எழில் வாழ்க்கைக்காக பாக்கியா எடுத்த முக்கிய முடிவு.. கண்கலங்கி அழுத கோபி.. எதிர்பாராத சீரியல் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 2ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கணேஷ் பற்றி எழிலிடம் சொல்ல வேண்டும் என்று பழனிச்சாமி சொல்லியதால் பாக்கியா அதற்கு முயற்சி செய்கிறார்.

அதே நேரத்தில் கோபி கடனில் இருப்பது ஈஸ்வரிக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் ஈஸ்வரி கோபிக்காக எதிர்பார்க்காத செயலை செய்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் கோபி பாக்கியா சொல்வதை கேட்காமல் விட்டுவிட்டதால் பாக்கியா பழனிச்சாமிக்கு போன் போட்டு அவரை வரவழைத்து கணேஷ் மீண்டும் உயிரோடு வந்த விஷயத்தை சொல்கிறார். அதை கேட்டதும் பழனிச்சாமி அதிர்ச்சி அடைகிறார். கூடவே இந்த விஷயத்தை நீங்கள் சம்பந்தப்பட்ட எழில் கிட்ட சொல்றதுதான் நல்லது வேற யாரும் மூலமாகவோ அவருக்கு தெரிய வந்தால் அது ரொம்ப கஷ்டம்.

அதுவே நீங்களே சொல்லி தெரிய வந்தால் இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று உருப்படியான அட்வைஸ் கொடுக்கிறார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை மறைந்திருந்து கோபி பார்க்க, அதை பாக்யாவும் பழனிச்சாமியும் பார்த்து விடுவதால் கோபி எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி போகிறார். அதைத் தொடர்ந்து வீட்டில் இனியா காய்ச்சலில் படுத்து இருக்கிறார்.
அப்போது அங்கு வரும் ராதிகா என்னாச்சு என்று விசாரிக்கிறார். அப்போது சாப்டியா என்று கேட்க அதற்கு இனியா இல்ல அம்மா இன்னும் வரவில்லை என்று சொல்ல ராதிகா சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கிறார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் கோபி இதை பார்த்து என்ன ஆச்சு என்று விசாரித்தபடி பாக்கியா இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறா? இனியாவுக்கு இப்படி காய்ச்சலா இருக்கும்போது அவ ஊரு சுத்த போயிட்டாளா? என்று திட்டுகிறார்.

அந்த நேரத்தில் பாக்கியா வீட்டிற்கு வருகிறார். கோபி திட்டியதால் அதைத் தொடர்ந்து ஈஸ்வரியும் பாக்யாவை திட்டுகிறார். அதற்கு பாக்கியா அத்தை நான் அமிர்தா கிட்ட சொல்லிட்டு தானே போனேன்? என்று சொல்ல, அதற்கு கோபி இனியாவுக்கு இப்படி காய்ச்சலா இருக்கு நீ அந்த லேம்ப்போஸ்டர் கூட ஊர் சுத்திட்டு வரியா? என்ன நடக்குது எல்லாருக்கும் ஒரு நாள் தெரிய வரும் என்று திட்டுகிறார்.( பாக்கியா வீட்டிலேயே இருந்து கொண்டு பசங்களுக்கு ஒரு பிரச்சனை என்று சொன்னபோது கூட அதை காது கொடுத்து கேட்காத கோபி இன்று பாக்கியவையே திட்டுவது தான் வேடிக்கையாக இருக்கிறது).
அதை தொடர்ந்து கோபி வெளியே நிற்கிறார். அப்போது கிரெடிட் கார்டு பணம் கட்டவில்லை என்று பேங்க் ஆபீசர்கள் வந்து திட்டுகிறார்கள். இதை பார்த்த ஈஸ்வரி கோபியை தன்னுடைய ரூமிற்கு கூட்டிட்டு போய் தன்னுடைய நகைகளை அடகு வைத்து கடனை அடைக்குமாறு கொடுக்கிறார். நீ எப்படி இருந்த இப்ப இப்படி கடன்காரனா ஆகிட்டியாடா? என்று அழுது கொண்டிருக்க கோபி தனக்கு அந்த நகைகள் எல்லாம் வேண்டாம் என்று கொடுத்துவிட்டு அவரும் அழுது ஈஸ்வரியை சமாதானம் படுத்துகிறார்.
அதைத்தொடர்ந்து எழிலிடம் பேசுவதற்காக பாக்கியா போகிறார். அப்போது எழில் நிலா கூட சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது இப்போ எப்படி இதை சொல்ல என்று தெரியாமல் தயங்கியபடி வந்து விடுகிறார். இதைப் பற்றி பழனிசாமி இடம் போன் பண்ணி சொல்ல அவர் நீங்க கட்டாயம் சொல்லி தான் ஆக வேண்டும் என்று மீண்டும் அட்வைஸ் கொடுக்க வேறு வழியில்லாமல் மீண்டும் எழிலை பாக்கியா கூப்பிடுகிறார். ஆனாலும் அப்போதும் அவரால் சொல்ல முடியாமல் அனுப்பிவிடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications