பாக்கியலட்சுமி: அமிர்தா சொன்ன வார்த்தை! கண் கலங்கி அழுத பாக்யா.. கோபி செய்த உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 28ஆம் தேதிக்கான எபிசோடில் எழில் படம் எடுப்பதற்கு ப்ரொடியூசர் ஓகே சொல்லி விட்டதால் சந்தோஷப்படுகிறார். ஆனால் அமிர்தா சொன்ன வார்த்தையை கேட்டு பாக்கியா அழுது கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா ரெஸ்டாரண்டில் இருக்க பழனிசாமி சாப்பிட வருகிறார். பாக்யா உடன் பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போது பாக்யா டிபன் எப்படி இருக்கு சார் என்று கேட்க சூப்பரா இருக்கு என்று பாராட்டி விட்டு கஸ்டமர் குறைஞ்சிட்டாங்க போலவே என்று கேட்க, ஆமாம் சார் மூன்று பேர் தான் வந்துருக்காங்க என்று பாக்கியா சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

முதலில் இப்படித்தானே இருந்தது ஆனா பிக்கப் பண்ணிட்டீங்க இல்ல அது மாதிரி பண்ணிடுவீங்க என்று பழனிச்சாமி ஆறுதல் சொல்கிறார். அதற்கு பாக்கியா முன்னாடி இந்த மாதிரி கெட்ட பேரு கிடையாது. ஆனால் இப்போ எப்படி இதிலிருந்து வெளியே வரப் போறேன்னு எனக்கே தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது பழனிச்சாமிக்கு ஒரு போன் வருகிறது. உடனே நான் துபாய் போக வேண்டும் வர இரண்டு மாதம் ஆகும் என்று சொல்ல அதற்கு பாக்கியா என்ன சார் எதுவும் பிசினஸ் விஷயமா என்று கேட்டுவிட்டு சோகமாக மாறுகிறார்.

ஆனாலும் போயிட்டு வாங்க சார் என்று அனுப்பி வைக்கிறார். பிறகு செல்வி சார் போனது உனக்கு கஷ்டமா இருக்கா என்று கேட்க, எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவரிடம் தான் சொல்லுவேன் ஆனால் நமக்காக அவர் அவருடைய வேலையை பார்க்க வேண்டாம் என்று சொல்லக்கூடாது இல்ல. அவர் போயிட்டு வரட்டும் என்று சொல்கிறார். அடுத்ததாக கோபி சொன்ன ப்ரொடியூசரை எழில் வந்து பார்த்து அவரிடம் கதையை சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

கதை சொல்லிய பிறகு உங்க மேல எதுக்கு தடை போட்டிருந்தாங்க இதுக்கு முன்னாடி சொன்ன கதை ஏன் உங்களால் பண்ண முடியவில்லை என்று புரொடியூசர் கேள்வி கேட்க இதுக்கு முன்னாடி ஒரு புரொடியூசர் பாக்கும்போது சில கரெக்ஷன் சொன்னாரு. ஆனா அதை நான் பண்ணிட்டேன். அதை எடுத்துட்டு போய் சரியான டைம்ல என்னால கொடுக்க முடியல. பேமிலி பிரச்சனை ஆயிடுச்சு என்று சொல்கிறார்.

அதற்கு ப்ரொடியூசர் நடந்தது எப்படி எல்லாம் போகட்டும். ஆனால் இந்த ஸ்கிரிப்டுக்காகவும் இதுக்கு முன்னாடி எடுத்த படத்துக்காகவும் நான் யோசிக்கிறேன் என்று பட வாய்ப்பு கொடுக்க எழில் சந்தோஷப்படுகிறார். பிறகு சந்தோஷமாக வீட்டுக்கு வந்து எழில் அமிர்தாவை தூக்கி சுற்றுகிறார். உடனே நிலா என்னையும் தூக்குங்கப்பா என்று சொல்ல, நிலா பாப்பாவையும் தூக்கி சுற்றுகிறார்.

அமிர்தா என்ன விஷயம் என்று கேட்க எனக்கு படம் வாய்ப்பு கிடைச்சிருக்கு என்று சொன்னதும் அமிர்தா கண்கலங்குகிறார். பிறகு எழில் கண்டிப்பா நம்ம நிலைமை மாறும். நீயும் நிலாவும் இனிமே கஷ்டப்பட வேண்டாம் நம்ம குடும்பம் சந்தோஷமா இருப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அமிர்தா இதையெல்லாம் அம்மா கிட்ட சொல்லிட்டீங்களா என்று கேட்க, வீட்டுக்கு வந்துட்டு போய் சொல்லலாம்னு இருந்தேன் என்று எழில் சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அவங்க ஏற்கனவே டென்ஷன்ல இருக்காங்க இந்த விஷயத்தை சொன்னா சந்தோஷப்படுவாங்க என்று சொன்னதும் சரி நான் பிரஷ் ஆகிட்டு வரேன் ரெடியா இரு அம்மா கிட்ட போய் சொல்லிட்டு வரலாம் என்று சொல்கிறார். பிறகு மூவரும் ரெஸ்டாரண்டுக்கு வர பாக்கியா இருப்பவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டே இருக்கிறார். என்னம்மா என்ன ஆச்சு நீங்க பரிமாறிட்டு இருக்கீங்க என்று எழில் கேட்க செல்வி சிலர் வேலையை விட்டு போயிட்டாங்க என்று விஷயத்தை சொல்கிறார்.

அதற்கு சும்மா இருக்க மாட்டியா என்று செல்வியிடம் திட்டிவிட்டு எழிலிடம் என்ன விஷயம் நீ சொல்லு என கேட்க, எழில் தனக்கு பட வாய்ப்பு கிடைத்த விஷயத்தை சொன்னதும் பாக்கியா ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். பிறகு அமிர்தாவும் எழிலும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அமிர்தா நானும் நாளையிலிருந்து ஹோட்டலுக்கு வரேன் வீட்டில் சும்மா தானே இருக்கேன். நிலா பாப்பாவை கூட்டிட்டு கடைக்கு வரேன் என்று சொல்ல, எழில் நீ வீட்டில் இரு என்று சொல்கிறார். அதற்கு அமிர்தா இங்கே வந்தா அம்மாவுக்கும் உதவியா இருக்கும் பாப்பாவும் நானும் நல்ல சாப்பாடு சாப்பிடுவோம் என்று சொல்ல இதைக் கேட்டு பாக்கியா அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+