுதான் எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

அதோடு கோபி நடு ரோட்டில் ராதிகாவோடு சண்டை போட்டது பற்றி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அதற்கு கோபி இடம் சண்டை போட்டுக்கொண்டு ராதிகா கேப் புக் பண்ணி போய்விடலாம் என்று இருக்கும்போது பின்னாடியே வந்து ரோட்டில் கோபி சண்டை போடுவார். அது நிஜத்தில் தப்புதான்.
ஆனால் சீரியலின் கதைக்காக தான் அப்படி பண்ணுனாங்க. அந்த கதையிலும் கோபி ரோட்டில் காலில் விழுந்து எல்லாம் நடித்திருப்பார் என்று மயூ பல தகவல்களையும் அதுபோல அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் எப்படி எல்லாம் பேசுவார்கள், சூட்டிங் ஸ்பாட்டில் எப்படி எல்லாம் இருப்பார்கள் என்றும் மிமிக்ரி செய்தும் அந்த வீடியோவில் காட்டியிருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications