பாக்கியலட்சுமி: கோபி பற்றி எழிலுக்கு தெரிய வந்த உண்மை.. புரொடியூசர் சொன்ன வார்த்தை.. ராதிகா என்ட்ரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் எட்டாம் தேதிக்கான எபிசோடில் கோபியின் நண்பர்தான் ப்ரோடுயூசர் என்ற ரகசியம் எழிலுக்கு தெரிய வருகிறது. அதோடு பாக்கியா ஃபங்ஷனுக்கு வரக்கூடாது என்று கோபி மிரட்டுகிறார். இதற்கு எழில் என்ன முடிவு எடுத்தார் என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் எழில் புரொடியூசரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது படபூஜை நடக்கணும்னா உங்க அம்மா இந்த பங்ஷனில் கலந்து கொள்ள கூடாது என்று புரொடியூசர் சொல்ல, எழில் அதிர்ச்சி அடைகிறார். எப்படி சார் எங்க அம்மா வராமல் முடியும் என்று எழில் கேட்க, அந்த நேரத்தில் கோபி வந்து என் மகன் என்ன சொல்றான் என்று புரொடியூசர் இடம் கேட்க புரொடியூசர் கோபியை பார்த்து சிரிக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

என்ன நடக்கிறது என்று தெரியாமல் எழில் திணறிக் கொண்டிருக்கும் போது கோபி ஆரம்பத்தில் இருந்து உனக்கு வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்தது எல்லாம் நான்தான். ஆனால் நான் சொல்லித்தான் இப்போ என் நண்பன் ப்ரொடியூசர் உங்க அம்மா வரக்கூடாது என்று சொல்றான் என்று எல்லா விஷயத்தையும் சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு எழில் அதிர்ச்சியில் இருக்கிறார்.

மீண்டும் ப்ரொடியூசரிடம் எழில் கெஞ்ச அவர் ஒரே முடிவாக உங்க அம்மா வந்தா பங்க்ஷன் நடக்காது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அப்போது கோபி எல்லா நேரமும் எமோஷனலானா எப்படி? ஏதாவது ஒரு முடிவு எடுக்கணும்ல என்று சொல்லிவிட்டு போக பிறகு யோசித்த எழில் ப்ரொடியூசரிடம் வந்து நான் நல்லா யோசிச்சுட்டேன் எங்க அம்மா இல்லாம இந்த பூஜை பண்ண எனக்கு விருப்பமில்லை இதை நிறுத்திடுங்க என்று சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதற்கு ப்ரொடியூசர் நீ எனக்கு கையெழுத்து போட்டு இருக்க கண்டிப்பா இந்த படத்தை முடிச்சு கொடுக்கணும். இல்லன்னா போலீஸ் ஸ்டேஷன் என்று உன் வாழ்க்கையை இல்லாமல் போய்விடும் என்று மிரட்ட எழில் பாக்கியா பேசியதை எல்லாம் மொட்டை மாடியில் நின்று நினைத்து பார்த்து கதறி அழுகிறார். அந்த நேரத்தில் ராதிகா பங்ஷனுக்கு வர இனியா, ஜெனியை நலம் விசாரிக்கிறார்.

அப்போது கோபி அவரை உள்ளே அழைத்து செல்கிறார். அடுத்த கட்டத்தில் மறுபடியும் எழில் புரொடியூசரை சந்தித்து பேச அதற்கு அவர் எதுவாக இருந்தாலும் உங்க அப்பா கிட்ட பேசிக்கொள் என்று சொல்லிவிடுகிறார். உடனே எழில் கோபி இடம் கெஞ்சி அழுது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அதற்கு கோபி உன்னோட நிலைமை புரியுது. ஆனா என்னோட சூழ்நிலையை புரிந்து கொள்.

television baakiyalakshmi serial vijay tv

நான் உனக்கு ஒரு பாதையை அமைத்து கொடுத்து இருக்கேன். அதில் போய் நீ பொழச்சிக்க.. நான் இப்படித்தானே எங்க அப்பாவுக்கு கொல்லி வைக்கணும்னு சொல்லி கெஞ்சினேன். ஆனா யாராவது விட்டீங்களா? நீயும் உங்க அம்மா பக்கம் தானே இருந்தா? இப்போ உனக்கு வேற ஆப்ஷன் இல்ல. நான் சொன்ன மாதிரி உங்க அம்மா இல்லாம பங்கஷன் நடக்கணும் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

இறுதியாக பாக்கியா ஃபங்ஷனுக்கு வருகிறார். கோயிலுக்கு போயிட்டு வந்தேன் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வா உள்ளே போகலாம் என்று கூப்பிட எழில் நான் என்ன சொன்னாலும் நீ கேட்பதானம்மா... என்று சொல்ல, பாக்கியா ஆமாம் என்ன ஆச்சு என்று கேட்க, நீ உள்ளே வராத போயிடு.. என்று சொல்ல இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சியில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

television baakiyalakshmi serial vijay tv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+