பாக்கியலட்சுமி: மீண்டும் நெஞ்சு வலியில் கோபி.. ராதிகாவிற்காக இனியாவை அறைந்த பாக்யா! திடீர் மாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 19ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகாவிடம் இனியா பேசிய வார்த்தையை கேட்டு பாக்கியா கோபத்தில் அடிக்கிறார். அதோடு கோபிக்கு மீண்டும் நெஞ்சுவலி வருகிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் சில மாதங்களாகவே வந்த கதையே ரிப்பீட் மோடில் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே கோபி பாக்கியாவிடம் வீட்டை விற்ற பிறகும் சாக்கு போக்கு சொல்லி வந்து கொண்டே இருக்கிறார். இப்போது மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி வந்ததால் ஈஸ்வரி இனியா செழியன் மூன்று பேரும் கோபி நம்மோடு தான் இருப்பார் என்று கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றனர்.

அதுபோல கோபிக்காக ராதிகாவும் பாக்கியா வீட்டிற்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார். இது இனியாவிற்கும் ஈஸ்வரிக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. ஈஸ்வரி எப்படியாவது பாக்கியாவையும் கோபியையும் மீண்டும் சேர்த்து வைத்துவிடலாம் என்று பிளான் போட்டு கொண்டு இருக்கிறார்.
அதற்காகவே ராதிகாவை விவாகரத்து செய்யும்படி சில நாட்களுக்கு முன்பு சொல்லி இருந்தார். அதுபோல இன்று இனியாவும் எங்க அப்பாவை டைவர்ஸ் பண்ணிடுங்க என்று ராதிகாவிடம் சொல்கிறார். இதனால் ராதிகா இனி இந்த தெருவில் இருக்க வேண்டாம் என்று வீட்டை விட்டு காலி பண்ணி போய் விடுவதாக ஹவுஸ் ஓனருக்கு போன் செய்து பேசுகிறார்.

உடனே ஹவுஸ் ஓனர் கோபிக்கு போன் போட்டு நீங்க இப்படி திடீர்னு வீட்டை காலி பண்ணி போறதா சொன்னா எப்படி என்னால் எல்லாம் அரேஞ்ச் பண்ண முடியும். நீங்க காலிபண்ண போறதா இருந்தா அதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே என்கிட்ட சொல்லனுமே என்று வாக்குவாதம் செய்ததும் கோபி நான் ராதிகாவிடம் பேசுகிறேன் என்று சொல்கிறார்.
பிறகு ராதிகாவுக்கு போன் போட்டு எதற்காக வீட்டை காலி பண்ண போற என்று கேட்க, ராதிகா எதுவும் சொல்லாததால் நீ மீண்டும் வீட்டுக்கு வா என்று சொல்கிறார். இப்படியான நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் வீட்டிற்கு வந்த ராதிகாவிடம் கோபி எதற்காக நீ இப்போ இந்த வீட்ட விட்டு போக போறேன்னு சொல்லுற என்று கேட்கிறார்.

அதற்கு ராதிகா நீங்களே இல்லன்னு ஆயிடுச்சு அப்புறம் இங்க இருந்து என்னால் ஒவ்வொரு நாளும் அவமானப்பட முடியாது. நான் போறேன் என்று சொல்ல, நான் இங்கு கொஞ்ச நாள் நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா? என்று கோபி கோபப்பட, அதற்கு ராதிகா நீங்க எப்பவாவது என்னையும் மயூவையும் நெனச்சு பார்த்தீங்களா என்று கேட்கிறார்.
உடனே கோபி நெஞ்சு வலியில் துடிக்கிறார். பிறகு ஈஸ்வரி செழியன் எல்லோரும் கோபியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகின்றனர். அப்போது இனியா நீங்க எங்க அப்பாவை நிம்மதியா இருக்க விட மாட்டீங்கல்ல.. இனிமே நீங்க எப்பவுமே இந்த வீட்டு பக்கம் வராதீங்க என்று கோபமாக திட்ட, அதற்கு பாக்கியா சும்மா இரு இனியா நீ இப்படி பேசாத என்று சொல்ல, நான் இப்படித்தான் பேசுவேன் என்று மீண்டும் இனியா சொன்னதும் பாக்கியா படார் என்று கன்னத்தில் அடித்து விடுகிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இனி ராதிகா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications