ஜெனிக்கு வீடியோவை அனுப்பி வைத்த மாலினி..கடும் கோபத்தில் ஈஸ்வரி.. பிரச்சனையில் பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அக்டோபர் 27ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் செழியன் ஃபோனை எடுக்காததால் மாலினி ஜெனிக்கு வீடியோ ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.

அதே நேரத்தில் ராதிகா கோபி வீட்டை விட்டு போனதை பற்றி போன் பண்ணி பேச அதற்கு ஈஸ்வரி அவமானப்படுத்துகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்யாவுக்கு கோவிலில் இருந்து தர்மகர்த்தா போன் செய்து கேட்டரிங் ஆர்டர் குறித்து பேச அதை கேட்டதும் பாக்யா சந்தோஷம் அடைகிறார். கூடவே உங்களுடைய சமையல் குறித்து ஒருவர் ரெக்கமெண்ட் செய்தார் என்று அவர்கள் சொல்ல அது யார் என்று தெரிந்து கொள்வதற்காக பாக்யா ஆர்வமாக நான் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்கிறார்.
அடுத்து செழியன் குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க அப்போது ஜெனி இப்பல்லாம் என்னை கொஞ்ச மாட்டேங்குற என்று சொல்ல அதற்கு செழியன் கொஞ்சிட்டா போச்சு என்று கொஞ்சி கொண்டிருக்கும் போது மாலினி போன் செய்ய அதை எடுக்காமல் இருக்கிறார். பிறகு மாலினி ஆடியோ மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.

அதை செழியன் பார்ப்பதற்காக குழந்தையை தூங்க வைக்க சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே போக அப்போது அங்கு பாக்யா வர பாக்யாவிடம் சமாளித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப பார்க்கும்போது பாக்கியா செழியனிடம் இனிமேல் உன்னுடைய வாழ்க்கையில் அந்த மாலினி எக்காரணம் கொண்டு வரக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
அடுத்த நாள் காலையில் மாலினி செழியனுக்கு போன் போட்டு குட் மார்னிங் என்று சொல்லிவிட்டு அதோடு நான் தவறுதலாக ஜெனிக்கு ஒரு வீடியோ அனுப்பிவிட்டேன் என்று சொல்லச் செழியன் அதிர்ச்சி அடைகிறார். அதனால் பதறி அடித்துக் கொண்டு ரூமுக்கு போகும்போது அங்கே ஜெனி கோபமாக இருக்கிறார். அதை பார்த்த செழியன் என்னவென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது, நீ ஏன் குழந்தை போட்டோவை சோசியல் மீடியாவில் போட்ட என்று ஜெனி கேட்க அதைக் கேட்டு செழியன் நிம்மதியாகி, அது கை தெரியாமல் பட்டு போட்டுட்டேன் இப்போ டெலிட் பண்றேன் என்று சொல்கிறார்.
பிறகு மாலினி ஏதோ ஒரு வீடியோ அனுப்பி இருக்காங்க என்று ஜெனி அதை ஓபன் செய்து பார்க்க அப்போது செழியன் ஹை லெவலில் டென்ஷனாக இருக்கிறார். ஆனால் அங்கு அது வெறும் ரைம்ஸ் வீடியோவாக இருக்கிறது. அது தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விடுகிறார். அதைத் தொடர்ந்து ராதிகா கோபிக்கு போன் போட்டு எங்களை பத்தி உங்களுக்கு அக்கறையே இல்லை. அம்மா கூப்பிட்டதும் பின்னாலேயே போய்ட்டீங்க என்று திட்ட அப்போது அங்கு வரும் ஈஸ்வரி ஃபோனை பிடுங்கி நீ அவனை சந்தோஷமா இருக்க விட மாட்டியா? என்று திரட்டி வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications