ராதிகாவின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஈஸ்வரி.. போலீஸுடன் வரும் மயூவின் பாட்டி.. அதிர்ந்த கோபி
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் கழுத்தை பிடித்து ஈஸ்வரி வெளியே தள்ளும் காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வாரம் இந்த சீரியலில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெரும் வரவேற்புள்ளது. அதிலும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோபி குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடப்பார்.

அவரை பாக்யா மீட்டு ராதிகாவின் வீட்டில் விட்டுச் செல்வார். அப்போது அவர் செய்யும் அட்வைஸ் ராதிகாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும். மறுநாள் போதை தெளிந்த போது ராதிகாவும் மயூவும் பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு வெளியே புறப்படுவார்கள்.
அப்போது எதுவுமே நடக்காதது போல் கோபி வந்து என்னாச்சி என கேட்பார். இதனால் ராதிகா கோபத்தின் உச்சத்திற்கு செல்வார். கோபி குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்தும் ராதிகா கேட்கமாட்டார். மேலும் பாக்யாவின் பெயரை மனைவி என கோபி போனில் சேமித்து வைத்ததும் பெரும் கோபத்திற்கு ஆளாகிறார் ராதிகா.
அப்போது கேப் புக் செய்துவிட்டு வெளியே போகும் போது ராதிகாவிடம் காலைபிடித்து கொண்டு கோபி கெஞ்சுவார். இந்த காட்சிகளை ஊரே வேடிக்கை பார்க்கும். அருகே உள்ள கோபியின் தாய் ஈஸ்வரி பார்த்துவிட்டு , மகனை வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். இதை மறைந்திருந்து கேட்கும் ராதிகா நடந்தவற்றை தனது தாயிடம் கூறுகிறார். உடனே அவர் நீயும் அவருடன் அவர் வீட்டுக்கு சென்றுவிடு என ஐடியா கொடுக்கிறார்.
அன்று முதல் பாக்யா வீட்டில் ராதிகா தங்குவதால் நிறைய பிரச்சினை நடக்கிறது. இந்த வாரத்திற்கான ப்ரோமா வெளியாகியுள்ளது. அதில் ராதிகா ஈஸ்வரிக்கு காபி போட்டு வந்து கொடுக்கும் போது கோபமடைந்த ஈஸ்வரி காபியை தட்டி விடுகிறார். மேலும் ராதிகாவின் கழுத்தை பிடித்து வீட்டை விட்டு தள்ளுகிறார். அது குறித்து கோபியிடம் கூறுகிறார் ராதிகா.
உடனே அவர் ராதிகாவை வீட்டுக்குள் அழைத்து செல்கிறார். அந்த நேரம் பார்த்து ராதிகாவின் அம்மா போலீஸுடன் வந்துவிடுகிறார். அவர் ஈஸ்வரி குறித்து ராதிகாவின் அம்மா புகார் கூறுகிறார். அதற்கு பெண் போலீஸார் தொட்டு தாலி கட்டிய பிறகு அவர் கோபி இருக்கும் இடத்தில் இருப்பதுதான் நியாயம் என கூறுகிறார். இதனால் ராதிகா மீண்டும் வீட்டிற்குள் செல்கிறார். அப்போது கடுப்பாகிறார் ஈஸ்வரி. இனி இந்த வாரம் என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications