பாக்கியலட்சுமி: கடைசியாக பாக்யாவிடம் கோபி சொன்ன வார்த்தை.. ஈஸ்வரியின் மனமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோடில் கோபிக்கு மீண்டும் ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. அப்போது எல்லோருக்கும் போன் செய்தாலும் யாரும் போனை எடுக்காமல் இருக்கும் நிலையில் பாக்கியா தான் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார். பிறகு என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி கார் ஓட்டி கொண்டு வரும்போது இனியா கேட்ட கேள்விகளையும் ராதிகா பேசிய வார்த்தைகளையும் நினைத்து பார்த்துக் கொண்டே வருகிறார். கொஞ்ச நேரத்தில் கோபிக்கு நெஞ்சு வெளிவர ராதிகாவுக்கு போன் போடுகிறார். ஆனால் ராதிகா ஃபோனை எடுக்காமல் இருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

உடனே செழியனுக்கு போனை பண்ண அவரும் போன் எடுக்கவில்லை. பிறகு ராதிகா வீட்டுக்கு போன் பண்ணி கொண்டே இருக்கிறார். அதனால் ராதிகா போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்து விடுகிறார். உடனே ராதிகாவின் அம்மாவிற்கு ஃபோன் போட அவர் ராதிகாவிடம் வந்து சொன்னதும் ராதிகா போனை எடுக்க வேண்டாம் போய் படு என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு இனியாவிற்கு ஃபோன் போட அவரும் எடுக்காததால் பாக்யாவிற்கு ஃபோன் போடுகிறார். உடனே பாக்கியா எழுந்து இவர் என்ன இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்கிறார் என்று யோசித்து போனை எடுக்காமல் இருக்க ஒரு வாய்ஸ் மெசேஜ் போடுகிறார். உடனே பாக்கியா போன் பண்ண பாக்கியா எங்க இருக்கீங்க என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அப்போது என் நான் கார்ல இருக்கிறேன். எனக்கு நெஞ்சு வலி வந்துருச்சு என்று கோபி பேசிக் கொண்டிருக்கும் போது மயங்கி விடுகிறார். பிறகு பாக்யா போய் எழுப்ப செழியன், எழுந்திருக்கவில்லை. அங்கிருந்து ராதிகா வீட்டிற்கு சென்று காலிங் பெல் அடித்து போன் பண்ணி பார்த்தும் யாரும் வெளியில் வராததால் பாக்கியா காரை எடுத்துக்கொண்டு கோபியை தேடி பார்க்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அப்போது கோபி ஒரு இடத்தில் மயங்கி கிடக்க என்னாச்சு எழுந்திருங்கள் என்று கூப்பிடுகிறார். அவர் எழுந்திருக்கும் நிலையில் இல்லாததால் அவரை ஆம்புலன்ஸில் அழைத்து ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகிறார். பிறகு எழிலுக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை பாக்கியம் சொன்னதும் எழிலும் அங்கு வருகிறார்.

television baakiyalakshmi serial vijay tv

பிறகு கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் ரூமில் இருந்து வெளியே வந்து அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று சொல்கிறார். பிறகு அடுத்த நாள் காலையில் குடும்பத்தினர் எல்லோரும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். என்ன ஆச்சு கோபி? எப்படி இருக்கிறார் என்று பதற்றுகிறார்கள். ஈஸ்வரி நான் போய் என் பையனை பாக்கட்டுமா என்று கேட்க, யாரையும் பார்க்க விடாமல் டாக்டர் தடுக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

பிறகு கோபிக்கு ஹார்ட்டில் பிளாக் இருக்கிறது அதை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்போது ஈஸ்வரி பயந்து புலம்பி கொண்டிருக்கிறார். பாக்கியா ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்கிறார். பிறகு ராதிகாவுக்கு இதை தெரியப்படுத்தனும் என்று நான் முயற்சி செய்தேன், அவங்க போன் ரீச் ஆகல அவங்களிடம் கண்டிப்பாக இதைப் பற்றி சொல்லி ஆகணும் என்று பாக்யா சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+