மீண்டும் முதலில் இருந்தா? ஜெனிக்கு அதிர்ச்சி கொடுத்த நிலா.. பட்டும் திருந்தாத கோபிக்கு ராதிகா பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா கேட்டரிங் ஆர்டர் நடத்துவதற்காக மளிகை கடையில் கடன் வாங்குவது குறித்து அவமானப்படுத்தும் கோபிக்கு ராதிகா பதிலடி கொடுக்கிறார்.
ஜெனியை சமாதானம் படுத்துவதற்காக ஜெனி வீட்டிற்கு எழில் மற்றும் அமிர்தா போயிருக்கிறார். அப்போது எதிர்பாராத கேள்வியை நிலா கேட்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பொருள்காட்சி காண்ட்ராக்ட் ஆர்டரை கையில் வாங்கிய சந்தோஷத்தில் பாக்கியா இருக்கிறார். அப்போது ராதிகா பாக்கியாவிற்கு கை கொடுத்து வாழ்த்துக்கள் என்று சொல்கிறார். இதை பார்த்து கோபமான செல்வி அவங்களே நம்ம கேட்டரிங் ஆர்டரை கெடுப்பாங்கலாம். பிறகு வேற இடத்தில் நமக்கு ஆர்டர் கிடைத்தால் இவங்க வாழ்த்து சொல்லுவாங்களாம்.

இது என்ன நியாயம் என்று கேட்க அதற்கு ராதிகா எனக்கும் பாக்யாவுக்கும் போட்டி என்று வந்தால் அதுல நான் தான் ஜெயிக்கனும்னு நினைப்பேன். அதனாலதான் அவங்க என் ஆபீஸ்ல வேலை செஞ்சது எனக்கு பிடிக்கல. அதனாலதான் நான் உங்களை வேலையை விட்டு தூக்கினேன். ஆனால் அவங்க மத்த இடத்துல ஜெயிக்கணும்னு தான் நான் நினைப்பேன் என்று சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து செழியன் ஜெனி வீட்டிற்கு போய் ஜெனி எப்படி இருக்க, பாப்பா எப்படி இருக்கா, நான் வீட்டை விட்டு வெளியே போனாலே என் கால் இங்கே தான் வருகிறது. என்னை மன்னிச்சிடு. உன் ஞாபகமா இருக்கு என்று பேச, அதற்கு ஜெனியின் அம்மா பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப இங்க வந்து சாரி கேக்குறீங்களா? கிளம்புங்க என்று திட்டுகிறார். அதோடு ஜெனியும் அழுது கொண்டே இருக்கிறார்.
அடுத்ததாக பாக்யாவும் ஜெனிக்கு வாய்ஸ் மெசேஜ் பண்ணி நலம் விசாரித்துக் கொண்டு பொருட்காட்சி காண்ட்ராக்ட் கிடைத்துவிட்டது... உன்னை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று சொல்ல, அதைக் கேட்டு ஜெனி ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். பிறகு எழில் அமிர்தாவை கூட்டிக்கொண்டு ஜெனியை பார்ப்பதற்காக அங்கு போக அப்போது அமிர்தா நீங்க நினைச்ச மாதிரி கொஞ்ச நாளில் எல்லாமே சரியாகிவிடும்.

நீங்கள் திரும்ப வீட்டுக்கு வருவீங்க என்று ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நிலா எப்ப நீங்க வீட்டுக்கு வருவீங்க என்று ஜெனி இடம் கேட்க, அதற்கு நான் சீக்கிரமா வருவேன் என்று ஜெனி சொல்கிறார். அதைத்தொடர்ந்து கோபியும் ராதிகாவும் ஷாப்பிங் பண்ண போயிருக்கின்றனர். அங்கு பாக்கியா முதல் நாள் சமைக்கிறதுக்கு மட்டும் நீங்க கடனா பொருள் தாங்க அடுத்த நாள் நான் பணம் கொடுத்து வாங்குகிறேன் என்று கடைக்காரரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

இதை பார்த்த கோபி கடனுக்கு பொருள் வாங்கி நம்ம குடும்ப மானத்தை வாங்குகிறார் என்று திட்ட, அதற்கு ராதிகா அவங்க கடனுக்கு பொருள் வாங்கினால் உங்களுக்கு என்ன கஷ்டம் பேசாம வாங்க என்று திட்டி கூட்டிக்கொண்டு போகிறார். அதைத் தொடர்ந்து அந்த கடை ஓனர் பாக்யாவிற்கு பொருளை கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications