பாக்கியலட்சுமி: கோபிக்கு விழுந்த குத்து.. பாக்கியா ராக் அதனால ஈஸ்வரி ஷாக்.. திடீரென கதையில் மாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யா பொருட்காட்சி காண்ட்ராக்ட் எடுப்பதற்காக பத்தாயிரம் பணத்தைக் கட்டி இருக்கும் நிலையில் அதை தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்று அவர்கள் கூறி விடுகிறார்கள்.

இதனால் பாக்கியா காண்ட்ராக்ட் எடுக்க முடியாது என்று கோபி சவால் விட அதற்கு பாக்கியா பதிலடி கொடுக்கிறார். இந்நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பழனிச்சாமி சொன்ன பொருட்காட்சி காண்ட்ராக்டரை பார்ப்பதற்காக பாக்கியா எழில் கூட்டிக்கொண்டு போகிறார். அங்கு போனதும் பார்ம் பீல் பண்ணும் போதே முதலில் 10,000 ரூபாய் கட்ட வேண்டும் என்று சொல்கின்றனர். அதற்கு எழில் நான் போய் ஏடிஎம்மில் பணம் எடுத்துட்டு வருகிறேன் என்று சொல்ல, அதற்கு வேண்டாம் நான் வீட்டு செலவுக்கு பணம் வைத்திருக்கிறேன் என்று பாக்கியா தான் வைத்திருந்த பத்தாயிரம் பணத்தை எடுத்து ஃபீல் பண்ணி கொடுக்கிறார்.
பிறகு அட்வான்ஸாக ஒரு லட்சம் பணம் வேண்டும் என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைக்கிறார். அதனால் காண்ட்ராக்ட்காரர்கள் இடம் நான் அப்புறம் வந்து பணம் கட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வருகின்றனர். அப்போது பாக்கியா பழனிசாமிக்கு போன் போட்டு நீங்க சொன்ன பொருள்காட்சி காண்ட்ராக்ட்க்கு போயிருந்தோம். அட்வான்ஸ் ஒரு லட்சம் பணம் கேட்டாங்க.
ஏமாத்திட மாட்டாங்களா? வேலை கிடைச்சதுமா என்று கேட்க, அதற்கு பழனிச்சாமி அதையெல்லாம் இல்லை, கவர்மெண்ட் ஆபீஸ் ஏமாத்திட மாட்டாங்க. பணத்துக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? நான் வேணும்னா உங்களுக்கு கடனா ஒரு லட்சம் ரூபாய் தரேன் என்று கேட்கிறார். அதற்கு பாக்கியம் பிரண்ட்ஸ்க்குள்ள கடன் வாங்க கூடாது பணத்துக்கு நான் வேற ஏதாவது அரேஞ்ச் பண்ணிக்கிறேன் என்று மறுத்து விடுகிறார்.
அடுத்த வீட்டிற்கு வந்ததும் பாக்கியா காண்ட்ராக்ட் கிடைக்க அட்வான்ஸ் ஒரு லட்சம் பணம் வேணும் என்பதை பற்றி சொல்ல உடனே கோபியும் ஈஸ்வரியும் இதுவெல்லாம் தேவையில்லாத வேலை பணத்துக்கு எங்க போக என்று பாக்யாவை கேட்கிறார். அதற்கு எழில் அம்மா உனக்கு பணம் நான் ரெடி பண்ணி தரேன் என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம் நானே பாத்துக்கிறேன் என்று வழக்கம்போல பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார்.
அடுத்து பாக்கியா செல்வியிடம் நம்ம மாவு மெஷினை யாரோ கேட்டதா சொன்னேன்ல அவங்ககிட்ட வித்திடலாம் பேசு என்று சொல்கிறார். அதோடு மீதி பணத்துக்கு அந்த ஹவுஸ் ஓனரிடம் வாடகை பணத்தை சீக்கிரம் வாங்கி தாங்க மாமா என்று ராமமூர்த்தி இடம் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications